அடுத்தடுத்து சரிந்த விக்கெட்ஸ்.. சோலோவாக ”ஷோ” காட்டிய ஸ்ரேயாஸ்.. இனி விராட் கோலி இடம் இவருக்குதான்!
பெங்களூரு: டி20 உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணியில் ஏன் தன்னை சேர்க்க வேண்டும் என்று ஒரே இன்னிங்ஸ் மூலமாக நிரூபித்துள்ளார் ஸ்ரேயாஸ் ஐயர்.
ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான கடைசி டி20 போட்டியில் இந்திய அணி விளையாடி வருகிறது. பெங்களூரு மைதானத்தில் நடைபெற்று வரும் இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதன்பின் களமிறங்கிய இந்திய அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 160 ரன்களை சேர்த்தது. இந்திய அணி 55 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.

இதையடுத்து ஸ்ரேயாஸ் ஐயர் கடைசி ஓவர் வரை களத்தில் இருந்து இந்திய அணியின் ஸ்கோரை உயர்த்தினார். சிறப்பாக ஆடிய அவர் 37 பந்துகளில் 2 சிக்ஸ், 5 பவுண்டரி உட்பட 53 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். 3வது பேட்ஸ்மேனாக ஸ்ரேயாஸ் ஐயர் களமிறங்கிய போது, எதிர்முனையில் நின்ற அத்தனை பேட்ஸ்மேன்கள் அடுத்தடுத்து ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பினர்.
இதனால் விக்கெட்டை காப்பாற்றுவதோடு, அதிரடியாகவும் ஆடி ரன்கள் சேர்க்கும் சூழலுக்கு ஸ்ரேயாஸ் ஐயர் தள்ளப்பட்டார். இதனிடையே ஆஸ்திரேலியா அணி வீரர்கள் பந்தில் வேகம் கொடுத்தால் ரன்கள் சேர்க்க எளிதாக இருக்கும் என்பதால், முழுக்க முழுக்க கட்டர்ஸ் மற்றும் ஷார்ட் பால்களையே வீச தொடங்கினார்கள். இதனால் ரன்கள் சேர்ப்பதும் கடினமாக மாறியது.
ஆனாலும் ஸ்ரேயாஸ் ஐயர் தனது அனுபவத்தை பயன்படுத்தி அரைசதம் அடித்து அசத்தியுள்ளார். இதன் மூலமாக இந்திய அணி நிர்வாகத்திற்கு டி20 கிரிக்கெட் அணியில் தனது தேவையை புரிய வைத்துள்ளார். அடுத்த ஆண்டு நடக்கும் டி20 உலகக்கோப்பை தொடர் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்கா மண்ணில் நடக்கவுள்ளது. குறிப்பாக ஏராளமான போட்டிகள் வெஸ்ட் இண்டீஸில் நடக்கவுள்ளது.
வெஸ்ட் இண்டீஸ் மைதானங்கள் மித வேகப்பந்துவீச்சுக்கு சாதகமாக இருக்கும் என்பதோடு, ஸ்பின்னர்களுக்கு உதவி செய்யும். இதனால் இந்திய அணியில் நிலைத்து நின்று ஸ்பின்னர்களை வெளுக்கவும் சூழலுக்கேற்ப விளையாடவும் ஒரு பேட்ஸ்மேனின் தேவை உள்ளது. அந்த பணியை ஸ்ரேயாஸ் ஐயரால் செய்ய முடியும் என்று அவர் நிரூபித்துள்ளார். இதனால் அடுத்தடுத்த போட்டிகளிலும் அவர் நிச்சயம் வாய்ப்பை பெறுவார் என்று பார்க்கப்படுகிறது.
Story first published: Sunday, December 3, 2023, 21:23 [IST]
Other articles published on Dec 3, 2023


Click it and Unblock the Notifications