Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

4 டக் அவுட், 3 சதங்கள்.. 6 ஆண்டுகளுக்கு பின்.. மீண்டும் மிடில் ஆர்டரில் களமிறங்கும் ரோஹித் சர்மா!

அடிலெய்ட்: சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா 6 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் மிடில் ஆர்டரில் களமிறங்க இருப்பது ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனால் மிடில் ஆர்டரில் ரோஹித் சர்மாவின் செயல்பாடுகள் எப்படி இருந்திருக்கிறது என்பதை பார்க்கலாம்.

ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா தொடக்க வீரராக களமிறங்க மாட்டார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. பெர்த் மைதானத்தில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் கேஎல் ராகுல் - யஷஸ்வி ஜெய்ஸ்வால் இருவரும் இணைந்து மிகச்சிறந்த பார்ட்னர்ஷிப்பை அமைத்தனர். இதனால் தொடக்க கூட்டணியை மாற்ற வேண்டாம் என்று பலரும் அறிவுறுத்தி வந்தனர்.

ind vs aus border gavaskar trophy rohit sharma

கேஎல் ராகுலின் ஆட்டம் தொடக்க வீரராக களமிறங்கும் போது உச்சத்தில் இருப்பதால், இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா தனது இடத்தை விட்டுக் கொடுத்துள்ளார். இதனால் 6 ஆண்டுகளுக்கு பின் ரோஹித் சர்மா மீண்டும் மிடில் ஆர்டரில் விளையாடவுள்ளார். கடைசியாக 2018ஆம் ஆண்டில் தான் ரோஹித் சர்மா மிடில் ஆர்டரில் களமிறங்கி இருந்தார்.

அதையடுத்து தொடக்க வீரராக கொண்டு வரப்பட்ட பின்னரே, ரோஹித் சர்மாவால் இந்திய டெஸ்ட் அணியில் நிரந்தர இடத்தை பிடிக்க முடிந்தது. தற்போது மீண்டும் மிடில் ஆர்டரில் களமிறங்க உள்ளதால், அவரின் ஆட்டம் எப்படி இருக்கும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இதுவரை மிடில் ஆர்டரில் மட்டும் 30 போட்டிகளில் ரோஹித் சர்மா விளையாடி இருக்கிறார்.

நம்பர் 3 பேட்டிங் வரிசையில் 4 போட்டிகளில் விளையாடியுள்ள ரோஹித் சர்மா ஒரேயொரு அரைசதம் உட்பட 107 ரன்களை சேர்த்திருக்கிறார். அதேபோல் நம்பர் 4ல் ஒரு போட்டியில் மட்டும் விளையாடியுள்ள ரோஹித் சர்மா 4 ரன்களை மட்டும் எடுத்திருக்கிறார். தொடர்ந்து நம்பர் 5ல் 9 போட்டிகளில் விளையாடியுள்ள ரோஹித் சர்மா, 3 அரைசதம் உட்பட 437 ரன்களை விளாசி இருக்கிறார்.

பின்னர் நம்பர் 6 பேட்டிங் வரிசையில் 16 போட்டிகளில் விளையாடியுள்ள ரோஹித் சர்மா 3 சதங்கள், 6 அரைசதங்கள் உட்பட 1,037 ரன்களை விளாசி இருக்கிறார். இதனால் ரோஹித் சர்மா நம்பர் 6 பேட்டிங் வரிசையில் தான் நாளைய ஆட்டத்தில் களமிறங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதுமட்டுமல்லாமல் வேகப்பந்துவீச்சாளர்களுக்கு எதிராக ரோஹித் சர்மாவின் ஆட்டம் தொடர்ந்து மோசமாகி வருகிறது.

இதனால் நம்பர் 6 பேட்டிங் வரிசையில் களமிறங்கினால் ரோஹித் சர்மாவால் எளிதாக நேதன் லயனை அட்டாக் செய்ய முடியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அடிலெய்ட் மைதானத்தில் நேதன் லயனை ரோஹித் சர்மா அட்டாக் செய்தால், இந்திய அணியால் நிச்சயம் ஆதிக்கம் செலுத்த முடியும் என்று பார்க்கப்படுகிறது.

Story first published: Thursday, December 5, 2024, 17:56 [IST]
Other articles published on Dec 5, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+