Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

சாஹல்.. நீங்க ஆடின ஆட்டத்துக்கு சீக்கிரம் ஸ்பான்சர் கிடைப்பாங்க! சாஹலை கலாய்த்த ரோஹித் சர்மா!

பெங்களூரு : இந்திய அணியின் நட்சத்திர துவக்க வீரர் ரோஹித் சர்மா, சுழற் பந்துவீச்சாளர் சாஹலை கலாய்த்து சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.

சாஹல் பந்துவீச்சில் புலி என்றாலும், பேட்டிங்கில் கொஞ்சம் சுமார் தான். ஆனால், நியூசிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணி மொத்தமாக சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழந்து வந்த போது சாஹல் மட்டுமே களத்தில் நின்று அதிக ரன்கள் குவித்தார்.

சாஹல் 18 ரன்கள்

சாஹல் 18 ரன்கள்

நியூசிலாந்து ஒருநாள் போட்டியில் சாஹல் 18 ரன்கள் அடித்தார். அந்த போட்டியில் அதிக ரன்கள் அடித்த இந்திய வீரர் என்ற பெருமையை சாஹல் பெற்றார். இதை அப்போது பலரும் கேலி செய்தனர்.

மீண்டும் கலாய்!

மீண்டும் கலாய்!

ரோஹித் சர்மா அப்போது சாஹலை முன்வரிசையில் பேட்டிங் இறக்க பரிந்துரைப்பேன் என கூறி கலாய்த்தார். இப்போது மீண்டும் மற்றொரு விஷயத்தில் சாஹலை கலாய்த்துள்ளார் ரோஹித்.

வெற்று பேட்

வெற்று பேட்

சாஹல் தன் அறையில் ஸ்டிக்கர் ஒட்டாத பேட்டில் பயிற்சி செய்வது போன்ற புகைப்படத்தை பகிர்ந்து, "வெற்று பேட்'டா? எனக்கு தெரிந்து இப்போது உன் பேட்டுக்கு, நியூசிலாந்து போட்டியின் ஆட்டத்தை பார்த்து, ஸ்பான்சர் கிடைப்பார்கள்" எனக் கூறி கேலி செய்துள்ளார்.

இரண்டாவது டி20 போட்டி

இரண்டாவது டி20 போட்டி

இந்தியா அடுத்து ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக இரண்டாவது டி20 போட்டியில் ஆட உள்ளது. அந்த போட்டி நாளை (பிப்ரவரி 27) நடைபெற உள்ளது. இரண்டு போட்டிகள் கொண்ட டி20 தொடரில் இந்தியா முதல் போட்டியில் தோல்வி அடைந்து 1-0 என பின்தங்கி உள்ளது. எனவே, இரண்டாவது போட்டியில் வெற்றி பெற்று தொடரை சமன் செய்ய வேண்டிய நிலையில் உள்ளது இந்தியா.

Story first published: Tuesday, February 26, 2019, 14:41 [IST]
Other articles published on Feb 26, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+