Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

Ind vs Aus : எங்க தலைக்கு எவ்ளோ “தில்”லு பார்த்தியா? அணித் தேர்வில் அதிரடி காட்டிய கோலி

Recommended Video

இந்திய வேகபந்து வீச்சாளர்களை சமாளித்து அரை சதம் அடித்த ஆரோன் பின்ச்- வீடியோ

பெர்த் : இந்தியா - ஆஸ்திரேலியா இடையே ஆன இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கு இந்தியா நான்கு வேகப் பந்துவீச்சாளர்களோடு களம் இறங்கியுள்ளது.

இந்திய அணியில் அஸ்வின் காயம் அடைந்துள்ளார். அவருக்கு பதில் ஜடேஜா களம் இறங்குவார் என எதிர்பார்த்த நிலையில், அவருக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை.

கோலி, ஹனுமா விஹாரியே போதும் என்ற முடிவுக்கு வந்து உள்ளார். முழு நேர சுழற் பந்துவீச்சாளர் இல்லாமல் டெஸ்ட் போட்டிகளில் இந்தியா ஆடுவது அபூர்வம்.

வரலாற்றில் மூன்று முறை

வரலாற்றில் மூன்று முறை

இந்த டெஸ்ட் போட்டியை சேர்த்து இது வரை டெஸ்ட் போட்டிகளில் மூன்று முறை மட்டுமே முழு நேர சுழற் பந்துவீச்சாளர் இல்லாமல் களம் இறங்கியுள்ளது இந்தியா. ஒரு முறை தோனி தலைமையில் 2012லும், மற்றொரு முறை கோலி தலைமையில் 2018இல் தென்னாபிரிக்காவிலும் இந்தியா இப்படி களம் இறங்கியது. அடுத்து மூன்றாம் முறை இந்த டெஸ்ட் போட்டியில் மீண்டும் முழு நேர சுழற் பந்துவீச்சாளர் இல்லாத இந்திய அணி களம் கண்டது.

இது சரியாக இருக்குமா?

இது சரியாக இருக்குமா?

இந்திய அணிக்கு முழு நேர சுழற் பந்துவீச்சாளர் இல்லாமல் சமாளிக்குமா? இதற்கு முன் இரண்டு முறை இவ்வாறு களம் இறங்கிய இந்திய அணி ஒன்றில் வெற்றியும், ஒன்றில் தோல்வியும் அடைந்துள்ளது. இதே பெர்த் மைதானத்தில் தோனி தலைமையில் முழு நேர சுழற் பந்துவீச்சாளர் இல்லாமல் சென்ற இந்தியா ஒரு இன்னிங்க்ஸ் மற்றும் 37 ரன்கள் வித்தியாசத்தில் படு தோல்வி அடைந்தது. கோலி தென்னாபிரிக்காவில் இதே போல களம் இறங்கி வெற்றி பெற்றுள்ளார்.

வேகப் பந்துவீச்சு மட்டும் போதுமா?

வேகப் பந்துவீச்சு மட்டும் போதுமா?

இந்த நிலையில், பெர்த் மைதானத்தில் நான்கு வேகப் பந்துவீச்சாளர்களை மட்டும் வைத்துக் கொண்டு இந்தியா சமாளித்து விடுமா என்ற சந்தேகம் பலருக்கும் உள்ளது. ஹனுமா விஹாரி சில ஓவர்கள் சுழற்பந்து வீசி சமாளிப்பார் என்பது மட்டுமே இதில் நல்ல விஷயமாக இருக்கிறது. இஷாந்த் சர்மா, ஷமி, பும்ரா கூட்டணி முதல் டெஸ்டில் ஆதிக்கம் செலுத்தியதால், இந்த டெஸ்டிலும் ஆதிக்கம் செலுத்துவார்கள் என நம்புவோம்.

இது தவறான முடிவு

இது தவறான முடிவு

எனினும், அஸ்வினுக்கு காயம் ஏற்பட்டுள்ள நிலையில் ஜடேஜா இல்லாமல் இந்தியா களம் இறங்கியது தவறு என இங்கிலாந்து முன்னாள் கேப்டன் மைக்கேல் வான் கருத்து தெரிவித்துள்ளார்.

Story first published: Friday, December 14, 2018, 13:39 [IST]
Other articles published on Dec 14, 2018
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+