For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

தினேஷ் கார்த்திக்கை விட்ராதீங்க.. உலககோப்பையில் கட்டாயம் அணியில் இடம் கொடுங்கள்... இது மைக் ஹஸ்சி

Recommended Video

உலகக்கோப்பைக்கான இந்திய அணியை அறிவித்தார் மைக் ஹஸ்சி- வீடியோ

கான்பெரா:உலககோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய அணியில் தினேஷ் கார்த்திக் இடம் பெற வேண்டும் என்று ஆஸ்திரேலியா முன்னாள் கிரிக்கெட் வீரர் மைக் ஹஸ்சி விருப்பம் தெரிவித்துள்ளார்.

கிரிக்கெட் விளையாட்டில் முக்கிய தொடராக அனைவராலும் கருதப்படும் உலகக்கோப்பை தொடருக்கு இன்றும் 3 மாதங்களே உள்ளது. அதனை எதிர்கொள்ளும் விதமாகம், வீரர்களை தயார்படுத்தும் விதமாகவும் ஒவ்வொரு அணியும் உத்தேசமாக 15பேர் கொண்ட வீரர்களின் பட்டியலை வெளியிட்டு வருகின்றனர்.

இந் நிலையில், ஆஸ்திரேலிய முன்னாள் கிரிக்கெட் வீரரும், சென்னை அணியும் முன்னாள் வீரருமான மைக் ஹஸ்சி இந்திய அணியில் பலம் வாய்ந்த 15 வீரர்கள் கொண்ட இந்திய அணி இது தான் என்று ஒரு பட்டியலை வெளியிட்டுள்ளார்.

ரோகித், தவான், ராகுல்

ரோகித், தவான், ராகுல்

அந்த வீரர்களின் பட்டியலில் முக்கிய வீரர்களான ரோகித் சர்மா, ஷிகார் தவான், கேல் ராகுல் இடம்பெற்றுள்ளனர். ராகுல் மீது மிகுந்த நம்பிக்கையை வெளிப்படுத்தி இருக்கும் மைக் ஹஸ்சி, அவரை துவக்க ஆட்டக்காரராக களமிறங்கி கலக்குவார் என்று விருப்பம் தெரிவித்துள்ளார்.

அம்பத்தி ராயுடு

அம்பத்தி ராயுடு

3 இடங்களை தொடர்ந்து, 4வது இடத்திற்கு தடுமாறி வரும் இந்திய அணிக்கு அம்பத்தி ராயுடு சரியாக இருப்பர் என்று ஹஸ்சி கணித்துள்ளார். சென்னை அணிக்காக ராயுடு சிறப்பாக ஆடியதை தான் நன்கு கவனித்ததாக அவர் கூறினார்.

தோனி, தினேஷ் கார்த்திக்

தோனி, தினேஷ் கார்த்திக்

பிசிசிஐ க்கு பெரும் தலைவலியாக இருப்பது , உலககோப்பையில் தினேஷ் கார்த்திக் மற்றும் ரிஷப் பந்த் இருவரில் யாரை தேர்வு செய்வது என்பது தான். இருப்பினும் ஹஸ்சி, தினேஷ் கார்த்திக்கிற்கு தமது முழு ஆதரவையும் அளித்துள்ளார். அவரின் அனுபவம் மற்றும் வேகம் நிச்சயம் இந்திய அணிக்கு உதவும் என்றும் ஹஸ்சி கூறியிருக்கிறார். ஆல்ரவுண்டர் யார் என்ற வீரர்கள் வரிசையில் , ஹர்திக் பாண்டியா தி பெஸ்ட் என்றும் அவர்க் கூறியிருக்கிறார்.

ஸ்பின்னர்கள்

ஸ்பின்னர்கள்

இந்திய அணிக்கு சஹால் மற்றும் குல்தீப் ஆகியோரின் பங்களிப்பு மறக்க முடியாத ஒன்று. பல தொடர்களில் அவர்களின் ஆட்டம் மற்றும் அர்ப்பணிப்பு இந்திய அணிக்கு வெற்றியை ஈட்டி தந்திருக்கிறது. அவர்களுக்கு மாற்று என்ற ஒன்றே இல்லை என்று ஹஸ்சி கூறியிருக்கிறார். ஜடேஜா பந்துவீச்சில் மட்டுமல்ல, பீல்டிங் மற்றும் பேட்டிங் இரண்டிலும் உதவியாக இருப்பர் என்பதும் ஹஸ்சியின் கருத்து.

சமி, பும்ரா,புவனேஸ்வர்

சமி, பும்ரா,புவனேஸ்வர்

பும்ரா பந்துவீச்சு பற்றி அனைவரும் அறிந்ததே. புவனேஸ்வர் காயம் காரணமாக அவதிப்பட்டு வந்தாலும், தற்போது மீண்டு வந்து சிறப்பாக செயல்படுகிறார். சமி வேகம் நாளுக்கு நாள் சீராக இருக்கிறது. விக்கெடுகள் வீழ்த்துவதிலும் கவனம் செலுத்துகிறார். ஆதலால் அவர்களுக்கு ஆதரவு என்று ஹஸ்சி கூறியிருக்கிறார்.

Story first published: Monday, March 4, 2019, 10:10 [IST]
Other articles published on Mar 4, 2019
English summary
ICC World Cup 2019, Mike Hussey includes Karthik and Rahul in his World Cup squad.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X