Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ரோஹித் சர்மாவை வீட்டுக்கு அனுப்ப முடிவு.. அதிர வைக்கும் பிசிசிஐ திட்டம்.. வெளியான ரகசியம்!

மும்பை : ரோஹித் சர்மா முழு உடற்தகுதியுடன் இருப்பதை ஐபிஎல் தொடரில் போட்டிகளில் பங்கேற்று நிரூபித்து விட்டார்.

ஆனாலும், அவரை இந்திய வீரர்களுடன் ஆஸ்திரேலியா அனுப்பாமல் இருக்க முடிவு செய்துள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளன.

ஐபிஎல் தொடர் முடிந்த உடன் ரோஹித் சர்மா வீட்டுக்கு தான் செல்ல வேண்டும். இந்திய அணியுடன் இணைய முடியாது என பிசிசிஐ வட்டாரத்தில் இருந்து தகவல் வெளியாகி உள்ளது.

காயம்

காயம்

ரோஹித் சர்மா 2020 ஐபிஎல் தொடரில் காயம் அடைந்தார். அவரது தொடையில் தசைப்பிடிப்பு ஏற்பட்டது. இதை அடுத்து அவர் வலியால் போட்டிகளில் பங்கேற்காமல் இருந்தார். அதையே காரணம் காட்டி ஆஸ்திரேலிய தொடரில் இருந்து அவரை நீக்கியது பிசிசிஐ.

உடற்தகுதி உள்ளது

உடற்தகுதி உள்ளது

இந்த நிலையில், தான் முழு உடற்தகுதியுடன் இருப்பதை நிரூபிக்க அவர் ஐபிஎல் தொடரில் கடைசி லீக் போட்டி மற்றும் பிளே-ஆஃப் சுற்றில் பங்கேற்றார். அவர் முழு உடற்தகுதியுடன் இருப்பதை நிரூபித்ததால் பிசிசிஐ சிக்கலில் மாட்டிக் கொண்டது.

சேர்த்தே ஆக வேண்டும்

சேர்த்தே ஆக வேண்டும்

ரோஹித் சர்மாவை அணியில் சேர்த்தே ஆக வேண்டும் என பலரும் கூறத் துவங்கினர். ஆனாலும், பிசிசிஐ பதில் சொல்லாமல் காலம் தாழ்த்தி வருகிறது. தற்போது பிசிசிஐ ரோஹித் சர்மாவை அணியில் சேர்க்காமல் இருக்க திட்டமிட்டு வருவதாக கூறப்படுகிறது.

பரிசோதனை

பரிசோதனை

காயமடைந்த வீரர்கள் மீண்டும் அணிக்கு திரும்பினால் அவர்களுக்கு உடற்தகுதி பரிசோதனை செய்யப்பட வேண்டும். இதை அணியின் பிசியோதெரபிஸ்ட் மற்றும் தேசிய கிரிக்கெட் அகாடமி தான் செய்ய வேண்டும். அவர்கள் ரோஹித் போட்டிகளில் ஆடலாம் அறிக்கை அளித்தால் மட்டுமே அவர் அணியில் சேர்க்கப்படுவார்.

பல நாட்கள் ஆகும்

பல நாட்கள் ஆகும்

இந்த பரிசோதனை செய்யப்பட பல நாட்கள் ஆகக் கூடும். இந்திய அணி நவம்பர் 11 அன்றே ஆஸ்திரேலியா கிளம்ப உள்ள நிலையில் அப்போது ரோஹித் சர்மா ஆஸ்திரேலியா செல்ல மாட்டார் என கூறப்படுகிறது. அவர் இந்தியா சென்று அணங்கே தன் உடற்தகுதியை நிரூபிக்க வேண்டும்.

டெஸ்ட் தொடரில் ஆடுவாரா?

டெஸ்ட் தொடரில் ஆடுவாரா?

உடற்தகுதியை நிரூபித்த பின்னரும் கூட ரோஹித் மீண்டும் அணியில் இணைவதில் பல குழப்பங்கள் உள்ளன. குவாரன்டைன் விதிகளை எல்லாம் அவர் பின்பற்றி ஆஸ்திரேலியா சென்று அணியுடன் இணைய இரு வாரங்கள் ஆகலாம். டெஸ்ட் தொடரில் ரோஹித் சர்மா பங்கேற்க வாய்ப்பு உள்ளது.

ரசிகர்கள் கொந்தளிப்பு

ரசிகர்கள் கொந்தளிப்பு

ரோஹித் சர்மா ஐபிஎல் போட்டிகளில் ஆடி உள்ள நிலையில், அவரை இந்திய அணியில் சேர்க்காமல் இழுத்தடித்து வருவதை கண்டு அவரது ரசிகர்கள் கொந்தளித்துப் போயுள்ளனர். தனிப்பட்ட முறையில் வேண்டுமென்றே அவரை அணியில் இருந்து நீக்க பிசிசிஐ முயன்று வருவதாக அவர்கள் குற்றம் சுமத்தி வருகின்றனர்.

Story first published: Monday, November 9, 2020, 15:40 [IST]
Other articles published on Nov 9, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+