Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஐபிஎல் பைனல் வரை அவரை விட மாட்டோம்.. ஓகே சொல்லாத பிசிசிஐ.. தவிக்கும் ரோஹித்!

மும்பை : ரோஹித் சர்மாவை ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்தில் சேர்க்காமல் இழுத்தடித்து வருகிறது.

அவர் முழு உடற்தகுதியுடன் இருப்பதை நிரூபித்த பின்பும் அவரை அணியில் சேர்க்காமல் அலைக்கழித்து வருகிறது பிசிசிஐ.

ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்தில் பங்கேற்க உள்ள இந்திய வீரர்கள் குழு நவம்பர் 11 அன்று கிளம்ப உள்ளது.

பிசிசிஐ திட்டம்?

பிசிசிஐ திட்டம்?

அப்போது வரை ரோஹித் சர்மாவை அணியில் தேர்வு செய்யாமல் காலம் தாழ்த்த பிசிசிஐ முடிவு செய்துள்ளதாக தெரிகிறது. இத்தனை கால தாமதம் செய்வது ஏன்? என்ற கேள்வியும் எழுந்துள்ளது. நவம்பர் 10 அன்று ரோஹித் சர்மா ஐபிஎல் இறுதிப் போட்டியில் பங்கேற்க உள்ளார். அதை வைத்து பிசிசிஐ அவரை தேர்வு செய்ய திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

என்ன நடந்தது?

என்ன நடந்தது?

ரோஹித் சர்மா 2020 ஐபிஎல் தொடரில் இடது தொடையில் தசைப்பிடிப்பால் பாதிக்கப்பட்டார். அவருக்கு வலி அதிகமாக இருந்ததால் போட்டிகளில் பங்கேற்கவில்லை. இந்த நிலையில், ஆஸ்திரேலிய தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டது. அதில் அவர் இடம் பெறுவார் என்றே பலரும் எதிர்பார்த்தனர்.

நீக்கம்

நீக்கம்

ஆனால், சாதாரண காயத்தை காரணம் காட்டி அவரை மூன்று மாதங்கள் நடைபெற உள்ள ஆஸ்திரேலிய தொடரில் பிசிசிஐ தேர்வு செய்யவில்லை. இது பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியது. ரோஹித் சர்மாவுக்கு எந்த அளவுக்கு காயம் ஏற்பட்டுள்ளது? அவர் எப்போது மீண்டும் போட்டிகளில் பங்கேற்பார் என்ற கேள்விகள் எழுந்தன.

மீண்டு வந்த ரோஹித்

மீண்டு வந்த ரோஹித்

பிசிசிஐ அதற்கு சரியான பதில் அளிக்கவில்லை. தொடர்ந்து அவரது காயம் பெரிது என்றும், அவரால் ஓட முடியாது என்றும் கூறி வந்தது பிசிசிஐ. ஆனால், மறுபுறம் ரோஹித் சர்மா தீவிர பயிற்சியில் ஈடுபட்டு இருந்தார். ஐபிஎல் லீக் சுற்றின் கடைசி போட்டியில் அவர் மீண்டும் பங்கேற்று பிசிசிஐக்கு அதிர்ச்சி அளித்தார்.

பதில் சொல்லாத பிசிசிஐ

பதில் சொல்லாத பிசிசிஐ

ரோஹித் சர்மா முழு உடற்தகுதியுடன் இருப்பதை போட்டிகளில் பங்கேற்று நிரூபித்து விட்டார். எனினும், அவரி இந்திய அணியில் தேர்வு செய்வதை பற்றி பிசிசிஐ வாய் திறக்கவில்லை. முன்னாள் வீரர்கள் பலர் பிசிசிஐ மீது கடும் விமர்சனம் வைத்துள்ள நிலையில் அவரை அணியில் சேர்ப்பது பற்றி திட்டமிட்டு வருகிறது பிசிசிஐ.

எடுத்தே ஆக வேண்டும்

எடுத்தே ஆக வேண்டும்

எப்படியும் ரோஹித் சர்மாவை இந்திய அணியில் தேர்வு செய்தே தீர வேண்டும். ஆனால், அதில் தாமதம் செய்ய உள்ளது பிசிசிஐ. ஆம், இப்போதே கூட பிசிசிஐயால் ரோஹித் சர்மாவை இந்திய அணியில் சேர்த்து விட முடியும். ஆனால், கடைசி நேரம் வரை இந்த விவகாரத்தை இழுக்க உள்ளதாக கூறப்படுகிறது.

திட்டம் என்ன?

திட்டம் என்ன?

நவம்பர் 10 அன்று ஐபிஎல் இறுதிப் போட்டி நடைபெற உள்ளது. அது முடிந்த மறுநாளே இந்திய அணி ஆஸ்திரேலியா கிளம்பிச் செல்ல உள்ளது. இறுதிப் போட்டியில் ரோஹித் சர்மாவின் உடற்தகுதியை மீண்டும் பரிசோதித்த பின்னரே பிசிசிஐ அவரை அணியில் தேர்வு செய்யக் கூடும் என்கிறார்கள்.

நிச்சயம் செல்வார்

நிச்சயம் செல்வார்

ஏற்கனவே அவர் ஆடிய இரண்டு போட்டிகளே அவரது உடற்தகுதியை அறிந்து கொள்ள போதுமானது. எனினும், கடைசிப் போட்டி வரை காத்திருக்க வைத்துள்ளது பிசிசிஐ. மூத்த வீரரான ரோஹித் சர்மாவை பிசிசிஐ நடத்தி வரும் விதம் மரியாதைக் குறைவாக உள்ளது என்பதே உண்மை.

Story first published: Sunday, November 8, 2020, 20:39 [IST]
Other articles published on Nov 8, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+