For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

IND vs AUS Final - 5 வீரர்களுக்கு இன்று தான் கடைசி உலக கோப்பை போட்டி.. வெற்றியுடன் செல்வார்களா?

அகமதாபாத் : ஐசிசி உலக கோப்பை இறுதிப்போட்டியில் இன்று இந்தியாவும் ஆஸ்திரேலியாவும் பல பரிட்சை நடத்துகிறது. இந்த போட்டி மதியம் 2 மணிக்கு அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெறுகிறது.

இந்த போட்டிக்கான டிக்கெட்டுகள் அனைத்தும் விற்று தீர்ந்து விட்டது. இந்த நிலையில் இன்றைய ஆட்டத்தில் விளையாடும் ஐந்து வீரர்கள் இனி உலகக் கோப்பை போட்டியில் பங்கேற்க மாட்டார்கள்.ஆம், தங்களுடைய கடைசி உலகக் கோப்பை லீக் ஆட்டத்தில் இன்று விளையாடப் போகும் வீரர்கள் குறித்து தற்போது பார்க்கலாம்.

India vs australia world cup final 2023 - 5 cricketers Playing in their last odi CWC Matches

இந்தப் பட்டியலில் முதலில் இருப்பவர் இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா. ரோகித் சர்மாவுக்கு தற்போது 36 வயது 202 நாட்கள் ஆகிறது. அடுத்த உலகக் கோப்பை நடைபெறும் போது ரோகித் சர்மாவுக்கு 40 வயதாகி இருக்கும். இதனால் ரோகித் சர்மா அடுத்த உலக கோப்பை தொடரில் பங்கேற்க முடியாது. எனவே இதுதான் இவருக்கு கடைசி உலகக் கோப்பை தொடராகும். இதில் அவர் வெற்றியுடன் வரலாற்று சாதனை படைத்து திரும்ப வேண்டும் என ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.

இதேபோன்று இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலிக்கும் இதுதான் கடைசி உலகக் கோப்பை போட்டியாகும். விராட் கோலிக்கு தற்போது 35 வயது 13 நாட்கள் ஆகிறது. அடுத்த உலக கோப்பை வரும்போது கோலிக்கு 39 வயதாகி இருக்கும். அப்போது அவர் ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடுவதற்கு வாய்ப்பு மிகவும் குறைவு. இதனால் கோலி, சாம்பியன் பட்டத்தை வென்று வரலாற்று சாதனையுடன் உலக கோப்பைக்கு முழுக்கு போடுவார்.

இதேபோன்று இந்திய அணியின் நட்சத்திர வேகப்பந்துவீச்சாளர் முகமது சமிக்கும் இன்றுதான் கடைசி உலகக் கோப்பை போட்டியாகும். சமிக்கு தற்போது 33 வயதாகிறது. அடுத்த உலக கோப்பை வரும்போது அவருக்கு 37 வயதாகி இருக்கும். சமிக்கு ஏற்கனவே உடல் அளவில் நிறைய காயங்கள் ஏற்படுகிறது. இதனால் அவர் இன்னும் ஒரு ஆண்டுகளில் ஓய்வு பெற்று விடுவார் என்பதால் அடுத்த உலக கோப்பை வரை விளையாட வாய்ப்பு இல்லை. இதனால் சாம்பியன் பட்டத்துடன் அவர் திரும்புவார் என ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.

இந்த பட்டியலில் நான்காவது இடத்தை பிடித்திருப்பவர் ஆஸ்திரேலிய கிரிக்கெட் ஜாம்பவான் டேவிட் வார்னர். வார்னருக்கு 37 வயது ஆகிறது. அடுத்த உலகக் கோப்பை நடைபெறும் போது அவருக்கு 41 வயதாகி இருக்கும். வார்னர் ஏற்கனவே சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறும் திட்டத்தில் தான் இருக்கிறார். வார்னர் ஏற்கனவே உலகக் கோப்பை வென்று இருந்தாலும் கடைசியாக விளையாடும் இந்த தொடரில் சாம்பியன் பட்டத்தை வெல்ல வேண்டும் என அவர் நினைக்கிறார்.

இந்தப் பட்டியலில் ஐந்தாவது ஆக இடம் பெற்றிருப்பவர் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் ஸ்மித். ஸ்மித்துக்கு தற்போது 34 வயதாகிறது. அடுத்த உலகக் கோப்பை நடைபெறும் போது அவருக்கு 38 வயதாகி இருக்கும். ஆஸ்திரேலிய வீரர்கள் பெரும்பாலும் அவ்வளவு வயது வரை விளையாட மாட்டார்கள். மேலும் ஸ்மித்தும் ஒருநாள் கிரிக்கெட்டில் இருந்து விடைபெறும் எண்ணத்தில் தான் இருக்கிறார். இதனால் அவரும் சாம்பியன் பட்டத்துடன் விடை பெற ஆசைப்படுகிறார்.

Story first published: Sunday, November 19, 2023, 6:10 [IST]
Other articles published on Nov 19, 2023
English summary
India vs australia world cup final 2023 - 5 cricketers Playing in their last odi CWC Matches IND vs AUS Final - 5 வீரர்களுக்கு இன்று தான் கடைசி உலக கோப்பை போட்டி.. வெற்றியுடன் செல்வார்களா?
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+