For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

உள்குத்து அரசியல்.. கண்துடைப்பு நாடகம்.. ஏமாற்றப்பட்ட ரோஹித் சர்மா!

மும்பை : ரோஹித் சர்மா விவகாரத்தில் கண்துடைப்பு நாடகத்தில் ஈடுபட்டுள்ளது பிசிசிஐ.

ரசிகர்கள் மற்றும் முன்னாள் வீரர்களின் அழுத்தம் காரணமாக அவரை இந்திய அணியில் சேர்ப்பது போல சேர்த்து, தற்போது அவர் அணியிலேயே இல்லை எனக் கூறி உள்ளது பிசிசிஐ.

அதிகாரப்பூர்வமாக ரோஹித் சர்மா டெஸ்ட் அணியில் சேர்க்கப்பட்டார் என முன்பு அறிவித்த பிசிசிஐ, தற்போது அவர் அணியில் சேர்க்கப்படவே இல்லை என கூறி உள்ளது.

ரோஹித் சர்மா நீக்கம்

ரோஹித் சர்மா நீக்கம்

ரோஹித் சர்மா ஆஸ்திரேலிய தொடரில் காயம் காரணமாக நீக்கப்பட்டு பின் அவர் 70 சதவீதம் குணம் அடைந்ததால் டெஸ்ட் தொடரில் மட்டும் சேர்க்கப்படுவதாக அறிவித்தது. தற்போது அவர் ஆஸ்திரேலியா செல்வதில் சிக்கல் எனக் கூறி அவரை நீக்க உள்ளது

சிக்கல்கள்

சிக்கல்கள்

ஆஸ்திரேலியாவில் 14 நாட்கள் குவாரன்டைன் செய்ய வேண்டும், ஆஸ்திரேலியா செல்ல விமானம் இல்லை என பல்வேறு காரணங்களை கூறி அவர் ஆஸ்திரேலியா செல்வதில் சிக்கல் உள்ளது என கூறி உள்ளது பிசிசிஐ. ஆனால், அவர் ஏன் ஆஸ்திரேலியா செல்லாமல், இந்தியா அனுப்பப்பட்டார்? என்பது பற்றி மட்டும் கூறவில்லை.

சாஹா ஒப்பீடு

சாஹா ஒப்பீடு

சிலர் விரிதிமான் சாஹா, ரோஹித் சர்மாவை விட மோசமாக காயத்தில் இருந்தும் அவரை ஆஸ்திரேலியா அனுப்பியது ஏன்? அவர் அங்கேயே உடற்தகுதியை நிரூபித்துள்ள நிலையில், ரோஹித் சர்மாவுக்கு மட்டும் ஏன் அந்த வாய்ப்பை வழங்கவில்லை? என கேள்வி எழுப்பி உள்ளனர்.

சாஹாவுக்கு மட்டும் இல்லையா?

சாஹாவுக்கு மட்டும் இல்லையா?

சாஹாவுக்கு இரண்டு இடங்களில் தசைப்பிடிப்பு இருந்தது. ஆனாலும், அவர் ஆஸ்திரேலியா அனுப்பப்பட்டார். ரோஹித் சர்மா தன் உடற்தகுதியை தேசிய கிரிக்கெட் அகாடமி சென்று தான் நிரூபிக்க வேண்டும் என்றால், அதே விதி சாஹாவுக்கு பொருந்தாதா? என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

பிசிசிஐ விளக்கம்

பிசிசிஐ விளக்கம்

தற்போது பிசிசிஐ அதிகாரிகள் சிலர் ரோஹித் சர்மா டெஸ்ட் அணியிலேயே இல்லை. அவர் ஆஸ்திரேலியா செல்வதாக பிசிசிஐயிடம் எந்த திட்டமும் இல்லை எனக் கூறி உள்ளது. அப்படி என்றால் அவரை ஏன் டெஸ்ட் அணியில் சேர்ப்பதாக பிசிசிஐ அதிகாரப்பூர்வமாக அறிவிக்க வேண்டும்?

மாற்று வீரர் யாருக்கு?

மாற்று வீரர் யாருக்கு?

ரோஹித் சர்மா நீக்கப்பட்டால் ஸ்ரேயாஸ் ஐயர் அவருக்கு பதில் அணியில் மாற்று வீரராக சேர்க்கப்படுவார் என முன்பு ஒரு தகவல் வெளியானது. தற்போது ஸ்ரேயாஸ் ஐயர் விடுப்பு எடுத்துக் கொண்டு செல்ல இருக்கும் விராட் கோலிக்கு தான் மாற்று வீரராக அணியில் சேர்க்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.

நாடகமா?

நாடகமா?

ரோஹித் சர்மாவை முதலில் ஏன் அணியில் தேர்வு செய்யவில்லை? அவரை பின்னர் அணியில் தேர்வு செய்து விட்டு, தற்போது ஏன் ஆஸ்திரேலியா அனுப்புவதில் சிக்கல் என சொல்ல வேண்டும்? ரோஹித் சர்மாவை நீக்க பிசிசிஐ மற்றும் சிலர் நாடகம் போடுகிறார்களா? இதற்கெல்லாம் விடை கிடைக்குமா?

Story first published: Wednesday, November 25, 2020, 13:32 [IST]
Other articles published on Nov 25, 2020
English summary
India vs Australia : Rohit Sharma not in squad says BCCI
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+