தலைசிறந்த 3 வீரர்களுக்கு எதிராக ஆடுகிறோம்.. புகழ்ந்து தள்ளிய ஆஸி. கோச்! 3 வீரர்கள் யாரா இருக்கும்?
அடிலெய்டு: ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் வெற்றி பெற்ற இந்திய அணி தொடரை 1-1 என சமன் செய்துள்ளது.
இந்திய அணியின் வெற்றி குறித்து பேசிய ஆஸ்திரேலிய அணியின் பயிற்சியாளர் ஜஸ்டின் லாங்கர், தாங்கள் கிரிக்கெட்டின் மூன்று தலைசிறந்த வீரர்களுக்கு எதிராக நாங்கள் ஆடி வருகிறோம் என குறிப்பிட்டார்.

கோலி, தோனி கலக்கல்
இந்த போட்டியில் இந்தியா 299 ரன்கள் என்ற பெரிய இலக்கை எளிதாக கடந்து ஆறு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த போட்டியில் கோலி 104, தோனி 55 ரன்கள் அடித்து அணியின் வெற்றிக்கு காரணமாக இருந்தனர்.

சிறந்த மூன்று வீரர்கள்
இந்திய அணி குறித்து ஆஸ்திரேலிய அணியின் பயிற்சியாளர் ஜஸ்டின் லாங்கர் கூறுகையில், "நாங்கள் சர்வதேச ஒருநாள் போட்டிகளில் எந்த காலத்திலும் தலைசிறந்த மூன்று வீரர்களுக்கு எதிராக அடி வருகிறோம்" என குறிப்பிட்டார்.

மூன்றாவது வீரர் யார்?
லாங்கர் குறிப்பிட்ட மூன்று வீரர்களில் இருவர் கோலி மற்றும் தோனி. அந்த மூன்றாவது வீரர் ரோஹித் சர்மா. ரோஹித் சர்மா முதல் போட்டியில் சதம் அடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

கலக்கல் ஆட்டம்
கோலி இரண்டாவது போட்டியில் அடித்த சதம் அவரது 39வது ஒருநாள் போட்டி சதம் ஆகும். ரோஹித் முதல் போட்டியில் அடித்த சதம் அவரது 22வது சதம் ஆகும். அதே போல தோனி அடுத்தடுத்து இரண்டு அரைசதங்கள் அடித்து, நீண்ட காலம் கழித்து பேட்டிங்கில் தன் பார்முக்கு திரும்பியுள்ளார்.


Click it and Unblock the Notifications