For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

IND vs BAN: ரோகித் சர்மாவால் மிஸ் ஆன ஹாட்ரிக் சாதனை.. அக்சர் பட்டேலிடம் மன்னிப்பு கேட்ட கேப்டன்

துபாய்: சாம்பியன்ஸ் டிராபி தொடரில் வங்கதேசத்துக்கு எதிரான லீக் ஆட்டத்தில் இந்திய அணியின் நட்சத்திர வீரர் அக்சர் பட்டேல், ஹாட்ரிக் சாதனையை நிகழ்த்த இருந்த நிலையில் ரோகித் சர்மா செய்த தவறால் அந்த வாய்ப்பு பறிபோனது. சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் குரூப் ஏ பிரிவில் இந்தியாவும், வங்கதேசம் அணியும் தங்களுடைய முதல் லீக் ஆட்டத்தில் துபாயில் விளையாடியது.

இதில் டாஸ் வென்ற வங்கதேச அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. வங்கதேச அணி முதலில் பேட்டிங் செய்வதால் பெரிய ஸ்கோர் அடிக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார்கள். ஆனால் துபாய் ஆடுகளம் தோய்வாக இருக்கும் என்பதால் கொஞ்சம் நிதானத்தை கடைப்பிடித்தால் மட்டுமே அங்கு ரன்கள் சேர்க்க முடியும்.

Champions Trophy 2025 India Vs Bangladesh Axar Patel Rohit sharma vs

இந்த சூழலில் முகமது சமி மற்றும் ஹர்ஷித் ராணா ஆகியோர் தாங்கள் வீசிய முதல் ஓவரில் விக்கெட் வீழ்த்தினர். இதனால் வங்கதேச அணி இரண்டு ரன்களுக்கு இரண்டு விக்கெட்டுகள் இழந்து தடுமாறியது. இந்த சூழலில் அக்சர் பட்டேல் பந்து வீச வந்தார். இது ஆட்டத்தில் மிகப்பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தியது. வங்கதேச அணி 26 ரன்களுக்கு மூன்று விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.

இந்த நிலையில் சுழற் பந்துவீச்சாளரை ரோகித் சர்மா பந்து வீச அழைத்தார். ஆட்டத்தின் ஒன்பதாவது ஓவரை அக்சர் பட்டேல் வீசினார். இதில் இரண்டாவது பந்தில் 25 ரன்கள் எடுத்திருந்த நிலையில் கே எல் ராகுலிடம் டன்ஷித் ஹசன் ஆட்டமிழந்தார். இதே போன்று இதற்கு அடுத்த பந்திலேயே, வங்கதேச அணியின் முஸ்பிகுர் ரஹிம் டக் அவுட் ஆகி அக்சர் பட்டேல் பந்துவீச்சில் வெளியேறினார்.

இதை அடுத்து சாம்பியன்ஸ் டிராபிக தொடரில் ஹாட்ரிக் சாதனையை நிகழ்த்தும் வாய்ப்பு அக்சர் பட்டேலுக்கு ஏற்பட்டது. இந்த சூழலில் ஜேக்கர் அலி ஹாட்ரிக் பந்தை எதிர்கொண்டார். அப்போது அவர் கொடுத்த எளிய கேட்ச் வாய்ப்பை ஸ்லிப்பில் நின்ற ரோகித் சர்மா தவற விட்டார். இதனால் ஹாட்ரிக் சாதனை போனதை நினைத்து ரோகித் சர்மா தரையில் தனது கையை மீண்டும் மீண்டும் அடித்து கோபத்தை வெளிப்படுத்தினார்.இதன் பிறகு அக்சர் பட்டேலிடம் கையெடுத்து கும்பிட்டு மன்னிப்பு கேட்டுக் கொண்டார். ரோகித் சர்மா செய்து தவறால் அக்சர் பட்டேலுக்கு மிகப்பெரிய ஹட்ரிக் சாதனை வாய்ப்பு பரிபோனது.

Story first published: Thursday, February 20, 2025, 15:53 [IST]
Other articles published on Feb 20, 2025
English summary
India vs Bangladesh champions Trophy -Rohit sharma big blunder denied Axar Patel Hat trick record
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+