Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

Ind vs Aus : ஜடேஜா இல்லாத இந்திய அணி.. தனக்கு தானே ஆப்பு வைத்துக் கொள்ளும் கோலி

பெர்த் : இந்திய அணி ஆஸ்திரேலியாவுக்கு எதிராக பெர்த்தில் நடந்து வரும் இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கு ஒரு முழு நேர ஸ்பின்னர் கூட இல்லாமல் களம் இறங்கியுள்ளது.

ஜடேஜாவை தேர்வு செய்து இருந்தால், இந்த குழப்பம் வந்திருக்காது. ஆனால், கோலி ஹனுமா விஹாரியை தேர்வு செய்து உள்ளார்.

கோலியின் இந்த முடிவு சரிதானா என்ற சந்தேகம் பலருக்கும் எழுந்துள்ளது. வெறும் வேகப் பந்துவீச்சாளர்களை மட்டுமே வைத்துக் கொண்டு வெற்றி பெற்று விட முடியுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

அஸ்வின், ரோஹித் காயம்

அஸ்வின், ரோஹித் காயம்

இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியில் இரண்டு முக்கிய மாற்றங்கள் நிகழ்ந்தன. அதற்கு காரணம் அஸ்வின், ரோஹித் காயம் அடைந்ததே. அவர்கள் இருவருக்கும் பதில் ஹனுமா விஹாரி மற்றும் உமேஷ் யாதவ் அணியில் இடம் பிடித்துள்ளனர்.

ஜடேஜா - உமேஷ் இல்லை

ஜடேஜா - உமேஷ் இல்லை

அஸ்வினுக்கு பதில் ஒரு வேகப் பந்துவீசாளரும், ரோஹித்துக்கு பதில் ஜடேஜாவும் இடம் பெற்றால், அணியில் கூடுதல் பேட்ஸ்மேன், சிறப்பு சுழற் பந்துவீச்சாளராக ஜடேஜாவும், பெர்த் மைதானத்துக்கு ஏற்ப நான்காவது பந்துவீச்சாளராக உமேஷும் இருந்திருப்பார்கள். இப்போது ஜடேஜாவை விடுத்து ஹனுமா விஹாரி அணியில் எடுக்கப்பட்டுள்ளார்.

ஹனுமா முழு நேர ஸ்பின்னரா?

ஹனுமா முழு நேர ஸ்பின்னரா?

ஹனுமா விஹாரி முழு நேர சுழற் பந்துவீச்சாளர் இல்லை. அவர் பகுதி நேரம் மட்டுமே வீசுவார். மேலும், அவரது பந்துவீச்சை ஆஸ்திரேலியா எளிதாக கையாண்டால், அவருக்கு அழுத்தம் ஏற்படும். அதை சமாளிக்கும் அனுபவம் அவருக்கு இருக்கிறதா என்பதும் கேள்விக்குறியே!

கோலியின் முடிவு தவறா?

கோலியின் முடிவு தவறா?

ஹனுமாவை பேட்டிங் மற்றும் பகுதி நேர பந்துவீச்சாளர் மட்டுமே. ஆனால், ஜடேஜா முழு நேர பந்துவீச்சாளராகவே செயல்பட்டு வருகிறார். கடந்த சில டெஸ்ட் போட்டிகளில் சிறப்பாக பேட்டிங் செய்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. அவரை எடுத்து இருந்தால் அணி முழுமையானதாக இருந்திருக்கும். கோலி ஜடேஜாவை விடுத்து ஹனுமா விஹாரியை தேர்வு செய்தது சரியா? இரண்டாவது டெஸ்டின் முதல் இன்னிங்க்ஸ் முடிவில் தெரிந்துவிடும்.

Story first published: Friday, December 14, 2018, 12:27 [IST]
Other articles published on Dec 14, 2018
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+