Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

இப்படித்தான் உங்க இஷ்டத்துக்கு பண்றதா? கங்குலி சொல்லியும் கேட்கவில்லை.. சிக்கலில் சீனியர் வீரர்!

மும்பை : ரோஹித் சர்மா காயத்தில் இருந்து மீண்டு மீண்டும் ஐபிஎல் போட்டிகளில் பங்கேற்று வருவதாக சொல்லப்பட்டாலும் அவர் வேறு ஒரு சிக்கலில் மாட்டிக் கொண்டுள்ளார்.

அவரது காயம் இன்னும் முழுமையாக குணமடையவில்லை எனவும், அவர் ஐபிஎல் போட்டிகளில் பங்கேற்க அவசரப்பட்டு விட்டார் என்றும் சிலர் குற்றம் சுமத்தி வருகின்றனர்.

முன்னாள் வீரர் திலிப் வெங்க்சர்க்கார் ரோஹித் மீது பிசிசிஐ நடவடிக்கை எடுக்குமா? என கேள்வி எழுப்பி உள்ளார்.

மீண்டும் ஆடிய ரோஹித்

மீண்டும் ஆடிய ரோஹித்

2020 ஐபிஎல் தொடரின் கடைசி லீக் போட்டியில் ரோஹித் சர்மா காயத்தில் இருந்து குணமடைந்து விட்டதாகக் கூறி பங்கேற்றார். இது பிசிசிஐ அவரை ஆஸ்திரேலிய தொடரில் இருந்து நீக்கிய முடிவை கேள்விக்குள்ளாக்கி இருக்கிறது. அதே சமயம் ரோஹித் சர்மாவும் சிக்கலில் மாட்டிக் கொண்டார்.

கங்குலி என்ன சொன்னார்?

கங்குலி என்ன சொன்னார்?

இந்தப் போட்டியில் ரோஹித் சர்மா பங்கேற்க சில மணி நேரங்கள் முன்பு தான் பிசிசிஐ தலைவர் கங்குலி, ரோஹித் சர்மா காயம் பெரிதாக இருப்பதாகவும், அவர் தயாரானால் நிச்சயம் இந்திய அணியில் இடம் பெறுவார் எனவும் கூறி இருந்தார். அவர் அவசரப்பட்டு போட்டிகளில் பங்கேற்றால் காயம் பெரிதாகும் என்றும் எச்சரித்து இருந்தார் கங்குலி.

பிசிசிஐ விளக்கம்

பிசிசிஐ விளக்கம்

அதே போல, பிசிசிஐ அவரை நீக்கிய பின் அளித்த விளக்கங்களில் அவரால் வேகமாக ஓட முடியாது. அவர் முழுமையாக மீளாமல் போட்டிகளில் பங்கேற்றால் அவரது காயம் இன்னும் பெரிதாகும் என கூறி இருந்தனர். இந்த நிலையில் தான் ரோஹித் சர்மா ஐபிஎல் தொடரில் பங்கேற்றார்.

காயம் பெரிதாக மாறினால்..

காயம் பெரிதாக மாறினால்..

அவரது காயம் உண்மையிலேயே பிசிசிஐ சொல்வது போல மோசமாக இருந்தால், அவர் எந்த அடிப்படையில் ஐபிஎல் தொடரில் மீண்டும் களமிறங்கினார் என்ற கேள்வி எழுந்துள்ளது. அவரது காயம் ஐபிஎல் தொடரில் ஆடி பெரிதாக மாறினால் அதற்கு யார் பொறுப்பு? என கேட்கப்படுகிறது.

பிசிசிஐ நடவடிக்கை

பிசிசிஐ நடவடிக்கை

சில முன்னாள் வீரர்கள் ரோஹித் சர்மா பிசிசிஐ அறிவுரையை மீறி இந்திய அணியை விட ஐபிஎல் அணியான மும்பை இந்தியன்ஸ் தான் பெரிது என அந்த அணிக்காக ரிஸ்க் எடுத்து போட்டிகளில் பங்கேற்றுள்ளார். எனவே அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்து வருகின்றனர்.

ரோஹித் தரப்பு நியாயம்

ரோஹித் தரப்பு நியாயம்

ரோஹித் சர்மா தரப்பில் அவரது காயம் சிறியது தான் என மீண்டும், மீண்டும் கூறி வருகின்றனர். மும்பை இந்தியன்ஸ் அணியின் மருத்துவர்கள் தான் அவருக்கு சிகிச்சை அளித்து வருகிறார்கள். பிசிசிஐ பிசியோதெரபிஸ்ட் இது குறித்து கண்காணித்து வருகிறார்.

மர்மம்

மர்மம்

ரோஹித் சர்மாவுக்கு உண்மையிலேயே பெரிய அளவில் காயம் ஏற்பட்டுள்ளதா? அல்லது அவரை சிறிய காயத்தை காட்டி இந்திய அணியில் இருந்து நீக்கும் முயற்சி நடைபெற்று வருகிறதா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

Story first published: Wednesday, November 4, 2020, 17:18 [IST]
Other articles published on Nov 4, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+