1.3 லட்சம் பேரும் அமைதியானால் எப்படி இருக்கும் தெரியுமா.. மைதானத்தில் நாளை பாருங்க.. கம்மின்ஸ் சவால்
அகமதாபாத்: இந்திய அணிக்கு ஆதரவாக வரவுள்ள 1.3 லட்சம் ரசிகர்களையும் மைதானத்தில் அமைதியாக்குவதை விடவும், விளையாட்டில் வேறு மனநிறைவு கிடைக்காது என்று ஆஸ்திரேலியா கேப்டன் பேட் கம்மின்ஸ் தெரிவித்துள்ளார்.
உலகக்கோப்பை தொடரின் இறுதிப்போட்டியில் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் விளையாடவுள்ளன. அகமதாபாத் மைதானத்தில் இந்த போட்டியை காண்பதற்காக 1.3 லட்சம் ரசிகர்கள் கூடவுள்ளனர். சாதாரணமாக இந்திய அணிக்கான ஆதரவு உச்சத்தில் இருந்து வரும் சூழலில், இறுதிப்போட்டியில் 1.3 லட்சம் ரசிகர்கள் இந்திய அணிக்கு ஆதரவளிப்பார்கள் என்பது நிச்சயம். ஏற்கனவே இந்திய அணிக்கு எதிரான போட்டியில் பாகிஸ்தான் அணி களமிறங்கிய போது ரசிகர்கள் எவ்வளவு ஆக்ரோஷமாக இருந்தார்கள் என்பதை பார்த்துள்ளோம்.

இதனால் ரசிகர்களை சமாளிப்பதே ஆஸ்திரேலியா அணி வீரர்களுக்கு பெரும் சோதனையாக இருக்கும். இந்த நிலையில் ஆஸ்திரேலியா அணி கேப்டன் பேட் கம்மின்ஸ் பேசுகையில், அகமதாபாத் மைதானத்திற்கு நாளை வரவுள்ள ரசிகர்கள் நிச்சயம் இந்திய அணிக்கு தான் ஆதரவு அளிப்பார்கள் என்று தெரியும்,. ஆனால் விளையாட்டை பொறுத்த வரைக்கும் 1.3 லட்சம் ரசிகர்களையும் மொத்தமாக அமைதியாக்குவதை விடவும் வேறு எதுவும் மன நிறைவை கொடுக்காது. அதனை நிறைவேற்றுவதே எங்களின் இலக்கு என்று தெரிவித்தார்.
தொடர்ந்து, உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய அணி சிறந்த ஆட்டத்தை விளையாடி வருகிறது. நிச்சயம் அவர்களுக்கு எதிராக நாங்கள் களமிறங்குவது சிறந்த போட்டியாக இருக்கும். மிட்செல் ஸ்டார்க் மற்றும் ஹேசல்வுட் ஆகியோரின் தொடக்க ஸ்பெல் எங்களுக்கு மிகமுக்கியமானதாக இருக்கும். அரையிறுதி போல் மீண்டும் ஒருமுறை அவர்களால் என்ன தாக்கத்தை கொடுத்தால், என்ன நடக்கும் என்பது தெரியும். அவர்கள் இருவரும் முக்கியமான போட்டிகளில் விளையாடி இருக்கிறார்கள். அதனால் அவர்களுக்கு என்ன செய்ய வேண்டும் என்பது தெரியும்.
அதேபோல் இந்த உலகக்கோப்பை தொடரில் ஆஸ்திரேலியா அணிக்கு பெரிதாக நிறைவான வெற்றியை பெறவில்லை. ஒவ்வொரு போட்டியிலும் கடினமான சூழலில் சிக்கிக் கொண்டு, கடைசி கட்டத்தில் வெற்றிபெறுவதற்கான வழியை கண்டறிந்து வென்றுள்ளோம். ஒவ்வொரு போட்டிக்கும் ஒரு வீரர் முன் நின்று வழிநடத்தி இருக்கிறார். அதனால் இறுதிப்போட்டியிலும் சிறப்பாக செயல்படுவோம் என்ற நம்பிக்கை உள்ளது என்று தெரிவித்துள்ளார்.
Story first published: Saturday, November 18, 2023, 15:10 [IST]
Other articles published on Nov 18, 2023


Click it and Unblock the Notifications