For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

இந்த வீரருக்கு தான் சான்ஸ் கொடுப்போம்.. ரோஹித் சர்மாவை நீக்க பக்காவாக பிளான் போட்ட கோலி.. பரபர தகவல்

சிட்னி : இந்திய டெஸ்ட் அணியில் இருந்து ரோஹித் சர்மா நீக்க உள்ளதாக பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், அவருக்கு பதில் அணியில் யாரை சேர்ப்பது என இப்போதே கேப்டன் விராட் கோலி, பயிற்சியாளர் ரவி சாஸ்திரி தேர்வு செய்து வைத்து விட்டதாக கூறப்படுகிறது.

ஏன் இப்படி?

ஏன் இப்படி?

இது சரியான திட்டமிடல் என சிலரால் பாராட்டப்பட்டாலும், விராட் கோலியும், ரவி சாஸ்திரியும் ரோஹித் சர்மா நீக்கத்தை ஏன் இத்தனை அவசரமாக முன் கூட்டியே திட்டமிட்டு வருகிறார்கள் என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

இந்தியாவில் ரோஹித் சர்மா

இந்தியாவில் ரோஹித் சர்மா

ரோஹித் சர்மா ஐபிஎல் தொடரின் போது ஏற்பட்ட காயம் ஓரளவு குணமான நிலையில் தன் உடற்தகுதியை நிரூபிக்க இந்தியாவில் தங்கி உள்ளார். தேசிய கிரிக்கெட் அகாடமியில் அவர் பயிற்சி மேற்கொண்டு வருகிறார். அந்த அகாடமி அவருக்கு சான்றிதழ் அளித்தால் மட்டுமே அவரால் ஆஸ்திரேலியாவில் போட்டிகளில் பங்கேற்க முடியும்.

நான்கு நாட்கள் கெடு

நான்கு நாட்கள் கெடு

மற்ற வீரர்களுடன் ரோஹித் சர்மாவை ஆஸ்திரேலியா அனுப்பாமல் இந்தியாவுக்கு அனுப்பி உடற்தகுதியை நிரூபிக்க சொன்ன இந்திய அணி, தற்போது அவர் இன்னும் நான்கு நாட்களுக்குள் ஆஸ்திரேலியா வரவில்லை என்றால் டெஸ்ட் அணியில் சேர்ப்பது கடினம் என கூறி உள்ளது.

அந்த சிக்கல்

அந்த சிக்கல்

ரோஹித் சர்மா நான்கு நாட்களுக்குள் ஆஸ்திரேலியா செல்ல வேண்டும் என்றால் தேசிய கிரிக்கெட் அகாடமி அவருக்கு உடற்தகுதி சான்றிதழ் அளிக்க வேண்டும். ஆனால் இப்போது வரை அது பற்றி அவர்கள் எதுவும் கூறவில்லை என தெரிய வந்துள்ளது.

மாற்று வீரர் தயார்

மாற்று வீரர் தயார்

அதற்குள் கேப்டன் விராட் கோலி மற்றும் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி ரோஹித் சர்மாவுக்கு மாற்று வீரரை தயார் செய்து வைத்து இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. ஒருநாள் மற்றும் டி20 அணியில் இடம் பெற்று இருக்கும் ஸ்ரேயாஸ் ஐயர் தான் அந்த மாற்று வீரர்.

ஆஸ்திரேலியாவில் இருப்பார்

ஆஸ்திரேலியாவில் இருப்பார்

ஒருநாள் அணி மற்றும் டி20 அணியில் இடம் பெற்று இருக்கும் ஸ்ரேயாஸ் ஐயர் அந்த தொடர் முடிந்த பின்னரும் ஆஸ்திரேலியாவிலேயே தங்கி இருப்பார். அவருக்கு டெஸ்ட் தொடருக்கான அணியில் வாய்ப்பு அளிக்கப்படும் என கூறப்படுகிறது.

முன் கூட்டியே திட்டம்

முன் கூட்டியே திட்டம்

ரோஹித் சர்மா குறித்து இன்னும் முடிவு எடுக்கப்படாத நிலையில் அவருக்கு மாற்று வீரரை தயார் செய்து வைத்து உள்ளது இந்திய அணி நிர்வாகம். உண்மையில், தேர்வுக் குழு தான் மாற்று வீரரை தேர்வு செய்ய வேண்டும். ஆனால், ஆஸ்திரேலியாவிலேயே கேப்டன், பயிற்சியாளர் தேர்வு செய்து வைத்து விட்டனர்.

விருப்பம் இல்லையா?

விருப்பம் இல்லையா?

ரோஹித் சர்மாவை எப்படியாவது அணியில் சேர்க்க வேண்டும் என நினைத்தால் இப்படி செய்ய வாய்ப்பு இல்லை. மாறாக ஆஸ்திரேலிய தொடரின் அணித் தேர்வு முதலே அவரை அணியில் இருந்து நீக்கவே முயற்சிகள் நடந்து வருகின்றன.

இஷாந்த் சர்மா நிலை

இஷாந்த் சர்மா நிலை

இஷாந்த் சர்மா அணித் தேர்வுக்கு முன்பே காயத்தால் ஐபிஎல் தொடரில் ஆடவில்லை. அவருக்கு பதில் அப்போதே கூடுதல் வேகப் பந்துவீச்சாளர்கள் அணியில் தேர்வு செய்யப்பட்டு விட்டனர். முகமது சிராஜ் கூடுதல் வேகப் பந்துவீச்சாளராக அணியில் இடம் பெற்றுள்ளார்.

Story first published: Tuesday, November 24, 2020, 13:34 [IST]
Other articles published on Nov 24, 2020
English summary
India vs Australia : Shreyas Iyer could be backup player for Rohit Sharma
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+