Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

நான் கூட அப்படி செய்ய மாட்டேன்.. 22 வயசு பையனுக்கு எவ்வளவு தைரியம்.. ஜெய்ஸ்வாலை பாராட்டிய குக்!

அடிலெய்ட்: இந்திய அணியின் இளம் நட்சத்திர வீரரான ஜெய்ஸ்வால் ஆஸ்திரேலியா அணியின் மிட்சல் ஸ்டார்க்கை ஸ்லெட்ஜிங் செய்தது மிகப்பெரிய ஆச்சரியத்தை கொடுப்பதாக இங்கிலாந்து ஜாம்பவான் அலைஸ்டர் குக் கூறியுள்ளார். 22 வயதிலேயே கிளாஸான பேட்ஸ்மேனாக உருவாகியுள்ள ஜெய்ஸ்வாலின் மன உறுதி தன்னை ஈர்த்துள்ளதாக பாராட்டியுள்ளார்.

கடந்த 15 ஆண்டுகளில் மிகச்சிறந்த பேட்ஸ்மேன்களின் பட்டியலை எடுத்துக் கொண்டால் இங்கிலாந்து முன்னாள் கேப்டன் அலைஸ்டர் குக்கின் பெயர் நிச்சயம் இடம்பெறும். இந்தியா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து என்று அனைத்து நாடுகளில் தொடக்க வீரராக களமிறங்கி அபாரமாக செயல்பட்டுள்ள குக், இந்திய அணியின் ஜெய்ஸ்வாலை வியந்து பாராட்டியுள்ளார்.

india vs australia test match sachin tendulkar yashasvi jaiswal vs

பெர்த் டெஸ்ட் போட்டியின் போது மிட்சல் ஸ்டார்க் - ஜெய்ஸ்வால் இடையே சில வார்த்தை மோதல் ஏற்பட்டது. அப்போது திடீரென ஜெய்ஸ்வால், நீங்கள் வீசும் பந்துகள் மிகவும் ஸ்லோவாக வருகிறது என்று பதிலடி கொடுத்தார். ஆஸ்திரேலியா மண்ணில் வைத்து ஜாம்பவான் பவுலரான மிட்சல் ஸ்டார்க்கை ஜெய்ஸ்வால் இப்படி ஸ்லெட்ஜிங் செய்தது எப்படியான விளைவுகளை ஏற்படுத்தும் என்பதை பலரும் அறிவர்.

ஆனால் எந்த கவலையும் இல்லாமல் ஸ்டார்க்கை அசால்ட்டாக ஜெய்ஸ்வால் ஸ்லெட்ஜிங் செய்தார். அதுமட்டுமல்லாமல் ஆஸ்திரேலியா மண்ணில் களமிறங்கிய முதல் டெஸ்ட் போட்டியிலேயே யஷஸ்வி ஜெய்ஸ்வால் 297 பந்துகளை எதிர்கொண்டு 161 ரன்களை விளாசி அசத்தினார். இதனால் சுனில் கவாஸ்கர், சச்சின் டெண்டுல்கர், விராட் கோலி வரிசையில் ஜெய்ஸ்வால் இடம்பிடித்தார்.

இதன் காரணமாக ஆஸ்திரேலியா மீடியாக்கள் ஜெய்ஸ்வால், ”புதிய கிங்” என்று கொண்டாடி வருகின்றன. இதுகுறித்து இங்கிலாந்து ஜாம்பவான் அலைஸ்டர் குக் பேசுகையில், பெர்த் டெஸ்டின் 3வது நாளில் மிட்சல் ஸ்டார்க்கை ஸ்லெட்ஜிங் செய்ததோடு மட்டும் நிற்காமல், அவர் வீசும் பந்துகளில் வேகமில்லை என்று ஜெய்ஸ்வால் கூறினார். ஆஸ்திரேலியா அணியின் மிட்சல் ஸ்டார்க்கை நானும் எதிர்கொண்டுள்ளேன்.


மிட்சல் ஸ்டார்க் ஒருபோதும் மித வேகத்தில் பந்துகளை வீச மாட்டார். ஒருவேளை அவரின் பந்துகளில் வேகம் குறைவாக இருந்தால், அதனை நிச்சயம் அவரிடம் சொல்லி இருக்கவும் மாட்டேன். ஏனென்றால் அபப்டி சொல்வதனால், மிட்சல் ஸ்டார்க் இன்னும் ஆக்ரோஷமாக வருவார். ஆனால் 22 வயதிலேயே ஸ்டார்க்கிடம் இதனை சொல்வதற்கு எவ்வளவு மன உறுதி இருந்திருக்க வேண்டும்.. ஜெய்ஸ்வால் ஒரு கிளாசிக் வீரர்.


இங்கிலாந்து அணிக்கு எதிராக ஜெய்ஸ்வால் அடித்த சதங்களை என்னால் ரசிக்க முடியவில்லை. ஆனால் ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக ஜெய்ஸ்வாலின் கொண்டாட்டங்கள் மகிழ்ச்சி அளிக்கிறது. முதல் 15 டெஸ்ட் போட்டிகளில் எந்த இந்திய வீரரும் செய்யாத ஏராளமான சாதனைகளை ஜெய்ஸ்வால் செய்துள்ளதாக பாராட்டியுள்ளார்.

Story first published: Wednesday, December 4, 2024, 8:36 [IST]
Other articles published on Dec 4, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+