Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ரோஹித் சர்மாவின் ஜெர்சியை அணிந்து நிற்பது யார்? பட்டென்று பதில் சொன்ன ரோஹித் மனைவி!

மும்பை : ஐபிஎல் 2019 தொடரை ஒட்டி மும்பை இந்தியன்ஸ் அணி படு தீவிரமாக விளம்பர வேலைகளை தொடங்கி உள்ளது.

அதன் ஒரு பகுதியாக வீரர்களுக்கான புதிய ஆடைகளை சமீபத்தில் அறிமுகம் செய்து வைத்தது. மும்பை இந்தியன்ஸ் அணியின் இந்த ஆண்டு முதல் இணைந்துள்ள யுவராஜ் சிங் தன் 12ஆம் நம்பர் எண் கொண்ட டி-ஷர்ட்டை அணியவுள்ளார் என்பது குறித்த புகைப்படத்தை வெளியிட்டது.

இன்ஸ்டாகிராமில் புகைப்படம்

இன்ஸ்டாகிராமில் புகைப்படம்

இதைத் தொடர்ந்து, மற்றொரு விளம்பர யுக்தியாக மும்பை இந்தியன்ஸ் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரோஹித் சர்மாவின் 45ஆம் எண் கொண்ட டி-ஷர்ட் அணிந்து, முகத்தை காட்டாமல் ஒருவர் நிற்பது போன்ற புகைப்படத்தை பகிர்ந்தனர்.

யாருன்னு கண்டுபிடிங்க

"இது யார்?" என கண்டுபிடிக்குமாறு கூறி மும்பை இந்தியன்ஸ் பக்கத்தில் குறிப்பிடப்பட்டு இருந்தது. அந்த புகைப்படத்தில் இருந்தது யுவராஜ் சிங் தான் என்பதை கண்டுபிடித்த ரோஹித் சர்மாவின் மனைவி ரித்திகா, அதை குறிப்பிட்டு பதிவிட்டார்.

விசித்திரமா இருக்கு

விசித்திரமா இருக்கு

ரித்திகா தன் பதிவில், "என் சகோதரர், என் கணவரின் ஜெர்சியை அணிவது விசித்திரமா இருக்கு" என குறிப்பிட்டு இருந்தார். யுவராஜ் சிங் முதல் முறையாக மும்பை இந்தியன்ஸ் அணிக்காக ஐபிஎல் தொடரில் ஆடவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஏலம் எடுத்தது

ஏலம் எடுத்தது

கடந்த சீசனில் யுவராஜ் சிங் பஞ்சாப் அணிக்காக ஆடினார். எட்டு போட்டிகளில் வெறும் 65 ரன்கள் மட்டுமே அடித்த நிலையில், அவரை அந்த அணி நீக்கியது. பின்னர் 2019 ஐபிஎல்-க்கான ஏலத்தில் யுவராஜ் சிங்கை அவரது அடிப்படை விலையான 1 கோடிக்கு ஏலம் எடுத்தது மும்பை இந்தியன்ஸ்.

கடைசி ஐபிஎல் தொடர்

கடைசி ஐபிஎல் தொடர்

இந்த ஐபிஎல் தொடர் தான் அனேகமாக யுவராஜ் சிங்கின் கடைசி தொடராக இருக்கும் என்ற நிலையில், தன் நண்பர் ரோஹித் சர்மாவின் கீழ் யுவராஜ் சிங் அதிரடி காட்டுவாரா? பார்க்கலாம்.

Story first published: Thursday, March 7, 2019, 14:35 [IST]
Other articles published on Mar 7, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+