Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

இந்த பிரச்சனையால் தான் ரோஹித் சர்மாவை அணியில் சேர்க்கவில்லை.. உண்மையை போட்டு உடைத்த கங்குலி!

மும்பை : ஆஸ்திரேலிய ஒருநாள் தொடர் மற்றும் டி20 தொடருக்கான இந்திய அணியில் முன்னணி வீரர் ரோஹித் சர்மா சேர்க்கப்படவில்லை.

அவர் ஏன் இந்திய அணியில் சேர்க்கப்படவில்லை என்பது மர்மமாக இருந்தது. முதலில் டெஸ்ட் அணியில் கூட அவர் சேர்க்கப்படவில்லை.

அதன் பின்னர் டெஸ்ட் அணியில் சேர்க்கப்பட்டாலும், ஒருநாள், டி20 அணியில் அவர் சேர்க்கப்படவில்லை. இந்த நிலையில் அந்த ரகசியத்தை பிசிசிஐ தலைவர் கங்குலி உடைத்துள்ளார்.

ரோஹித் சர்மா காயம்

ரோஹித் சர்மா காயம்

2020 ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனாக செயல்பட்டு வந்தார் ரோஹித் சர்மா. அவருக்கு லீக் சுற்றின் முதல் பாதி முடிவில் காலில் தசைப்பிடிப்பு ஏற்பட்டது. இதை அடுத்து அவர் சில போட்டிகளில் மட்டும் ஓய்வில் இருக்க முடிவு செய்தார்.

அணியில் நீக்கம்

அணியில் நீக்கம்

அதே நேரத்தில் ஆஸ்திரேலிய செல்லும் இந்திய அணி அறிவிக்கப்பட்டது. அதில் ஒருநாள் அணி, டி20 அணி மற்றும் டெஸ்ட் அணி என மூன்று அணிகளிலும் ரோஹித் சர்மா பெயர் இடம் பெறவில்லை. அவருக்கு காயம் இருப்பதால் அவர் சேர்க்கப்படவில்லை என்றது பிசிசிஐ.

கடும் எதிர்ப்பு

கடும் எதிர்ப்பு

அப்போது அந்த முடிவுக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. இந்திய அணி அறிவிக்கப்பட்ட அதே நேரத்தில் ரோஹித் சர்மா வலைப் பயிற்சியில் ஈடுபட்டு இருந்தார். இதை அடுத்து காயத்தை வைத்து ரோஹித் சர்மா அணியில் இருந்து நீக்கப்படுவதாக ரசிகர்கள் குற்றம் சுமத்தினர்.

ஐபிஎல் ஆட்டம்

ஐபிஎல் ஆட்டம்

இந்த நிலையில் ரோஹித் சர்மா ஐபிஎல் தொடரில் கடைசி லீக் போட்டி மற்றும் பிளே-ஆஃப், இறுதிப் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியில் ஆடினார். இதை அடுத்து அவருக்கு காயம் இல்லை அவர் உடற்தகுதியுடன் இருக்கிறார், அணியில் தேர்வு செய்தே தீர வேண்டும் என கூறப்பட்டது.

டெஸ்ட் அணியில்..

டெஸ்ட் அணியில்..

அதன் பின்னரே அவர் டெஸ்ட் அணியில் மட்டும் சேர்க்கப்பட்டார். ஒருநாள் அணி மற்றும் டி20 அணியில் அவர் அப்போதும் சேர்க்கப்படவில்லை. ரோஹித் சர்மாவிடம் இது பற்றி இந்திய ஆணி பிசியோதெரபிஸ்ட் பேசி விட்டதாக தேர்வுக் குழு கூறியது.

ஏன் நீக்கம்?

ஏன் நீக்கம்?

அப்போதும் கூட ரோஹித் சர்மாவுக்கு என்ன காயம் ஏற்பட்டது. அவர் குணமாக எத்தனை நாட்கள் ஆகும் என யாரும் கூறவில்லை. இந்த நிலையில் பிசிசிஐ தலைவர் கங்குலி இதுபற்றி ஒரு பேட்டியில் விளக்கம் அளித்துள்ளார்.

கங்குலி சொன்ன உண்மை

கங்குலி சொன்ன உண்மை

ரோஹித் சர்மா 70 சதவீதம் மட்டுமே உடற்தகுதி அடைந்துள்ளார். அதனால் தான் அவர் ஆஸ்திரேலிய ஒருநாள் மற்றும் டி20 தொடர்களில் தேர்வு செய்யப்படவில்லை. டெஸ்ட் அணியில் மட்டும் சேர்க்கப்பட்டுள்ளார் என்றார் கங்குலி. இதன் மூலம், ரோஹித் சர்மா காயம் முழுவதுமாக குணமாகாமல் ஐபிஎல் போட்டிகளில் ஆடி உள்ளார் என தெரிய வந்துள்ளது.

டெஸ்ட் தொடர்

டெஸ்ட் தொடர்

ரோஹித் சர்மா முக்கியமான டெஸ்ட் தொடரில் மட்டுமே பங்கேற்க உள்ளார். டெஸ்ட் போட்டிகள் டிசம்பர் 17 அன்று துவங்க உள்ளது. அதற்கு முன் ரோஹித் சர்மா 100 சதவீதம் குணமானால் மட்டுமே போட்டிகளில் பங்கேற்க முடியும்.

கோலி விடுப்பு

கோலி விடுப்பு

இதில் முக்கியமாக கேப்டன் விராட் கோலி டெஸ்ட் தொடரின் முதல் போட்டியில் மட்டுமே பங்கேற்க் இருக்கிறார். அதன் பின் அவர் விடுப்பு எடுத்துக் கொண்டுள்ளார். இந்த நிலையில்தான், ரோஹித் சர்மா டெஸ்ட் அணியில் தேர்வு செய்யப்பட்டார் என்றும் ஒரு வதந்தி உள்ளது.

Story first published: Sunday, November 15, 2020, 16:38 [IST]
Other articles published on Nov 15, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+