Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

உலக கோப்பையை இந்தியா வெல்ல ரோகித் இதை செய்யனும்.. மற்ற வீரர்களுக்கும் யுவராஜ் சிங் எச்சரிக்கை

மும்பை : ஐசிசி உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற வேண்டும் என்றால் கேப்டன் ரோகித் சர்மா ஒரு விஷயத்தை கண்டிப்பாக செய்ய வேண்டும் என நட்சத்திர வீரர் யுவராஜ் சிங் அறிவுரை வழங்கி இருக்கிறார்.

2011 ஆம் ஆண்டு உலகக் கோப்பையை இந்திய அணி வெல்ல யுவராஜ் சிங் ஒரு முக்கிய காரணமாக அமைந்தார். மேலும் ரன் மற்றும் பவுலிங்கில்விக்கெட்களை வீழ்த்தி யுவராஜ் சிங் ஆட்ட நாயன் விருதை வென்றிருக்கிறார்.

India vs Australia world cup final 2023 - Yuvraj singh gives warning to indian Players to avoid mistakes

இந்த நிலையில் செய்தி நிறுவனம் ஒன்றுக்கு யுவராஜ் சிங் அளித்துள்ள பேட்டியில் ரோகித் சர்மா இந்த தொடரில் சிறப்பாக பேட்டிங் செய்து வருகிறார். அவர் ஒரு 40 பந்துகளை எதிர்கொண்டால் நிச்சயம் 70 முதல் 80 ரன்கள் குவித்து விடுவார். இதேபோன்று ரோகித் சர்மா 100 பந்துகளை எதிர்கொண்டால் இரட்டை சதம் அடிக்ககூட வாய்ப்பு இருக்கிறது. ரோகித் சர்மா ஒரு அணியின் வீரராக திகழ்கிறார்.

அணிக்கு என்ன வேண்டுமோ அதை மட்டுமே செய்கிறார். ரோகித் சர்மாவுக்கு அணி தான் முதலில் வருகிறது இதனால் தான் அவர் ஒரு கேப்டனாக வெற்றிகரமாக திகழ்கிறார். அதுவும் வெள்ளை நிற கிரிக்கெட் பந்தில் ரோகித் சர்மா ஒரு சாம்பியன். மேலும் ரோகித் சர்மா நெருக்கடியான கட்டத்தில் ஒரு நல்ல கேப்டனாக திகழ்கிறார். அவர் ஐந்து முறை ஐபிஎல் கோப்பையை வென்றதன் மூலம் நிறைய அனுபவங்களையும் பெற்றிருக்கிறார்.

இந்த தொடர் முழுவதும் இந்திய அணி வெற்றி பெற்றதற்கு காரணம் நாம் எந்த ஒரு மிகப்பெரிய தவறையும் இந்த தொடரில் செய்யவில்லை. இதே போல் இறுதி ஆட்டத்திலும் இந்திய அணி எந்த ஒரு தவறையும் செய்யக்கூடாது. அப்படி செய்தால் இறுதிப் போட்டியில் இந்திய அணி தோல்வி அடைய வாய்ப்பு இருக்கிறது. நாளை எந்த ஒரு துரதிர்ஷ்ட சம்பவம் நடக்கக்கூடாது என்று நான் நம்புகிறேன்.

இந்திய அணி நம்பிக்கையிலும் உத்வேகத்திலும் நன்றாக இருக்கிறார்கள். அனைவரும் சிறப்பாக செயல்படுகிறார்கள். ஆனால் பிரச்சனையே இறுதிப் போட்டியில் இந்தியா ஆஸ்திரேலியாவை எதிர்கொள்கிறது என்பதுதான். ஏனென்றால் ஆஸ்திரேலிய அணிக்கு உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் எப்படி அழுத்தத்தை கையாள வேண்டும் என்று நன்றாக தெரியும்.

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான அரையிறுதி போட்டியில் கூட கம்மின்ஸ் மற்றும் ஸ்டார்க் பேட்டிங் செய்யும்போது எப்படி நெருக்கடியை சமாளித்து பெரிய சாட் எதுவுமே விளையாடாமல் சிங்கிள்ஸ் எடுத்து வெற்றி பெற்றார்கள். இதுபோல் ஆஸ்திரேலியா அணிக்கு நெருக்கடியை சமாளிக்க தெரியும் என்று யுவராஜ் சிங் தெரிவித்துள்ளார்.

Story first published: Saturday, November 18, 2023, 21:58 [IST]
Other articles published on Nov 18, 2023
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+