Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஆஸ்திரேலியாவின் சூப்பர்ஸ்டார் வீரராக வருவார்.. அந்த வீரரின் எதிர்காலத்தை அன்றே கணித்த ஷேன் வார்னே!

அகமதாபாத்: ஆஸ்திரேலியா அணியின் இளம் வீரரான டிராவிஸ் ஹெட் எதிர்காலம் குறித்து 2016ஆம் ஆண்டு மறைந்த ஜாம்பவான் ஷேன் வார்னே பதிவிட்ட ட்வீட் சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகி வருகிறது.

உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலியா அணியிடம் 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்திய அணி தோல்வியடைந்தது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய இந்திய அணி 50 ஓவர்களில் 240 ரன்கள் மட்டுமே எடுத்து ஆல் அவுட்டாகியது. அதிகபட்சமாக கேஎல் ராகுல் 66 ரன்களும், விராட் கோலி 54 ரன்களும் சேர்த்தனர். இதன்பின் களமிறங்கிய ஆஸ்திரேலியா அணி 43 ஓவர்களில் இலக்கை எட்டி வெற்றிபெற்றது.

INDIA vs AUSTRALIA: Travis Head will be future Superstar player for Australia tweets Shane Warne in 2016

இதன் மூலம் ஆஸ்திரேலியா அணி 6வது முறையாக உலகக்கோப்பையை வென்று சாதனை படைத்தது. அதிரடியாக ஆடிய டிராவிஸ் ஹெட் 120 பந்துகளில் 137 ரன்கள் எடுத்து ஆட்டநாயகன் விருதை தட்டி சென்றார். ஏற்கனவே உலக டெஸ்ட் சாம்பியன்ஷுப் தொடரில் இந்திய அணியின் எமனாக இருந்த அவர், மீண்டும் நேற்று வெற்றியை தட்டிப் பறித்தார்.

இதன் மூலம் ஆஸ்திரேலியா அணியின் சூப்பர் ஸ்டாராக வீரராக டிராவிஸ் ஹெட் உயர்ந்துள்ளார். 2016ஆம் ஆண்டு முதல் ஆஸ்திரேலியா அணிக்காக விளையாடி வரும் டிராவிஸ் ஹெட் அண்மை காலங்களில் மிகமுக்கியமான வீரராக மாறியுள்ளார். 7 ஆண்டுகளுக்கு மேலாக ஆஸ்திரேலியா அணிக்காக விளையாடினாலும், டிராவிஸ் ஹெட் இதுவரை வெறும் 64 ஒருநாள் போட்டிகளில் மட்டுமே விளையாடி இருக்கிறார்.

INDIA vs AUSTRALIA: Travis Head will be future Superstar player for Australia tweets Shane Warne in 2016

இவர் ஆஸ்திரேலியா அணிக்காக அறிமுகமான சில மாதங்களிலேயே ஆஸ்திரேலியா ஜாம்பவான் ஷேன் வார்னே தனது எக்ஸ் பக்கத்தில், டிராவிஸ் ஹெட் என்ற கிரிக்கெட் வீரருக்கு மிகப்பெரிய ரசிகன் நான். நிச்சயம் அவர் வரும் காலங்களில் ஆஸ்திரேலியா அணியின் அனைத்து வடிவங்களுக்குமான சூப்பர்ஸ்டார் வீரராக இருப்பார் என்று பதிவிட்டுள்ளார்.

2016ஆம் ஆண்டு டிசம்பர் 6ஆம் தேதி ஷேன் வார்னே பதிவிட்ட ட்வீட், தற்போது மீண்டும் சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகி வருகிறது.அவர் கூறியதை போல் டிராவிஸ் ஹெட் அனைத்து வடிவிலான கிரிக்கெட்டிலும் சூப்பர்ஸ்டாராக திகழ்ந்து வருகிறார். ஐபிஎல் தொடரின் முதல் சீசனின் போது ஜடேஜாவையும் இப்படிதான் பாராட்டி இருந்தார். இதன் மூலம் ஷேன் வார்னேவின் கணிப்புகள் என்றும் தவறாது என்று ரசிகர்கள் கருத்து வருகின்றனர்.

Story first published: Monday, November 20, 2023, 15:15 [IST]
Other articles published on Nov 20, 2023
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+