Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

தோனி ரசிகர்களின் வரம்பு மீறிய பதிவு.. பைனலில் ஆஸிக்கு ஆதரவாம்.. காரணம் கேட்டால் கடுப்பு ஆயிடுவீங்க

ஐசிசி உலக கோப்பை இறுதிப் போட்டியில் இந்திய அணி வரும் ஞாயிற்றுக்கிழமை ஐந்து முறை உலக சாம்பியன் ஆன ஆஸ்திரேலியாவை எதிர்கொள்கிறது.

இந்த போட்டி அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெறுகிறது. 12 ஆண்டுகளுக்குப் பிறகு உலகக்கோப்பை இறுதி சுற்றுக்கு இந்திய அணி தகுதி பெற்றுள்ளது.

India vs australia world cup final- MS Dhoni fans saying they are going support aussies for this reason

இந்த நிலையில் 2003 ஆம் ஆண்டு உலகக் கோப்பை இறுதி ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவிடம் இந்தியா தோல்வியை தழுவியது. அதற்கு இந்தியா இம்முறை பழி தீர்க்க வேண்டும் என ரசிகர்கள் பலரும் எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள். ஆனால் தோனி ரசிகர்களின் சிலர் சமூக வலைத்தளத்தில் போட்டுள்ள பதிவு ஒட்டுமொத்த ரசிகர்களையும் கடுப்படைய செய்திருக்கிறது. எம் எஸ் தோனி தி ரியல் காட் ஆப் கிரிக்கெட் என்ற பேஸ்புக் பக்கத்தில் தோனி ரசிகர்கள் தோனி தொடர்பான பதிவுகளை போட்டு வருவார்கள்.

அதில் இம்முறை பைனலில் ஆஸ்திரேலிய சகோதரர்களுக்கு தான் நாம் ஆதரவு அளிக்க வேண்டும். அவர்கள் இம்முறை இந்தியாவை இறுதிப் போட்டியில் வீழ்த்துவார்கள் என்று நாங்கள் நம்பிக்கை கொள்கிறோம். அப்போதுதான் தோனியின் ரெக்கார்ட் பாதுகாப்பாக இருக்கும். இதனால் அனைத்து தோனி ரசிகர்களும் பைனலில் ஆஸ்திரேலியாவுக்கு ஆதரவு அளியுங்கள் என்று அந்தப் பதிவில் இடம்பெற்றுள்ளது.

India vs australia world cup final- MS Dhoni fans saying they are going support aussies for this reason

இதற்கு பல ரசிகர்கள் கடுப்பாகி திட்டி இருக்கிறார்கள். இதற்கு பதில் அளித்துள்ள அந்தக் குழுவின் அட்மின், தோனியின் சாதனைக்கு எதுவும் ஆகிவிடக்கூடாது. தோனி தான் கடைசி உலக கோப்பையை வென்ற இந்திய கேப்டனாக இருக்க வேண்டும் என்பதற்காக தான் நாங்கள் ஆஸ்திரேலியாவுக்கு ஆதரவளிக்கிறோம் என்று அவர் விளக்கம் அளித்துள்ளார்.இந்த பதிவு தற்போது சமூக வலைத்தளத்தில் வைரல் ஆகி வருகிறது.

பலரும் தோனியின் ரசிகர்களை திட்டி வருகிறார்கள். ஒரு வீரருக்கு ரசிகராக இருக்கலாம். ஆனால் அணி என்று வந்துவிட்டால் நாம் இந்தியாவை தான் ஆதரிப்போம். ஏன் நமக்கு பிடித்த எந்த அணிகளுக்கு வேண்டுமானாலும் நாம் ஆதரவளிக்கலாம். ஆனால் நமது நாயகனின் ரெக்கார்டு போய் விடக்கூடாது என்பதற்காக நான் எதிரணியை ஆதரவளிக்கிறேன் என்று சொல்லுவதெல்லாம் முட்டாள்தனத்தின் உச்சம் என்று ரசிகர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள்.

Story first published: Friday, November 17, 2023, 16:05 [IST]
Other articles published on Nov 17, 2023
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+