Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

IND vs AUS: 3வது டெஸ்ட்.. எத்தனை மணிக்கு ஆட்டம் தொடங்கும்? எந்த சேனல், ஓடிடியில் பார்க்கலாம்?

பிரிஸ்பேன்: இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 3வது டெஸ்ட் போட்டி நடக்கவுள்ள மைதானம், ஆட்டம் தொடங்கும் நேரம், செஷன்களுக்கான இடைவேளை மற்றும் நேரலை உள்ளிட்ட முழு விவரங்களை தெரிந்து கொள்ளலாம். இந்திய நேரப்படி அதிகாலையிலேயே ஆட்டம் தொடங்கவுள்ளதால் ரசிகர்கள் பலரும் அதிக எதிர்பார்ப்புடன் இருக்கின்றனர்.

இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 3வது டெஸ்ட் போட்டி காபா மைதானத்தில் நாளை அதிகாலை தொடங்கவுள்ளது. பெர்த் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வென்ற நிலையில், அடிலெய்டு டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியா அணி வென்றது. இதனால் இரு அணிகளும் தலா ஒரு வெற்றியுடன் 1-1 என்ற கணக்கில் சமநிலையில் உள்ளன.

ind vs aus border gavaskar trophy rohit sharma

அடுத்த 3 டெஸ்ட் போட்டிகளில் எந்த அணி 2 போட்டிகளை வெல்கிறதோ, அந்த அணியே பார்டர் கவாஸ்கர் கோப்பையை கைப்பற்ற முடியும். இதற்கு காபா மைதானத்தில் நடக்கவுள்ள டெஸ்ட் போட்டியில் வெல்வது முக்கியமானதாக கருதப்படுகிறது. காபா மைதானத்தில் இந்திய அணி எப்போதும் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்துள்ளது.

2003ல் இந்திய அணி விளையாடிய போது சவுரவ் கங்குலி தனியாக போராடி அபார சதத்தை விளாசுவார். இதனால் அந்த போட்டியை இந்திய அணியால் டிரா செய்ய முடிந்தது. அதேபோல் 2021ஆம் ஆண்டு நடைபெற்ற ஆட்டத்தில் ரிஷப் பண்ட் மற்றும் சுப்மன் கில்லின் அபார ஆட்டத்தால் இந்திய அணி வரலாற்று சிறப்புமிக்க வெற்றியை பெற்று சாதனை படைத்தது.

இதனால் நாளைய ஆட்டம் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இந்த நிலையில் நாளைய ஆட்டம் காலை 5.50 மணிக்கு தொடங்க உள்ளது தெரிய வந்துள்ளது. பெர்த், அடிலெய்டு, சிட்னி மற்றும் மெல்போர்ன் ஆகிய 4 நகரங்களை விடவும் பிரிஸ்பேனில் நேர வித்தியாசம் அதிகமாக இருக்கும். இதனால் அந்நாட்டு நேரப்படி காலை 10.20 மணிக்கு தான் முதல் பந்து வீசப்படவுள்ளது.

அதற்கு 30 நிமிடங்களுக்கு முன்பாகவே டாஸ் போடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. நாளை முதல் வரும் 18ஆம் தேதி வரை ஒவ்வொரு நாளும் 3 செஷன்கள் ஆட்டம் நடக்கவுள்ளது. இந்திய நேரப்படி முதல் செஷன் காலை 5.50 மணிக்கு தொடங்கப்பட்டு 7.50 மணி வரை நடக்கும். அதன்பின் 40 நிமிடங்கள் உணவு இடைவேளை ஒதுக்கப்படும். இதன்பின் 2வது செஷன் காலை 8.30 மணிக்கு தொடங்கப்பட்டு, 10.30 மணி வரை நடக்கும்.

தொடர்ந்து தேநீர் இடைவேளை 20 நிமிடங்கள் அளிக்கப்படும். இதன்பின்னர் கடைசியாக 10.50 மணிக்கு 3வது செஷன் தொடங்கப்பட்டு மதியம் 12.50 மணிக்கு ஆட்டம் முடிவுக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் போட்டியை இந்தியாவில் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் நேரலையில் பார்க்கலாம். ஓடிடியை பொறுத்தவரை டிஸ்னி + ஹாட்ஸ்டார் செயலியில் நேரலையில் பார்க்க முடியும்.

Story first published: Friday, December 13, 2024, 15:07 [IST]
Other articles published on Dec 13, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+