அகமதாபாத் : ஐசிசி உலக கோப்பை கிரிக்கெட் போட்டியின் இறுதி ஆட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெறுகிறது. இதில் இந்தியாவும் ஆஸ்திரேலியாவும் பல பரிட்சை நடத்துகின்றன. இந்த போட்டி குறித்து தான் ஒட்டுமொத்த கிரிக்கெட் உலகமே பேசி வருகிறது.
12 ஆண்டுகளுக்குப் பிறகு உலக கோப்பையை வென்று இந்தியா சாதனை படைக்குமா என்ற ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். இந்த நிலையில் ஐசிசி உலகக் கோப்பை பைனலில் யார் வெற்றி பெறுவார்? யார் அதிக ரன்கள் எடுப்பார் யார் அதிக விக்கெட் வீழ்த்துவார்.

இது குறித்து முன்னாள் வீரர்கள் கருத்துக்களை வெளியிட்டு இருக்கிறார்கள். அதனை தற்போது பார்க்கலாம். இது குறித்து கருத்து தெரிவித்துள்ள தினேஷ் கார்த்திக், இந்த தொடரில் ரோஹித் சர்மா தான் சிறப்புமிக்க வீரராக அறியப்படுவார். இறுதிப் போட்டியில் விராட் கோலி தான் அதிக ரன்கள் அடிப்பார் என்று கணித்துள்ளார். இதேபோன்று இறுதிப்போட்டியில் குல்தீப் யாதவ் அதிக விக்கெட்டுகளை வீழ்த்த வாய்ப்பு இருப்பதாக கணித்துள்ள தினேஷ் கார்த்திக்,அபாயகரமான வீரராகவும் உலக கோப்பையை இந்தியாவும் வெல்லும் என்று கூறியுள்ளார்.
இதேபோன்று மைக்கேல் வாகன் வெளியிட்டுள்ள கணிப்பில் தொடர் நாயகன் விருது சமிக்கும் பைனலில் இந்திய வீரர் கில்தான் அதிக ரன் அடிப்பார் என்றும் கணித்திருக்கிறார் இதேபோன்று பைனலில் பந்துவீச்சில் ஜடேஜா தான் அதிக விக்கெட் கைப்பற்றுவார் என்றும் ஜடேஜா அபாயகரமான வீரராக திகழ்வார் என்றும் கணித்துள்ள மைக்கேல் வாஹன்,இந்தியா தான் உலக கோப்பையை வெல்லும் என்றும் கூறியுள்ளார்.
இதேபோன்று முன்னாள் வீரர் பார்த்திவ் பட்டேல் வெளியிட்டுள்ள கணிப்பில், விராட் கோலி தொடர் நாயகன் விருதை வெல்வார் என்றும் ரோகித் சர்மா அதிக ரன்களை நாளைய ஆட்டத்தில் குவிப்பார் என்றும் கணித்துள்ளார். இதைப் போன்று பந்துவீச்சில் பும்ரா தான் அதிக விக்கட்டுகளை வீழ்த்துவார் என்றும் சூரிய குமார் பைனலில் அபாயகரமான வீரராக திகழ வாய்ப்பிருப்பதாகவும் பார்த்திவ் பட்டேல் கணித்துள்ளார். இதேபோன்று இந்தியா தான் உலக கோப்பையை வெல்லும் என்றும் பார்ட்டிவ் பட்டேல் தெரிவித்துள்ளார்.