Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஆஸி. தொடரில் தோனி, ரோஹித் ஓய்வு.. தினேஷ், ரிஷப் பண்ட், ராகுலுக்கு வாய்ப்பு.. இது சரியா வருமா?

Recommended Video

India vs Australia: ஆஸி.தொடரில் தினேஷ், பண்ட், ராகுலுக்கு வாய்ப்பு- வீடியோ

மும்பை : இந்திய அணி அடுத்து ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக டி20 தொடரிலும், ஒருநாள் தொடரிலும் ஆட உள்ளது.

டி20 தொடரில் மூத்த வீரர்கள் ரோஹித் சர்மா, தோனிக்கு ஓய்வு அளிக்கப்படும் என கூறப்படுகிறது. சில வீரர்களை சோதித்து பார்க்கவே இந்த ஓய்வு முடிவு வழங்கப்படுகிறது என தகவல் வெளியாகி உள்ளது.

கடைசி ஒருநாள் தொடர்

கடைசி ஒருநாள் தொடர்

உலகக்கோப்பைக்கு முன் இந்தியா ஆடவுள்ள கடைசி ஒருநாள் தொடர் ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக இந்தியாவில் நடைபெற உள்ள தொடர் தான். இந்த தொடரில் இந்திய அணி கடைசி கட்டமாக 15 உத்தேச வீரர்களை முடிவு செய்ய உள்ளது.

டி20 தொடரில் பரிசோதனை

டி20 தொடரில் பரிசோதனை

ஒருநாள் தொடருக்கு முன்னதாக இரண்டு போட்டிகள் கொண்ட டி20 தொடர் நடைபெற உள்ளது. இந்த தொடரில் மாற்று விக்கெட் கீப்பர் மற்றும் மாற்று துவக்க வீரர் இடங்களுக்கான சரியான வீரர்களை பயன்படுத்தி பார்க்க உள்ளது.

மாற்று வீரர்கள் தேர்வு

மாற்று வீரர்கள் தேர்வு

அதற்காக ரோஹித் சர்மா மற்றும் தோனி இருவருக்கும் ஓய்வு அளிக்கப்பட்டு துவக்க வீரர் இடத்திற்கு ராகுல் பயன்படுத்தப் பட உள்ளார். அதே போல, மாற்று விக்கெட் கீப்பராக தோனிக்கு பதில், தினேஷ் கார்த்திக், ரிஷப் பண்ட் பயன்படுத்தப் பட உள்ளனர்.

பரிசோதனை முயற்சிகள்

பரிசோதனை முயற்சிகள்

கடந்த ஆறு - ஏழு மாதங்களாக இந்திய அணியில் பரிசோதனை முயற்சிகள் மட்டுமே நடந்து வந்த நிலையில், டி20 தொடருடன் இந்தியா பரிசோதனை முயற்சிகளை முடித்துக் கொள்ளும் என்றும், ஒருநாள் தொடரில் முழு பலத்துடன் இந்தியா இறங்கும் என்றும் கூறப்படுகிறது.

இந்தியாவின் புதிய நடைமுறை

இந்தியாவின் புதிய நடைமுறை

இந்தியா, ஆஸ்திரேலிய ஒருநாள் தொடரில் உலகக்கோப்பை அணியை தேர்வு செய்து விடும் என்பதால் யார் யாருக்கு இந்த தொடரில் வாய்ப்பு கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பு உள்ளது. ஆனால், இந்தியாவின் இந்த நடைமுறை தவறாக செல்லவும் வாய்ப்புள்ளது.

இது சரியா வருமா?

இது சரியா வருமா?

மே இறுதியில் துவங்க உள்ள உலகக்கோப்பைக்கு மூன்று மாதம் முன்னதாக அணியை தேர்வு செய்வது சரியாக இருக்குமா? என்ற கேள்வியும் உள்ளது. இது மட்டுமில்லாமல், உலகக்கோப்பை அணியில் இடம் பெறப் போகும் இந்திய வீரர்கள் அனைவரும் உலகக்கோப்பைக்கு முன்னதாக நடைபெற உள்ள ஐபிஎல் தொடரில் ஆடுவார்கள்.

காயம் ஏற்பட்டால்..

காயம் ஏற்பட்டால்..

ஐபிஎல் தொடரில் ஒரு வீரருக்கு காயம் ஏற்பட்டு உலகக்கோப்பையில் ஆட முடியாத சூழல் வந்தால், அணியில் அந்த வீரரின் இடத்தை யார் நிரப்புவார்கள். அது அணியின் சமநிலையை பாதிக்காமல் இருக்குமா? என்ன நடக்கிறது என பார்க்கலாம்.

Story first published: Thursday, February 14, 2019, 11:44 [IST]
Other articles published on Feb 14, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+