Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

தோல்விக்கு இதுதான் காரணம்.. மொத்தமாக அடுக்கிய ராகுல் டிராவிட்.. பயிற்சியாளர் பொறுப்பில் தொடர்வாரா?

அகமதாபாத்: இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக தொடர்வதற்கு வாய்ப்புள்ளதா என்ற கேள்விக்கு ராகுல் டிராவிட் பதில் அளித்துள்ளார்.

ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் இந்திய அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்துள்ளது. இந்த போட்டியில் முதல் பேட்டிங் ஆடிய இந்திய அணி 50 ஓவர்களில் 240 ரன்கள் மட்டுமே சேர்த்து ஆல் அவுட்டாகியது. இதையடுத்து 241 ரன்கள் என்ற எளிய இலக்கை விரட்டிய ஆஸ்திரேலியா அணி 43 ஓவர்களில் எட்டி, 6வது முறையாக உலகக்கோப்பையை வென்று சாதனை படைத்தது.

INDIA vs AUSTRALIA: Rahul Dravid spoke about the reason of loss and his future as a Head coach of India


இந்த தோல்வியால் இந்திய அணி வீரர்கள் மைதானத்திலேயே கண்ணீர் சிந்தினர். இதனிடையே உலகக்கோப்பை இறுதிப்போட்டியுடன் இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட் உடனான ஒப்பந்தம் முடிவுக்கு வந்துள்ளது. இதனால் பயிற்சியாளர் பொறுப்பில் ராகுல் டிராவிட் தொடர்வாரா அல்லது வேறு ஏதும் திட்டத்துடன் இருக்கிறாரா என்று ரசிகர்களிடையே விவாதம் எழுந்துள்ளது. 2 ஆண்டுகள் ஒப்பந்தத்தின் கீழ் 2021ஆம் ஆண்டு நவம்பரில் தலைமை பயிற்சியாளர் பொறுப்பை ராகுல் டிராவிட் ஏற்றுக் கொண்ட ஏற்றுக் கொண்டார்.

இதுகுறித்து இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட் பேசுகையில், பயிற்சியாளர் ஒப்பந்தத்தை நீட்டிப்பதா அல்லது பதவியில் இருந்து விலகுவதா என்பது குறித்து நான் இதுவரை யோசிக்கவில்லை. இப்போது தான் உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் தோல்வியடைந்துள்ளோம். அதுகுறித்து எதையும் யோசிக்க முடியவில்லை. நேரம் கிடைக்கும் போது அதுபற்றி சிந்திப்பேன். இதுவரை உலகக்கோப்பை தொடரில் மட்டுமே எங்களின் கவனம் இருந்தது. எதிர்காலத்தில் என்ன நடக்கும் என்பது பற்றி தெரியவில்லை.

எனது பணியை நானே அமர்ந்து யோசிக்க விரும்பவில்லை. இந்திய அணி வீரர்களுடன் பணியாற்றியது பெருமைமிக்க தருணம். டி20 உலகக்கோப்பை அரையிறுதி, உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி மற்றும் உலகக்கோப்பை இறுதிப்போட்டி ஆகியவற்றில் அடுத்தடுத்து தோல்வியடைந்ததற்கு ஒரேயொரு காரணம் மட்டும் இல்லை. இந்த மூன்று தோல்விகளில் இருந்தும் நான் நிர்வாகியாக இருந்துள்ளேன். என்னை பொறுத்தவரை 3 போட்டிகளிலும் நாங்கள் சரியாக விளையாடவில்லை.

அடிலெய்டில் நடந்த டி20 உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் எங்களின் செயல்பாடுகள் எதிர்பார்த்த அளவிற்கு இல்லை. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் முதல் நாளில் சரியாக செயல்படவில்லை. இன்றைய ஆட்டத்தில் 3 விக்கெட்டுகளை வீழ்த்திய பின் சரியாக பவுலிங் செய்யவில்லை. அதேபோல் பேட்டிங்கிலும் சிறப்பாக விளையாடவில்லை. அதனால் தோல்விக்கு ஒரு காரணத்தை கூற முடியாது. ஆஸ்திரேலியா வீரர்கள் சிறப்பாக விளையாடினார்கள் என்று தெரிவித்தார்.
Story first published: Monday, November 20, 2023, 11:31 [IST]
Other articles published on Nov 20, 2023
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+