Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

4 விக்கெட் எடுத்து என்ன புண்ணியம்? இப்படி செஞ்சுட்டீங்களே பண்டியா!! #IndvsAus #T20

Recommended Video

தொடர்ந்து 2 விக்கெட்கள், பண்டியாவோட ஹாட்ரிக் மிஸ் ஆயிடுச்சு

சிட்னி : இந்தியா - ஆஸ்திரேலியா இடையே நடந்த 3வது டி20 போட்டியில் இந்தியாவின் க்ருனால் பண்டியா 4 விக்கெட்கள் வீழ்த்தினார்.

இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பேட்டிங் தேர்வு செய்தது. இந்திய அணியின் பந்துவீச்சு சுமாராகவே இருந்தது.

க்ருனால் பண்டியா 4 விக்கெட்கள் வீழ்த்திய போதும், ஆஸ்திரேலியா எளிதாக ரன்களை குவித்தது.

ஆறுதல் அளித்த குல்தீப்

ஆறுதல் அளித்த குல்தீப்

டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி 8 ஓவர்கள் வரை விக்கெட் இழக்காமல் ஆடியது. இந்திய அணி தடுமாறிய போது குல்தீப் யாதவ் பின்ச் விக்கெட்டை எடுத்து இந்திய அணிக்கு ஆறுதல் அளித்தார்.

2 விக்கெட் எடுத்த பண்டியா

2 விக்கெட் எடுத்த பண்டியா

அடுத்த ஓவரில் க்ருனால் பண்டியா முதல் இரண்டு பந்துகளில் 2 விக்கெட்கள் வீழ்த்தி அசத்தினார். பின்னர் மாக்ஸ்வெல் மற்றும் மெக்டெர்மாட் விக்கெட்டையும் வீழ்த்தினார் க்ருனால் பண்டியா. இந்த ஓவரில் தன் முதல் ஹாட்ரிக் விக்கெட் எடுக்கும் வாய்ப்பில் கோட்டை விட்டார்.

[வரிசையாக 3 பந்துகள்.. 2 ரிவ்யூ.. 2 விக்கெட்கள்.. பண்டியாவோட ஹாட்ரிக் தான் மிஸ் ஆயிடுச்சு #IndvsAus]

முதல் 2 போட்டிகளில் பண்டியா

முதல் 2 போட்டிகளில் பண்டியா

க்ருனால் பண்டியா இந்த தொடரின் முதல் போட்டியில் பெரிய அளவில் செயல்படவில்லை. 4 ஓவர்களில் 55 ரன்கள் கொடுத்த அவர் விக்கெட் எதுவும் வீழ்த்தவில்லை. இரண்டாவது போட்டியில் ஆஸ்திரேலிய பேட்டிங் தடுமாறிய நிலையில், 4 ஓவர்களில் 26 ரன்கள் மட்டுமே கொடுத்து நம்பிக்கை அளித்தார்.

அதிக ரன்களை வாரி வழங்கினார்

அதிக ரன்களை வாரி வழங்கினார்

தற்போது 3வது டி20 போட்டியில் க்ருனால் பண்டியா நான்கு முக்கிய விக்கெட்களை வீழ்த்தி அசத்தினாலும், அதிக ரன்களை வாரி வழங்கினார். 4 ஓவர்கள் வீசிய அவர் 36 ரன்கள் வழங்கினார். ஓவருக்கு 9 ரன்கள் வழங்கி உள்ளார் பண்டியா. டி20 போட்டிகளில் விக்கெட் வீழ்த்துவதை விட ரன்கள் குறைவாக கொடுப்பதும் முக்கியம். அந்த விஷயத்தில் சறுக்கியுள்ளார் பண்டியா.

எல்லோருமே வாரி வழங்கினர்

எல்லோருமே வாரி வழங்கினர்

இன்று க்ருனால் பண்டியா மட்டுமல்லாது புவனேஸ்வர் குமார், பும்ரா, கலீல் அஹ்மது என மூன்று பந்துவீச்சாளர்கள் ஓவருக்கு 8-9 என வாரி வழங்கினார்கள். குல்தீப் மட்டுமே சிறப்பாக பந்து வீசி ஓவருக்கு 4.75 ரன்கள் மட்டுமே கொடுத்தார்.

இது பத்தாது பண்டியா

இது பத்தாது பண்டியா

எனினும், இந்த டி20 தொடரின் சிறந்த பந்துவீச்சு அவருடையது தான். டி20 போட்டிகளில் 4 விக்கெட்கள் வீழ்த்துவது கடினம். அதை சாதித்துள்ளார் பண்டியா. இந்த போட்டிக்கான சிறந்த வீரர் விருதையும் அவரே வென்றார். விக்கெட் எடுத்து பெயர் பெற்று இருக்கும் பண்டியா, ரன்கள் கொடுப்பதில் சிக்கனமாக இருக்க வேண்டும். அப்போது தான் இந்திய அணியில் நிலைக்க முடியும்.

Story first published: Sunday, November 25, 2018, 18:05 [IST]
Other articles published on Nov 25, 2018
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+