Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

WTC Final 2023: எத்தனை மணிக்கு ஆட்டம் தொடங்கும்? இன்னிங்ஸ் பிரேக் எப்போது? எப்படி பார்க்கலாம்?விவரம்

லண்டன்: இந்தியா - ஆஸ்திரேலியா இடையிலான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப்போட்டி எப்போது தொடங்கும், எப்போது உணவு இடைவேளை விடப்படும், எப்போது நிறைவடையும், எந்த தொலைக்காட்சியில் பார்க்கலாம் என்பது குறித்து காணலாம்.

ஐசிசி சார்பாக உலக டெஸ்ட் கிரிக்கெட் சாம்பியன்ஷிப் தொடர் 2019ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது. இரு ஆண்டுகள் நடக்கும் டெஸ்ட் போட்டிகளில் அதிக வெற்றிகளை குவித்து புள்ளிப்பட்டியலில் முதல் இரு இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிப்போட்டிக்கு தகுதி பெறும். அந்த வகையில், 2021ம் ஆண்டு நடைபெற்ற முதல் டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் இந்தியாவை வீழ்த்தி நியூசிலாந்து அணி கோப்பையை கைப்பற்றியது.

India vs Australia Match of WTC Final 2023: when and Where to watch on TV and online Live Streaming

இதைத் தொடர்ந்து 2-வது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடருக்குரிய காலக்கட்டமாக 2021 முதல் 2023ம் ஆண்டு வரை நிர்ணயிக்கப்பட்டு இருந்தது. இதன் முடிவில் புள்ளிப்பட்டியலில் ஆஸ்திரேலிய அணி முதலிடத்திலும், இந்திய அணி இரண்டாம் இடத்திலும் நிறைவு செய்தன. இந்த நிலையில் இந்தியா- ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான 2வது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி இங்கிலாந்து தலைநகர் லண்டனில் உள்ள ஓவல் மைதானத்தில் இன்று தொடங்குகிறது.

இதற்காக இரு அணி வீரர்களும் ஒரு வாரத்திற்கு மேலாக தீவிர பயிற்சி மேற்கொண்டனர். இவ்விரு அணிகளும் டெஸ்ட் கிரிக்கெட்டில் பொதுவான மைதானத்தில் மோதுவது இதுவே முதல் முறையாகும். ஓவல் மைதானத்தை பொறுத்தவரை பிட்சில் கொஞ்சம் பவுன்ஸ் அதிகமாக இருப்பதாக சொல்லப்பட்டு வருகிறது. இதனை பிட்ச் தயாரிப்பாளரே கூறியதாக ரவி சாஸ்திரி தெரிவித்துள்ளார். இதனால் வேகப்பந்துவீச்சாளர்களுக்கு சாதகமாக இருக்கும் என்று பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் ஆட்டம் எத்தனை மணிக்கு தொடங்கும், எவ்வளவு நேரம் வரை நடைபெறும், எந்த தொலைக்காட்சியில் ரசிகர்களால் பார்க்க முடியும் என்பதை பார்க்கலாம். ஆஸ்திரேலியா - இந்தியா அணிகளுக்கு இடையிலான இந்தப் போட்டி இந்திய நேரப்படி மதியம் 2.30 மணிக்கு டாஸ் போடப்பட்டு, ஆட்டம் 3 மணிக்கு தொடங்கவுள்ளது. அதனைத் தொடர்ந்து உணவு இடைவேளை மாலை 5 மணிக்கு விடப்படும் என்றும், தேநீர் இடைவேளை 7.40 மணிக்கு விடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதன் பின்னர் 10 மணிக்கு முதல் நாளின் ஆட்டம் முடிவடையும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தப் போட்டியை ஓடிடியில் ஹாட்ஸ்டாரிலும், தொலைக்காட்சிகளில் ஸ்டார் குரூப் நெட்வொர்க்களிலும் பார்க்கலாம். அதேபோல் தூர்தர்ஷனிலும் இந்தியா - ஆஸ்திரேலியா இடையிலான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி ஒளிபரப்பப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Story first published: Wednesday, June 7, 2023, 8:10 [IST]
Other articles published on Jun 7, 2023
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+