Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

IND vs AUS: அடிலெய்ட் டெஸ்ட் போட்டி.. ஒரேயொரு மாற்றம்.. ஆஸ்திரேலியா பிளேயிங் லெவன் அறிவிப்பு!

அடிலெய்ட்: இந்திய அணிக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டிக்கான ஆஸ்திரேலியா அணியின் பிளேயிங் லெவன் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் போட்டியில் காயம் காரணமாக வேகப்பந்துவீச்சாளர் ஹேசல்வுட் விலகியதால், அவரது இடத்தில் ஸ்காட் போலண்ட் சேர்க்கப்பட்டிருக்கிறார்.

பெர்த் மைதானத்தில் நடைபெற்ற இந்திய அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியா அணி 295 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தது. கட்டாயம் வெல்வோம் என்ற நம்பிக்கையுடன் களமிறங்கிய ஆஸ்திரேலியா அணி, எதிர்பாராத வகையில் வரலாற்று தோல்வியை அடைந்தது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

ind vs aus border gavaskar trophy rohit sharma

இந்த நிலையில் அடிலெய்ட் மைதானத்தில் இந்திய அணிக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியா அணி களமிறங்கவுள்ளது. பகலிரவு டெஸ்ட் போட்டி என்பதால், ஆஸ்திரேலியா அணி வீரர்கள் சிறப்பாக தயாராகி வருகின்றனர். இதுவரை ஆஸ்திரேலியா அணி விளையாடியுள்ள பகலிரவு டெஸ்ட் போட்டியில் ஒரேயொரு முறை மட்டுமே தோல்வியை சந்தித்துள்ளது.

இதனால் அடிலெய்ட் மைதானத்தில் இந்திய அணிக்கு தக்க பதிலடி கொடுக்கப்படும் என்று ஆஸ்திரேலியா ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர். இந்த நிலையில் 2வது டெஸ்ட் போட்டிக்கான ஆஸ்திரேலியா அணியின் பிளேயிங் லெவன் அறிவிக்கப்பட்டுள்ளது. அதில் முதல் டெஸ்ட் போட்டியில் விளையாடிய வீரர்களில் ஜோஷ் ஹேசல்வுட் மட்டுமே காயம் காரணமாக விலகி இருக்கிறார்.

இதனால் அவரது இடத்தில் அனுபவ வேகப்பந்துவீச்சாளரான ஸ்கார் போலண்ட் சேர்க்கப்பட்டிருக்கிறார். பிங்க் பால் டெஸ்ட் போட்டிகளில் அவரின் பவுலிங் சராசரி வெறும் 1.8ஆக மட்டுமே உள்ளது. இதனால் இந்திய அணிக்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாக இருப்பார் என்று கணிக்கப்படுகிறது. அதேபோல் ஆல்ரவுண்டர் மிட்சல் மார்ஷ் காயம் காரணமாக சில நாட்கள் ஓய்வில் இருந்தார்.

ஆனால் முதல் டெஸ்ட் போட்டிக்கும் 2வது டெஸ்ட் போட்டிக்கும் 10 நாட்கள் இடைவெளி இருந்ததால், மிட்சல் மார்ஷ் காயத்தில் குணமடைந்திருப்பது தெரிய வந்துள்ளது. இதனால் வழக்கம் போல் ஆஸ்திரேலியா அணி 4 வேகப்பந்துவீச்சாளர்கள் மற்றும் ஒரு ஸ்பின்னர் என்று பவுலிங் கூட்டணியுடன் களமிறங்க உள்ளது. பேட்டிங் வரிசையில் மாற்றம் இருக்கும் என்று பார்க்கப்பட்ட நிலையில், எந்த மாற்றமும் செய்யப்படவில்லை.

ஆஸ்திரேலியா பிளேயிங் லெவன்: உஸ்மான் கவாஜா, நேதன் மெக்ஸ்வீனி, மார்னஸ் லபுஷேன், ஸ்டீவ் ஸ்மித், டிராவிஸ் ஹெட், மிட்சல் மார்ஷ், அலெக்ஸ் கேரி, மிட்சல் ஸ்டார்க், பேட் கம்மின்ஸ், ஸ்காட் போலண்ட், நேதன் லயன்

Story first published: Thursday, December 5, 2024, 17:02 [IST]
Other articles published on Dec 5, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+