Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

இந்த தம்பிக்கு தான் இனி முதல் மரியாதை.. 2 சீனியர்களுக்கு சேர்த்து செக் வைத்த கேப்டன் கோலி!

சிட்னி : ஆஸ்திரேலிய கிரிக்கெட் தொடரில் இளம் வீரர் ஒருவரை துவக்க வீரராக களமிறக்க முடிவு செய்துள்ளார் கேப்டன் விராட் கோலி.

ஒருநாள் அணி மற்றும் டெஸ்ட் அணியில் இடம் பெற்று இருக்கும் ஷுப்மன் கில் ஆஸ்திரேலிய தொடரில் முக்கியத்துவம் பெறுவார் என கூறப்படுகிறது.

பயிற்சியாளர் ரவி சாஸ்திரி வலைப்பயிற்சியின் போது அவருடன் நீண்ட நேரம் விவாதம் செய்ததும் பரபரப்பை கிளப்பி விட்டுள்ளது.

ஆஸ்திரேலிய தொடர்

ஆஸ்திரேலிய தொடர்

இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் நீண்ட கிரிக்கெட் தொடரில் மோத உள்ளன. முதலில் மூன்று ஒருநாள் போட்டிகள் மற்றும் மூன்று டி20 போட்டிகள் நடக்கக் உள்ளது. அதைத் தொடர்ந்து நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற உள்ளது.

ஒருநாள் தொடர்

ஒருநாள் தொடர்

முதலில் ஒருநாள் தொடர் நவம்பர் 27 முதல் துவங்க உள்ளது. 2020 பிப்ரவரி மாதம் நியூசிலாந்து தொடரில் பங்கேற்ற இந்திய அணி அதன் பின் நீண்ட இடைவெளிக்கு பின் பங்கேற்க உள்ள சர்வதேச கிரிக்கெட் தொடர் இதுதான் என்பதால் பெரும் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.

ரோஹித் சர்மா இல்லை

ரோஹித் சர்மா இல்லை

இந்த ஒருநாள் தொடரில் ரோஹித் சர்மா இடம் பெறவில்லை. அவருக்கு தசைப்பிடிப்பு ஏற்பட்டு அவர் அதற்காக பயிற்சிகள் செய்து மீண்டு வருகிறார். டெஸ்ட் தொடரில் மட்டுமே அவர் பங்கேற்க உள்ளார். இந்த நிலையில், அவருக்கு பதில் யார் ஒருநாள் அணியில் துவக்க வீரராக இறங்க உள்ளனர் என்ற கேள்வி எழுந்துள்ளது.

துவக்க வீரர்கள் யார்?

துவக்க வீரர்கள் யார்?

ஷிகர் தவான் ஒருநாள் அணியில் துவக்க வீரராக களமிறங்குவார். தவான் தவிர அணியில் இடம் பெற்றுள்ள துவக்க வீரர்கள் கேஎல் ராகுல், மயங்க் அகர்வால் மற்றும் ஷுப்மன் கில். இந்த மூவரில் ராகுலுக்கு அணியில் நிச்சயம் இடம் உண்டு.

ராகுல் நிலை

ராகுல் நிலை

ராகுல் அணியின் விக்கெட் கீப்பர் என்பதோடு துணை கேப்டனாகவும் மாறி உள்ளார். ஆனால், அவர் துவக்க வீரராக ஆடுவாரா? என்ற கேள்வியும் உள்ளது. விக்கெட் கீப்பிங் செய்து விட்டு துவக்க வீரராக ஆடுவது கடினம் என்பதால் அவரை நான்காம் வரிசையில் களமிறக்க வாய்ப்பு அதிகம்.

ஷுப்மன் கில்லுக்கு வாய்ப்பு

ஷுப்மன் கில்லுக்கு வாய்ப்பு

மயங்க் அகர்வால் டெஸ்ட் அணி வீரராகவே கருதப்படும் நிலையில், அவரை விட இளம் வீரர் ஷுப்மன் கில்லுக்கு ஒருநாள் போட்டிகளில் ஆட வாய்ப்பு அளிக்கப்படும் என கூறப்படுகிறது. ஐபிஎல் தொடரிலும் அவர் 440 ரன்கள் குவித்து இருந்தார்.

ரவி சாஸ்திரி சூசகம்

ரவி சாஸ்திரி சூசகம்

ஷுப்மன் கில்லுக்கு தான் அணியில் வாய்ப்பு அளிக்கப்படும் என்பதை சூசகமாக கூறி உள்ளார் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி. ஆஸ்திரேலியாவில் இந்திய வீரர்கள் பயிற்சியில் ஈடுபட்டிருக்கும் நிலையில், அதன் இடையே ரவி சாஸ்திரி நீண்ட நேரம் கில்லுடன் பேசினார். அந்த புகைப்படத்தையும் வெளியிட்டுள்ளார்.

இருவருக்கு சிக்கல்

இருவருக்கு சிக்கல்

ஷுப்மன் கில்லுக்கு அணியில் துவக்க வீரராக வாய்ப்பு அளிப்பதன் மூலம் ஷிகர் தவான் மற்றும் ரோஹித் சர்மா இருவருக்கும் சிக்கலை ஏற்படுத்த உள்ளார் கேப்டன் விராட் கோலி. ஷுப்மன் கில் ஆஸ்திரேலிய தொடரில் பெரிய அளவில் ரன் குவித்தால் இருவரில் ஒருவர் தன் இடத்தை இழக்க நேரிடும். தவான் இதில் சிக்க அதிக வாய்ப்பு உள்ளது.

டெஸ்ட் போட்டியில் வாய்ப்பா?

டெஸ்ட் போட்டியில் வாய்ப்பா?

மேலும், ஷுப்மன் கில்லுக்கு டெஸ்ட் அணியிலும் வாய்ப்பு கிடைக்கக் கூடும். ரோஹித் சர்மா முழுமையாக போட்டிகளில் தயார் ஆகி விட்டாரா? என தெரியாத நிலையில், ஷுப்மன் கில்லுக்கு டெஸ்ட் போட்டிகளிலும் துவக்க வீரராக வாய்ப்பு கிடைக்கலாம்.

Story first published: Sunday, November 22, 2020, 13:52 [IST]
Other articles published on Nov 22, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+