Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

IND vs AUS Final - ஆஸ்திரேலியா ஒன்னும் வீழ்த்தவே முடியாத அணி இல்ல..எவ்வளவு வீக்னஸ் இருக்குனு பாருங்க

மும்பை : ஐசிசி உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் இறுதிப்போட்டியில் இந்தியாவும் ஆஸ்திரேலியாவும் பல பரிட்சை நடத்த போகிறது. இந்த போட்டி ஞாயிற்றுக்கிழமை அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெறுகிறது.

ஆஸ்திரேலியா இறுதிப் போட்டிக்கு வந்துவிட்டது என தெரிந்த உடனே பல ரசிகர்கள் அச்சச்சோ அவ்வளவுதான் என்ற பாணியில் பேசி வருகிறார்கள். ஆனால் ஆஸ்திரேலியா குறித்து அவ்வளவு பயப்படத் தேவையில்லை. ஆஸ்திரேலிய ஒன்றும் வீழ்த்தவே முடியாத ரிக்கி பாண்டிங் அணி கிடையாது.

India vs australia world cup final 2023 - Aussies are not unbeatable team - here is the reason

அவர்களுக்கு தற்போது பல வீக்னஸ்கள் இருக்கிறது. அது என்னவென்று தற்போது பார்க்கலாம். இந்த உலகக்கோப்பை தொடரில் ஆஸ்திரேலிய அணி ஏற்கனவே இந்தியாவிடம் லீக் போட்டியில் தோல்வியை தழுவி இருக்கிறது. அது மட்டுமில்லாமல் ஆஸ்திரேலிய அணி பேட்டிங்கில் பல குறைபாடுகள் இருக்கிறது. அந்த அணி வீரர்கள் சுழற் பந்துவீச்சுக்கு எதிராக தடுமாறி இருக்கிறார்கள்.

அரை இறுதியில் தென்னாப்பிரிக்க சுழற் பந்துவீச்சாளர்களுடனும்,லீக் சுற்றில் ஆப்கானிஸ்தானுக்கு எதிரான போட்டியிலும் கூட ஆஸ்திரேலிய வீரர்கள் சுழற் பந்துவீச்சை எதிர்கொள்ள திணறினார்கள். இது இந்தியாவுக்கு சாதகமாக பார்க்கப்படுகிறது. இதேபோன்று ஆஸ்திரேலிய அணியின் பந்துவீச்சும் பலம் குன்றியே இருக்கிறது.

இதற்கு உதாரணமாக அவர்கள் வங்கதேச அணியை 306 ரன்களை எடுக்க விட்டார்கள். ஆப்கானிஸ்தான் அணியை 291 ரன்களையும், பாகிஸ்தானை 305 ரன்களையும், நியூசிலாந்தை 383 ரன்களையும் அடிக்கவிட்டதை பார்த்தாலே அந்த அணியின் பந்துவீச்சு எந்த அளவுக்கு இருக்கும் என்று உங்களுக்கு தெரிந்திருக்கும்.

ஆனால் அரை இறுதியில் தென்னாப்பிரிக்காவை 212 ரன்களில் சுருட்டினார்களே என்று நீங்கள் கேட்கலாம். ஆனால் கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் அப்போது மழை மேகம் சூழ்ந்ததால் ஆடுகளம் வேகப்பந்து வீச்சுக்கு சாதகமாக முதல் 10, 15 ஓவர்கள் வரை இருந்தது. பந்து கொஞ்சம் பழையதாக மாறியவுடன் ஆஸ்திரேலிய வீரர்கள் பந்துவீச்சை டேவிட் மில்லர் ஒரு காட்டு காட்டியதை மறந்து விட வேண்டாம்.

அகமதாபாத் ஆடுகளம் தோய்வாக தான் இருக்கும் என்பதால் அங்கும் ஆஸ்திரேலியாவின் வேகப்பந்து வீச்சு எடுபடுவதற்கு வாய்ப்பு இல்லை. இந்தத் தொடரில் பலம் வாய்ந்த இரண்டு அணிகளான தென்னாப்பிரிக்கா மற்றும் இந்தியா ஆகியவைக்கு எதிராக ஆஸ்திரேலியா தோல்வி தழுவிருக்கிறது. மற்ற அணிகள் ஆஸ்திரேலியாவை விட பலம் குன்றியது என்பதால் அவர்களிடம் வெற்றியை கண்டு இருக்கிறார்கள்.

இதனால் இந்திய ரசிகர்கள் ஒன்றும் பயப்படத் தேவையில்லை அதேசமயம் ஆஸ்திரேலியாவை குறைத்து மதிப்பிட்டு ஏளனமாகவும் இருக்கத் தேவையில்லை. ஏனென்றால் ஆஸ்திரேலிய வீரர்கள் இறுதி போட்டியில் எப்படி விளையாடுவார்கள் என்று அனைவருக்கும் தெரிந்தது தான். இந்திய வீரர்கள் தங்களுடைய முழு திறமையும் வெளிப்படுத்தினால் நிச்சயம் ஆஸ்திரேலியாவில் வீழ்த்த முடியும்.

Story first published: Friday, November 17, 2023, 7:29 [IST]
Other articles published on Nov 17, 2023
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+