Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

IND vs BAN: இந்தியா vs வங்கதேசம்.. பிட்ச் ரிப்போர்ட் என்ன? டாஸ் வென்றால் என்ன முடிவு செய்யனும்?

புனே: இந்தியா - வங்கதேசம் அணிகளுக்கு இடையிலான ஆட்டம் நடக்கவுள்ள மகாராஷ்டிரா கிரிக்கெட் சங்க மைதானத்தின் ஆடுகளம் மற்றும் பிட்ச் ரிப்போர்ட் பற்றி பார்க்கலாம்.

உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் 17வது லீக் போட்டியில் வலிமையான இந்திய அணியை எதிர்த்து வங்கதேசம் அணி களமிறங்கவுள்ளது. இந்த உலகக்கோப்பை தொடரில் இந்திய அணி விளையாடியுள்ள 3 போட்டிகளிலும் அபார வெற்றியை பதிவு செய்துள்ளது. அதேபோல் வங்கதேச அணி ஆஃப்கானிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் மட்டும் வென்று, அடுத்தடுத்து 2 தோல்விகளை அடைந்துள்ளது.

India vs Bangladesh Match Pitch Report of Maharashtra Cricket Association Ground Pune in World Cup 2023

இதனால் வெற்றியை தொடர்வதற்காக இந்திய அணியும், வெற்றிப்பாதைக்கு திரும்ப வங்கதேச அணியும் தீவிரமாக இருக்கும். 2007ஆம் ஆண்டு உலகக்கோப்பை தொடரில் வங்கதேச அணி கொடுத்த அதிர்ச்சியை இந்திய அணியாலும், ரசிகர்களாலும் எளிதில் மறந்திட முடியாது. அவ்வளவு ஏன், ஆசியக் கோப்பை சூப்பர் 4 சுற்றில் கூட வங்கதேச அணியிடம் இந்திய அணி மோசமான தோல்வியை பதிவு செய்துள்ளது.

இதுவரை இந்தியா - வங்கதேசம் அணிகள் ஆடியுள்ள 40 ஒருநாள் போட்டிகளில் 31 போட்டிகளில் இந்திய அணியும், 8 போட்டிகளில் வங்கதேச அணியும் வென்றுள்ளன. வங்கதேச அணியை பொறுத்தவரை அன்றைய நாளில் ஆட்டம் கைகூடினால், எந்த அணியையும் எளிதாக வீழ்த்தி மறக்க முடியாத சம்பவத்தை மைதானத்தில் நிகழ்த்தவிடுவார்கள்.

இதனால் வங்கதேச அணியுடன் இந்திய அணி எச்சரிக்கையுடன் விளையாட வேண்டும். இந்த இரு அணிகளுக்கு இடையிலான ஆட்டம் புனேவில் உள்ள மகாராஷ்டிரா கிரிக்கெட் சங்க மைதானத்தில் நடக்கவுள்ளது. வழக்கமாக இந்த மைதானம் "பேட்டிங் பாரடைஸ்" என்று சொல்லப்படும். அந்த அளவிற்கு பேட்ஸ்மேன்களுக்கு சாதகமாக இந்த ஆடுகளம் இருக்கும்.

இதனால் ஸ்பின்னர்களுடன் இந்த மைதானத்தில் களமிறங்குவது பின்னடைவை ஏற்படுத்தும். இந்த உலகக்கோப்பை தொடரில் முதல்முறையாக இந்த மைதானத்தில் போட்டி நடக்கவுள்ளது. இந்த மைதானத்தில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்யும் அணிகளுக்கு சாதகமாக இருக்கும் என்று பார்க்கப்படுகிறது. கடந்த 7 போட்டிகளில் 4 முறை முதலில் பேட்டிங் ஆடிய அணிகளே வென்றுள்ளன.

இந்த மைதானத்தில் சேஸிங் செய்வது எளிதாக இருக்காது. அதேபோல் இன்றைய ஆட்டத்தின் போது மழை குறுக்கிடுவதற்கும் வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இதனை மனதில் வைத்தே இரு அணிகளும் டாஸ் வென்று முடிவெடுக்கும். மேலும், இரு அணிகளுக்கு இடையில் சிறிய ரைவல்ரி இருப்பதால், ரசிகர்களிடையே போட்டி மீதான எதிர்பார்ப்பு எகிறியுள்ளது.

Story first published: Thursday, October 19, 2023, 7:53 [IST]
Other articles published on Oct 19, 2023
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+