Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

தவானுக்கு என்ன தான் பிரச்சனை? உலகக்கோப்பைக்கு முன் பார்முக்கு வருவாரா, மாட்டாரா?

Recommended Video

தவானுக்கு என்ன தான் பிரச்சனை?.. உலகக்கோப்பையில் விளையாடுவாரா?- வீடியோ

ராஞ்சி : ஷிகர் தவான் இந்திய அணிக்காக கடந்த ஆண்டுகளில் மிகவும் சிறப்பாக ஆடி ரன் குவித்துள்ளார். பல போட்டிகளில் இந்திய அணியின் வெற்றியில் முக்கிய பங்காற்றியுள்ளார்.

ஆனால், சமீப காலமாக அவர் பேட்டிங்கில் தொடர்ந்து சிறப்பாக ஆடவில்லை. அது குறித்து அவருடன் முதல் தர கிரிக்கெட் போட்டிகளில் ஆடியுள்ள ஆகாஷ் சோப்ரா, விஜய் தாஹியா ஆகியோர் கருத்து தெரிவித்துள்ளனர்.

பேட்டிங் திறன்

பேட்டிங் திறன்

இவர்கள் கூறுகையில், தவான் தன் பேட்டிங் திறனை இழக்கவில்லை. அவர் சிறந்த ஷாட்களை ஆடுகிறார். அதில் எந்த தவறும் இல்லை. ஆனால், பிரச்சனை அவரது மனநிலையில் தான் இருக்கக் கூடும் என கூறியுள்ளனர்.

ரோஹித் சர்மாவின் ஜெர்சியை அணிந்து நிற்பது யார்? பட்டென்று பதில் சொன்ன ரோஹித் மனைவி!

பார்முக்கு திரும்புவார்

பார்முக்கு திரும்புவார்

ஆகாஷ் சோப்ரா கூறுகையில், தவான் மேடு, பள்ளங்களை பார்த்து விட்டு தான் குறிப்பிட காலத்தில் 5000 ரன்களை அடித்துள்ளார். பல நாடுகள் பங்கேற்கும் தொடர்களான ஆசிய கோப்பை, உலகக்கோப்பை ஆகியவற்றில் அவரது பார்ம் அபரிமிதமானது. அதனால், அவர் எப்போது வேண்டுமானாலும் பார்முக்கு திரும்பலாம் என்றார்.

மனநிலை காரணமா?

மனநிலை காரணமா?

மற்றொரு நண்பரான விஜய் தாஹியா கூறுகையில், தவானின் டெக்னிக்கில் எந்த பிரச்சனையும் இல்லை. அவர் விரைவாக ரன் குவிக்க முனைகிறார். அதனால், தூக்கி அடித்து ஆட்டமிழக்கிறார். சில சமயம் அழுத்தம் நம் மனநிலையை பாதிக்கும். அந்த நேரங்களில் மனம் எப்படி வேலை செய்கிறது என்பது மிகவும் முக்கியம் என்றார்.

சரியும் ரன்கள்

சரியும் ரன்கள்

தவான் கடைசியாக ஆசிய கோப்பையில்நல்ல பார்மில் இருந்தார். அதன் பின் 15 இன்னிங்க்ஸ்களில் 376 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார். இதில் நியூசிலாந்து தொடரில் அடித்த 2 அரைசதங்கள் மட்டுமே ஆறுதல் அளித்த விஷயம்.

கடைசி வாய்ப்பு

கடைசி வாய்ப்பு

தவானின் பார்ம் மோசமாக இருப்பது, மற்றொரு துவக்க வீரர் ராகுலுக்கு சாதகமாக அமைந்துள்ளது. ராகுல் அணியில் இடமின்றி தவித்து வரும் நிலையில், உலகக்கோப்பைக்கு முன் ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக இந்தியா ஆடவுள்ள அடுத்த மூன்று ஒருநாள் போட்டிகளில் தவான் தன் பார்மை நிரூபிக்க வேண்டும்.

Story first published: Thursday, March 7, 2019, 15:09 [IST]
Other articles published on Mar 7, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+