Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஒன் மேன் ஷோ.. அப்படினா என்னனு தெரியுமா.. பாண்டிங், கில்கிறிஸ்ட் வரிசையில் இணைந்த டிராவிஸ் ஹெட்!

அகமதாபாத்: உலகக்கோப்பை தொடரின் இறுதிப்போட்டியில் சதம் விளாசிய 3வது ஆஸ்திரேலியா வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார் டிராவிஸ் ஹெட்.

இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான உலகக்கோப்பை இறுதிப்போட்டி அகமதாபாத் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி கேப்டன் பேட் கம்மின்ஸ் பந்துவீச்சை தேர்வு செய்தார். இதையடுத்து களமிறங்கிய இந்திய அணி 50 ஓவர்களில் 240 ரன்களுக்கு ஆல் அவுட்டாகியது. அதிகபட்சமாக கேஎல் ராகுல் 66 ரன்களும், விராட் கோலி 54 ரன்களும் சேர்த்தனர்.

INDIA vs AUSTRALIA: Travis Head joins in the elite list with Ricky Ponting and Adam Gilchrist who scored Century in World Cup Finals

இதையடுத்து ஆஸ்திரேலியா அணியின் டேவிட் வார்னர் - டிராவிஸ் ஹெட் கூட்டணி களமிறங்கியது. இதில் டேவிட் வார்னர் 7 ரன்களிலும், அவரைத் தொடர்ந்து வந்த மிட்செல் மார்ஷ் 15 ரன்களிலும், பின்னர் வந்த ஸ்டீவ் ஸ்மித் 4 ரன்களிலும் ஆட்டமிழந்து வெளியேறினர். இதனால் ஆஸ்திரேலியா அணி 47 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.

இருப்பினும் இணைந்த டிராவிஸ் ஹெட் - லபுஷேன் கூட்டணி ரன் ரேட்டை பற்றி கவலைப்படாமல் நிதானமாக ரன்கள் சேர்த்தது. பும்ரா மற்றும் ஷமி இருவரும் அட்டாக்கில் இருந்து வெளியேறிய பின், குல்தீப் யாதவ் - ஜடேஜா கூட்டணியை வைத்து ரோகித் சர்மா அட்டாக் செய்தார். அப்போது குல்தீப் யாதவ் பந்தில் ஒரு அபார சிக்சர்களை விளாசி டிராவிஸ் ஹெட் அதிர்ச்சி கொடுத்தார்.

சிறப்பாக ஆடிய டிராவிஸ் ஹெட் பின்னர் அதிரடியாக அரைசதம் கடக்க, மறுமுனையில் விக்கெட்டை பறி கொடுக்கக் கூடாது என்ற முடிவுடன் லபுஷேன் பேட்டிங் செய்தார். கிட்டத்தட்ட ஒரு டெஸ்ட் இன்னிங்ஸை தான் லபுஷேன் ஆடினார். ஆனால் இவருக்கும் சேர்த்து டிராவிஸ் ஹெட் பவுண்டரியும், சிக்சருமாய் வெளுத்து கட்டினார். சிறப்பாக ஆடிய அவர், 95 பந்துகளில் சதம் விளாசி சாதனை படைத்தார்.

இதற்கு முன் 2003 உலகக்கோப்பை தொடரில் இந்திய அணிக்கு எதிரான இறுதிப்போட்டியில் ரிக்கி பாண்டிங் 140 ரன்களை விளாசினார். அதேபோல் 2007 உலகக்கோப்பை தொடரில் இலங்கை அணிக்கு எதிரான இறுதிப்போட்டியில் ஆடம் கில்கிறிஸ்ட் 149 ரன்களை விளாசினார். அவர்கள் இருவருக்கு பின் உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் சதம் விளாசிய 3வது வீரர் என்ற சாதனையை டிராவிஸ் ஹெட் சாதனை படைத்துள்ளார்.

Story first published: Sunday, November 19, 2023, 21:15 [IST]
Other articles published on Nov 19, 2023
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+