For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

ஆஸி. தொடரில் இருந்து முக்கிய இந்திய வீரர் நீக்கம்? வார்னர் சொன்ன தகவலால் பரபரப்பு!

மும்பை : இந்திய டெஸ்ட் அணியின் முதன்மை விக்கெட் கீப்பர் விரிதிமான் சாஹா காயம் காரணமாக ஆஸ்திரேலிய தொடரில் இருந்து நீக்கப்பட வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி கேப்டன் டேவிட் வார்னர் பிளே-ஆஃப் சுற்றின் இரண்டாம் தகுதிப் போட்டிக்கு முன் கூறிய தகவலால் இந்த விஷயம் பற்றி பரபரப்பாக பேசப்படுகிறது.

சாஹா காயம்

சாஹா காயம்

விரிதிமான் சாஹா ஐபிஎல் தொடரில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியில் இடம் பெற்றுள்ளார். அவர் லீக் தொடரில் கடைசி இரு போட்டிகளில் பங்கேற்று அதிரடி ஆட்டம் ஆடினார். அப்போது அவருக்கு காயம் ஏற்பட்டது. இதை அடுத்து அவர் போட்டிகளில் பங்கேற்கவில்லை.

நீக்கம்?

நீக்கம்?

இந்த நிலையில், வார்னர் டெல்லி அணிக்கு எதிரான பிளே-ஆஃப் போட்டிக்கு முன் அவருக்கு தசைப்பிடிப்பு ஏற்பட்டு இருப்பதாக கூறினார். அவருக்கு கிரேடு 1 தசைநார் கிழிந்துள்ளதாக கூறப்படுகிறது. அதனால், அவர் சில வாரங்கள் ஓய்வு எடுக்கா வேண்டும். அதனால், ஆஸ்திரேலிய தொடரில் இருந்து நீக்கப்பட வாய்ப்பு உள்ளது.

பிசிசிஐ முடிவு

பிசிசிஐ முடிவு

எனினும், அவரது காயம் குறித்து பிசிசிஐ மருத்துவ அறிக்கை பெற்ற பின்பே இது பற்றி முடிவு எடுக்கும். இரு வாரங்கள் ஓய்வே போதும் என்றால் அவர் ஆஸ்திரேலியாவுக்கு சென்று டெஸ்ட் தொடருக்கு முன்பு வரை ஓய்வில் இருக்கக் கூடும்.

ரிஷப் பண்ட்

ரிஷப் பண்ட்

ஒருவேளை சாஹா இந்திய அணியில் இருந்து நீக்கப்பட்டால், அவருக்கு பதில் ஏற்கனவே உத்தேச அணியில் இடம் பெற்று இருக்கும் ரிஷப் பண்ட் விக்கெட் கீப்பிங் பணியை மேற்கொள்வார். சஞ்சு சாம்சன் ஒருநாள் மற்றும் டி20 அணியில் இடம் பெற்றுள்ளதால் அவர் மாற்று விக்கெட் கீப்பராக இருக்கவும் வாய்ப்பு உள்ளது.

Story first published: Monday, November 9, 2020, 2:56 [IST]
Other articles published on Nov 9, 2020
English summary
India vs Australia : Wriddhiman Saha hamstring tear confirmed
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+