Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

Ind vs Aus : வலுவான ஸ்கோரை நோக்கி ஆஸி.. 4 வேகங்கள் இருந்தும் தவிக்கும் இந்தியா

பெர்த் : இந்தியா - ஆஸ்திரேலியா இடையே ஆன இரண்டாவது டெஸ்ட் போட்டி பெர்த் மைதானத்தில் தொடங்கி நடைபெற்று வருகிறது.

முதல் டெஸ்ட் போட்டியில் இந்தியா 31 ரன்களில் வெற்றி பெற்றது. இரண்டாவது டெஸ்ட் போட்டியில் அஸ்வின், ரோஹித் சர்மா காயம் காரணமாக அணியில் இடம் பெறவில்லை.

ஆஸ்திரேலிய அணியில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. தற்போது, ஆஸ்திரேலிய அணி டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்து ஆடி வருகிறது.

இந்திய அணியில் மாற்றம்

இந்திய அணியில் மாற்றம்

பெர்த் மைதானம் வேகப் பந்துவீச்சுக்கு ஒத்துழைக்கும் என்பதால் இந்தியா அதற்கேற்ப திட்டமிட்டுள்ளது. அணியில் நான்கு பந்துவீச்சாளர்களை தேர்வு செய்துள்ளது இந்தியா. ஆஸ்திரேலிய அணி தோல்வி அடைந்து இருந்தாலும் முதல் டெஸ்டில் ஆடிய அதே அணியுடன் களம் கண்டுள்ளது.

ஜடேஜா அணியில் இல்லை

ஜடேஜா அணியில் இல்லை

இந்திய அணியில் ரோஹித் சர்மாவுக்கு பதில் ஹனுமா விஹாரியும், அஸ்வினுக்கு பதில் உமேஷ் யாதவும் அணியில் இடம் பெற்றுள்ளனர். அணியில் முழு நேர சுழற் பந்துவீச்சாளர் ஒருவர் கூட இல்லை. அஸ்வின் இடத்தை ஜடேஜா நிரப்புவார் என எதிர்பார்த்த நிலையில், அனுபவம் போதாத ஹனுமா விஹாரியின் பகுதி நேர சுழற் பந்துவீச்சே பெர்த் மைதானத்துக்கு போதும் என்ற முடிவுக்கு வந்துள்ளார் கோலி.

இந்திய அணியில் யார் யார்?

இந்திய அணியில் யார் யார்?

இந்திய அணி - விராட் கோலி (கேப்டன்), முரளி விஜய், ராகுல், புஜாரா, ரஹானே (துணை கேப்டன்), ஹனுமா விஹாரி, ரிஷப் பண்ட், இஷாந்த் சர்மா, ஷமி, பும்ரா, உமேஷ் யாதவ்.

ஆஸ்திரேலியா பேட்டிங் தேர்வு

ஆஸ்திரேலியா பேட்டிங் தேர்வு

இந்த டெஸ்டில் ஆஸ்திரேலியா டாஸ் வென்றது. பேட்டிங் தேர்வு செய்தது. அந்த அணிக்கு ஹாரிஸ் மற்றும் பின்ச் நல்ல துவக்கம் அளித்தனர். இவர்கள் இருவரும் முதல் விக்கெட்டுக்கு 112 ரன்கள் சேர்த்தனர். அப்போது பும்ரா பந்துவீச்சில் பின்ச் ஆட்டமிழந்தார். இதை தொடர்ந்து இந்தியா விக்கெட்கள் எடுக்கத் துவங்கியது. எனினும், ஆஸ்திரேலிய வீரர்கள் நிதானமாக ஆடி முதல் நாள் முடிவில் 277 ரன்கள் எடுத்துள்ளனர். இந்தியா 6 விக்கெட் வீழ்த்தியுள்ளது. ஆரோன் பின்ச், மார்கஸ் ஹாரிஸ், ட்ராவிஸ் ஹெட் ஆகியோர் அரைசதம் அடித்தனர். இந்திய அணியில் நான்கு வேகப் பந்துவீச்சாளர்கள் இருந்தும் திணறி வருகிறது.

Story first published: Friday, December 14, 2018, 17:23 [IST]
Other articles published on Dec 14, 2018
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+