Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

பைனலில் ஆஸி 450 ரன்கள் அடிக்கும்.. இந்தியா 65 ரன்னில் அவுட்டாகும்.. 6 மாதம் முன்பே கணித்த மார்ஷ்

மும்பை : 2023 ஆம் ஆண்டு ஐசிசி உலக கோப்பை கிரிக்கெட் போட்டி சுமார் ஒரு மாதத்திற்கு மேல் நடைபெற்று தற்போது தான் எந்த இரண்டு அணிகள் இறுதிப் போட்டியில் மோத போகிறது என்று ரசிகர்களுக்கு தெரிந்து உள்ளது.

ஆனால் ஆஸ்திரேலிய அணியின் தொடக்க வீரர் மிச்சல் மார்ஸ் 6 மாதத்திற்கு முன்பே இந்தியாவும் ஆஸ்திரேலியாவும் தான் இறுதிப் போட்டிக்கு மோதும் என்று கூறியிருந்தார். அவர் சொன்னது போல் தற்போது இரு அணிகளும் இறுதியில் மோதுகிறது.

India vs australia world cup final - Mitchell marsh predicted this final 6 months ago

ஆனால் இறுதிப் போட்டியில் என்ன நடக்கும் என்று ஒரு கணிப்பையும் அவர் வெளியிட்டு இருந்தார். அதைக் கேட்கும் போது தான் கொஞ்சம் பயம் வருகிறது. இந்த கணிப்பை அவர் நகைச்சுவைக்காக தான் சொன்னார் அது என்னவென்று தற்போது பார்க்கலாம். கடந்த ஐபிஎல் தொடரில் டெல்லி அணிக்காக மிச்சல் மார்ஸ் விளையாடிக் கொண்டிருந்தார்.

அப்போது உலகக்கோப்பை தொடர் குறித்து நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் என செய்தியாளர்கள் கேள்வி கேட்டார்கள். அதற்கு பதில் அளித்த மிச்சல் மார்ஸ், இறுதிப் போட்டியில் இந்தியாவும் ஆஸ்திரேலியாவும் மோதும். இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலிய அணி 450 ரன்களுக்கு இரண்டு விக்கெட்டுகளை இழந்து இருக்கும். அதன் பிறகு களம் இறங்கும் இந்தியா 65 ரன்கள் ஆட்டம் இழக்கும் என்று கூறி இருந்தார்.

இந்த தொடரில் ஆஸ்திரேலிய அணி தோல்வியை பெறாத அணியாக இருக்கும் என்றும் அவர் குறிப்பிட்டிருந்தார். இதனை மிச்சல் மார்ஸ் கடந்த மே மாதம் குறிப்பிட்டிருந்தார். ஆனால் அவர் குறிப்பிட்டது போல் ஆஸ்திரேலிய அணி இந்த தொடரில் தோல்வி பெறாமல் இல்லை. இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக லீக் சுற்றில் தோல்வி அடைந்திருக்கிறது.

மிச்சல் மார்ஸ் கணித்தது போல் இந்தியா தான் தோல்வி அடையாமல் இருந்திருக்கிறது. இதனால் இந்தியா தான் 450 ரன்கள் குவிக்கும் என்றும் ஆஸ்திரேலியா 65 ரன்கள் ஆட்டம் இழக்கும் என்றும் ரசிகர்கள் மார்ஸின் பழைய கணிப்பை பகிர்ந்து தங்களுடைய கருத்தை தெரிவித்து வருகிறார்கள். ஆனால் மிச்சல் மார்ஸ் இந்த கணிப்பை ஒரு நகைச்சுவையாக தான் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Story first published: Friday, November 17, 2023, 12:23 [IST]
Other articles published on Nov 17, 2023
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+