For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

ரோஹித் நீக்க விவகாரம்.. புது ட்விஸ்ட்.. தந்தைக்கு கொரோனா பாதிப்பு.. பரபர தகவல்

மும்பை : ரோஹித் சர்மா தந்தைக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டதால் தான் அவர் இந்தியா திரும்பினார் என கூறப்படுகிறது.

ரோஹித் சர்மா ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடரின் முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் இருந்து நீக்கப்பட இருக்கிறார்.

அவர் ஏன் ஐபிஎல் முடிந்து ஆஸ்திரேலியா செல்லாமல் இந்தியா வந்தார் என்பது குறித்து பல்வேறு வதந்திகள் வலம் வருகின்றன.

தந்தைக்கு கொரோனா பாதிப்பு

தந்தைக்கு கொரோனா பாதிப்பு

இந்த நிலையில், அவரது தந்தைக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்ட தகவல் வெளியாகி அதிர வைத்துள்ளது. அதன் காரணமாகவே அவர் ஐபிஎல் தொடர் முடிந்த உடன் மற்ற வீரர்களுடன் ஆஸ்திரேலியா செல்லாமல், இந்தியா வந்து தன் தந்தையை சந்தித்தார் என கூறப்படுகிறது.

ஆஸி. செல்ல முடியாது

ஆஸி. செல்ல முடியாது

ஆனாலும், ரோஹித் சர்மா டெஸ்ட் தொடரில் ஆட தயாராக இருந்துள்ளார். எனினும், அவரை டெஸ்ட் தொடரில் சேர்த்தாலும், தற்போது அவர் ஆஸ்திரேலியா செல்ல முடியாது என பிசிசிஐ அவரை நீக்க உள்ளதாக பேசப்படுகிறது.

இன்னொரு சிக்கல்

இன்னொரு சிக்கல்

ரோஹித் சர்மா தன் தந்தையை காணச் சென்றது ஒருபுறம் என்றாலும் அவருக்கு காயம் இருந்தது. அவர் நேராக ஆஸ்திரேலியா சென்று இருந்தால் அங்கேயே உடற்தகுதியை நிரூபித்து டெஸ்ட் தொடரில் ஆடி இருக்க முடியும்.

இறுதி முடிவு

இறுதி முடிவு

ஆனால், தற்போது அவர் இந்தியாவில் தன் தந்தையை சந்தித்த பின் தேசிய கிரிக்கெட் அகாடமிக்கு சென்று தன் உடற்தகுதியை நிரூபிக்க தயார் ஆனார். அங்கே அவருக்கு டிசம்பர் 12க்குப் பின் தான் அவரால் ஆட முடியுமா? என இறுதி முடிவு எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

14 நாட்கள் குவாரன்டைன்

14 நாட்கள் குவாரன்டைன்

அவர் டிசம்பர் 12 அன்று ஆஸ்திரேலியா சென்றாலும் அங்கே 14 நாட்கள் குவாரன்டைன் செய்ய வேண்டும். அதன் பின் தான் டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்க முடியும். ஆனால், அதற்குள் முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகள் முடிந்து விடும்.

சிக்கல்களுக்கு காரணம்

சிக்கல்களுக்கு காரணம்

இத்தனை சிக்கல்களுக்கும் காரணம் ரோஹித் சர்மா ஆஸ்திரேலியா செல்லாமல் இந்தியா வந்ததே. அதற்கு இப்போது விடை கிடைத்து உள்ளது. அவர் தந்தைக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டதால் அவரை காணவே அவர் இந்தியா சென்றுள்ளார்.

பிசிசிஐ நினைத்தால்..

பிசிசிஐ நினைத்தால்..

எனினும், பிசிசிஐ திட்டமிட்டு இருந்தால் அவரை இப்போதே ஆஸ்திரேலியாவுக்கு அனுப்பி முதல் டெஸ்ட் போட்டியில் இருந்து அவரை பங்கேற்க வைக்க முடியும். ஆனாலும், தேசிய கிரிக்கெட் அகாடமி உடற்தகுதி சான்று அளித்தால் தான் அனுப்புவோம் என விதிகளை சுட்டிக் காட்டி வருகிறது.

Story first published: Wednesday, November 25, 2020, 18:22 [IST]
Other articles published on Nov 25, 2020
English summary
India vs Australia : Rohit Sharma came to India to check his father, who contracted corona virus.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+