மும்பை : உலக கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டியில் இந்தியாவும் ஆஸ்திரேலியாவும் நாளை மோத உள்ளது. இந்த நிலையில் ஆஸ்திரேலிய அணியில் அபாயகரமான வீரர்களில் ஒருவராக திகழ்ந்தவர் ஹேசல்வுட்டும் ஒருவர்.
தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான அரை இறுதி ஆட்டத்தில் பந்து வீச்சில் தான் தென்னாப்பிரிக்கா தடுமாறியது. இந்த நிலையில் இறுதிப்போட்டியில் எந்த மாதிரியான ஆடுகளம் அமைக்கப்படும் என்று பேச்சு தற்போதைய ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

மேலும் சிலர் இந்தியாவுக்கு சாதகமான சுழற் பந்துவீச்சு ஆடுகளம் தான் அமைக்கப்படும் என்று கூறி வருகின்றனர்.இந்த நிலையில் பைனல் தொடங்குவதற்கு முன்பே ஆஸ்திரேலிய ஆடுகளம் குறித்து அழுகுணி ஆட்டம் ஆட தொடங்கி விட்டார்கள். இந்த நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய ஹேசல் வுட் இந்தியா ஒரு தரமான அணி என்பதில் சந்தேகமே இல்லை. அவர்கள் இந்த தொடர் முழுவதுமே வெற்றி நடை போட்டு வருகிறார்கள்.
அந்த அணியில் எந்த ஒரு வீக்னஸும் இருப்பதாக தெரியவில்லை.இதனால் இறுதி போட்டியில் அவர்களை எதிர்கொள்ள மிகவும் ஆவலுடன் இருக்கின்றோம். நாங்கள் சென்னையில் முதல் லீக் ஆட்டத்தில் இந்தியாவுக்கு எதிராக விளையாடும் போது ஆடுகளத்தில் கொஞ்சம் பிளவு இருந்தது. இதன் மூலம் சுழற் பந்துவீச்சிக்கு சாதகமாக ஆடுகளம் செயல்பட்டது.
இதனால் இந்தியாவுக்கு நாங்கள் சிறிய இலக்கையை நிர்ணயித்தோம்.
ஆனால் அந்தப் போட்டியில் தொடக்கத்தில் நாங்கள் இரண்டு மூன்று விக்கெட்டுகளை விரைவாக வீழ்த்தினோம். ஆனால் அதன் பிறகு இந்திய வீரர்கள் சிறப்பாக விளையாடிய அந்த போட்டியில் வெற்றி பெற்றனர். தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான போட்டியில் ஆடுகளத்தில் வேகப்பந்துவீச்சிக்கு சாதகமான அம்சங்கள் இருந்தது.
மேலும் எங்களுக்கு எதிராக தென்னாப்பிரிக்க வீரர்கள் அடித்து ஆடும் போது விக்கெட்டுகளை பறிகொடுத்தனர். இதேபோன்று ஞாயிற்றுக்கிழமையும் நாங்கள் விக்கெட்டை தொடக்கத்தில் எடுப்போம் என்று நம்பிக்கை கொள்கிறேன். ஆனால் ஆடுகளம் ஞாயிற்றுக்கிழமை இவ்வாறு இருக்காது என்று நினைக்கிறேன்.