Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

இந்தியா Vs ஆஸி. நாளை பயிற்சி ஆட்டம்.. முகமது ஷமி களமிறங்க வாய்ப்பு.. பிளேயிங் லெவன் இதோ

பிரிஸ்பேன் : டி20 உலககோப்பை கிரிக்கெட் தொடருக்கான ஐசிசி நடத்தும் அதிகாரப்பூர்வ பயிற்சி ஆட்டம் நாளை நடைபெறுகிறது.

இதில் இந்திய அணி, நடப்பு சாம்பியனான ஆஸ்திரேலியா உடன் மோதுகிறது. இந்த ஆட்டம் பிரிஸ்பேன் மைதானத்தில் இந்திய நேரப்படி காலை 8.30 மணிக்கு தொடங்குகிறது.

இந்திய அணியில் இதுவரை களமிறங்காத விராட் கோலி, முகமது ஷமி ஆகியோருக்கு வாய்ப்பு வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

குழப்பம்

குழப்பம்

இந்திய அணியை பொறுத்தவரை ரோகித், ராகுல், கோலி, சூர்யகுமார், ஹர்திக், தினேஷ் கார்த்திக் 6 வீரர்களின் இடம் சரியாக உள்ளது. 7வது இடத்தில் அக்சர் பட்டேல் களமிறங்கினாலும், அவருடைய பேட்டிங் ஒரு குறையாக பார்க்கப்படுகிறது. இதே போன்று 2வது சுழற்பந்துவீச்சாளராக அஸ்வினை சேர்ப்பதா இல்லை சாஹலை சேர்ப்பதா என்ற குழப்பம் நீடிக்கிறது.

‘முகமது ஷமி

‘முகமது ஷமி

இதே போன்று 3 வேகப்பந்துவீச்சாளர்கள் யார் என்பது குறித்து இன்னும் சந்தேகம் நீடிக்கிறது. முகமது ஷமி 2 மாதத்திற்கு பிறகு அணிக்கு திரும்பியுள்ளார். இன்னும் அவர் எப்படி பந்துவீசுகிறார் என்பது குறித்து தெரியவில்லை. இதனால் நாளைக்கு முகமது ஷமியை பிளேயிங் லெவனில் இந்தியா பயன்படுத்த வாய்ப்பு உள்ளது.

எந்த யுத்தி பயன்படுத்தப்படும்?

எந்த யுத்தி பயன்படுத்தப்படும்?

மற்ற 2 வீரர்கள் ஒரு வீரர் புவனேஸ்வர் குமாராக தான் இருப்பார். இதனால் எஞ்சிய 1 இடத்தை யார் பிடிப்பார்கள் என்பதில் ஆர்ஸ்தீப் சிங்கிற்கும், ஹர்சல் பட்டேலுக்கும் இடையே கடும் போட்டி ஏற்படும். இந்த நிலையில் பயிற்சி ஆட்டத்தில் 11 பேட்ஸ்மேன்கள், 11 பந்துவீச்சாளர்கள் என அனைத்து வீரர்களையும் பயன்படுத்தும் வாய்ப்பு வழங்கப்படும். இதனை தான் நாளைய போட்டியில் இந்தியா பயன்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

உத்தேச அணி

உத்தேச அணி

1, ராகுல், 2, ரோகித், 3, விராட் கோலி, 4, சூர்யகுமார் , 5, ஹர்திக், 6, தினேஷ் கார்த்திக், 7, அக்சர் பட்டேல், 8, அஸ்வின். 9, புவனேஸ்வர் குமார், 10, முகமது ஷமி, 11, ஆர்ஸ்தீப் சிங்

நேரம் - திங்கட்கிழமை காலை 8.30 மணி நேரலை - ஸ்டார் ஸ்போர்ட்ஸ் 1, டிஸ்னி ஹாட் ஸ்டார்

Story first published: Sunday, October 16, 2022, 20:14 [IST]
Other articles published on Oct 16, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+