சென்னை : வங்கதேசத்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 280 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இதன் மூலம் இரண்டு போட்டிகள் கொண்ட தொடரில் இந்திய அணி ஒன்றுக்கு பூஜ்ஜியம் என்ற கணக்கில் முன்னிலை பெற்றது. பாகிஸ்தானை இரண்டுக்கு பூஜ்ஜியம் என்ற கணக்கில் வீழ்த்திய அதே உத்வேகத்துடன் இந்தியாவை எதிர்கொள்ள வங்கதேச அணி சென்னைக்கு வந்தது.
அதற்கு ஏற்றார் போல் முதலில் வங்கதேச அணி பவுலர்கள் அபாரமாக பந்து வீசி 144 ரன்கள் எல்லாம் ஆறு விக்கெட் எடுத்து அசத்தினார். எனினும் அஸ்வின் மற்றும் ஜடேஜா ஆகியோர் அபாரமாக விளையாடி முதல் இன்னிங்ஸில் 376 ரன்கள் எடுத்தனர். இதை அடுத்து வங்கதேச அணி தங்களுடைய முதல் இன்னிங்சில் வங்கதேச அணி வீரர்கள் பேட்டிங்கில் கடுமையாக தடுமாறினர்.

இந்திய அணியின் பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் 149 ரன்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தனர். இந்த நிலையில் 227 ரன்கள் முன்னிலை பெற்ற இந்திய அணி இரண்டாவது இன்னிங்ஸில் 287 ரன்கள் எடுத்து டிக்ளர் செய்தது. இதை அடுத்து 515 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இடத்தில் களமிறங்கிய வங்கதேச அணி 234 ரன்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.
முதலில் இந்த தோல்வி குறித்து கருத்து தெரிவித்துள்ள வங்கதேச அணி கேப்டன் நஜ்முல் ஹுசைன், தோல்வி அடைந்தாலும் மீசையில் மண் ஓட்டவில்லை என்ற பாணியில் பேசினார். ஆனால் அவரால் தன்னுடைய ஏமாற்றத்தை கடைசி வரை வெளி காட்டிக் கொள்ளாமல் இருக்க முடியவில்லை. போட்டிக்கு பிறகு பேசிய அவர் இந்த டெஸ்டில் எங்களுக்கு பல நல்ல விஷயங்கள் நடந்திருக்கிறது.
ஹசன் மகமத் பந்து வீசிய விதம் எங்களுக்கு நிச்சயமாக ஒரு பாசிட்டிவ் ஆக பார்க்கப்படுகிறது. இதே போன்று டஸ்கின் மற்றும் ராணா ஆகியோரும் முதல் மூன்று மணி நேரம் சிறப்பாகவே செயல்பட்டார்கள். அதன் பிறகு இந்திய அணி வீரர்கள் பேட்டிங்கில் சிறப்பாக விளையாடினார்கள். வேகப்பந்து வீச்சை பொறுத்தவரை அனைவரும் நன்றாகவே செயல்பட்டார்கள்.
குறிப்பாக புதிய பந்தை பயன்படுத்தி நாங்கள் செயல்பட்ட விதம் நிச்சயம் பாராட்டத்தக்கது. கடந்த இரண்டு டெஸ்ட் தொடர்களில் நாங்கள் சிறப்பாக பந்து வீசி இருக்கிறோம். அதேபோல் ஒரு செயல்பாட்டை இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியிலும் நாங்கள் தொடர்ந்து வருகிறோம். பேட்ஸ்மேனாக தனிப்பட்ட முறையில் நான் அணியின் வெற்றிக்கு பங்களிப்பை அளிக்க வேண்டும்.
என்னுடைய பேட்டிங்கை நான் மிகவும் மகிழ்ச்சியுடன் எதிர்கொள்கிறேன். டெஸ்ட் போட்டிகளில் வெற்றி பெற வேண்டும் என்றால் நீண்ட நேரம் பேட்டிங் செய்ய வேண்டும். முடிவுகள் என்ன வருகிறது என்பதை பற்றி கவலை கொள்ளாமல் பேட் செய்ய வேண்டும். எங்களுடைய செயல்பாட்டையும் பயிற்சி முறையும் நாங்கள் பின் தொடர்கிறோம்.
எங்களுடைய பலம் என்னவென்று எங்களுக்குத் தெரியும்.அதை வைத்து தான் நாங்கள் விளையாடுகிறோம். பவுலர்கள் சிறப்பாக செயல்பட்டார்கள். கான்பூர் டெஸ்ட் மிகவும் முக்கியமானது. அதில் பேட்ஸ்மேன்கள் சிறப்பாக விளையாடுவார்கள் என்று நம்புகிறேன் என வங்கதேச அணி கேப்டன் நஜ்முல் ஹுசைன் சாண்டோ கூறியுள்ளார்