அந்த வீரரிடம் ஜாக்கிரதையாக இருக்கனும்.. இல்லையென்றால் 10 ஓவரில் கதை முடிஞ்சுடும்.. வெங்கடேஷ் பிரசாத்
அகமதாபாத்: உலகக்கோப்பை இறுதி போட்டியில் ஆஸ்திரேலியா மிட்செல் ஸ்டார்க்கின் தொடக்க ஓவர்களை இந்திய அணி பேட்ஸ்மேன்கள் கவனமாக எதிர்கொள்ள வேண்டும் என்று வெங்கடேஷ் பிரசாத் எச்சரித்துள்ளார்.
உலகக்கோப்பை தொடரின் இறுதிப்போட்டியில் இந்திய அணியை எதிர்த்து ஆஸ்திரேலியா அணி களமிறங்கவுள்ளது. இதன் மூலமாக ஆஸ்திரேலியா அணி 8வது முறையாக உலகக்கோப்பை பைனலில் விளையாடவுள்ளது. இதுவரை 7 உலகக்கோப்பை இறுதிப்போட்டிகளில் விளையாடியுள்ள ஆஸ்திரேலியா, 5 முறை சாம்பியன் பட்டத்தை வென்று சாதனை படைத்துள்ளது.

இதனால் உலகக்கோப்பை பைனலில் ஆஸ்திரேலியா அணியை வீழ்த்துவது அவ்வளவு எளிதாக இருக்காது என்று பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் ஆஸ்திரேலியா அணியின் பவுலிங் லைன் அப் குறித்து இந்திய முன்னாள் வீரர் வெங்கடேஷ் பிரசாத் இந்திய அணிக்கு சில அட்வைஸ் கொடுத்துள்ளார். அதில், உலகக்கோப்பை தொடரில் ஆஸ்திரேலியா அணியும் அனைத்து அடிப்படைகளையும் சரியாக செய்துள்ளது.
அதிலும் பந்துவீச்சில் ஆஸ்திரேலியா அணியின் மிட்செல் ஸ்டார்க்கிடம் இந்திய அணி பேட்ஸ்மேன்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். முதல் 10 ஓவர்களில் அவர் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினால் கூட இந்திய அணிக்கு பாதகமாக அமைந்துவிடும். இந்திய அணி பேட்டிங் ஆர்டருக்கு அது தேவையில்லாத அழுத்தத்தை கொடுக்கும்.
அதேபோல் ஹேசல்வுட் சிறப்பாக பந்துவீசி வருகிறார். பெரியளவில் வேகமில்லை என்றாலும், அவரின் உயரத்தால் அவரின் பந்துகள் நன்றாக பவுன்ஸாகி வருகிறது. அதேபோல் பார்ட்னர்ஷிப் பிரேக்கராகவும் இருக்கிறார். டெஸ்ட் போட்டிக்கான லைன் மற்றும் லெந்தில் வீசுவதால் அவரிடம் கூடுதல் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் என்றே நினைக்கிறேன்.
ஆடம் ஜாம்பாவை பொறுத்தவரை சிறப்பாக செயல்பட்டுள்ளார். ஆனால் பந்தை மிடில் ஸ்டம்ப் லைனில் பிட்ச் செய்து ஆஃப் ஸ்டம்ப் லைனில் கொண்டு வர அவர் ஒன்றும் ஷேன் வார்னே கிடையாது. அரையிறுதி போட்டியில் ஜாம்பவால் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்த முடியவில்லை. அவர் ரன்களை கட்டுப்படுத்த நினைக்காமல் விக்கெட் வீழ்த்த நினைத்தால், இந்திய அணிக்கு கூடுதல் சவால் இருக்கும் என்று கூறியுள்ளார்.
இந்த உலகக்கோப்பை தொடரில் மிட்செல் ஸ்டார்க் மொத்தமாக 13 விக்கெட்டுகளை மட்டுமே வீழ்த்தியுள்ளார். ஆனால் இந்திய அணிக்கு எதிரான முதல் போட்டியில் ரோகித் சர்மாவை வீழ்த்தி சோதித்தார். அதேபோல் அரையிறுதியில் சிறப்பாக பந்துவீசி ஃபார்முக்கு வந்துள்ளார். இதனால் அவரிடம் ரோகித் சர்மா மற்றும் சுப்மன் கில் இருவரும் கூடுதல் எச்சரிக்கையாக இருப்பது அவசியமாகிறது.
Story first published: Saturday, November 18, 2023, 12:57 [IST]
Other articles published on Nov 18, 2023


Click it and Unblock the Notifications