டிவிஸ்ட் கொடுத்த மழை.. டக் வொர்த் லூயிஸ் விதியின் படி யார் முன்னிலை.. இந்தியாவுக்கு நெருக்கடி?
அடிலெய்ட் : டி20 உலககோப்பையில் இந்தியா, வங்கதேசம் அணிகள் மோதும் ஆட்டம் மழையால் தற்போது பாதிக்கப்பட்டுள்ளது.
வாழ்வா சாவா என்ற ஆட்டத்தில் இந்திய அணி களமிறங்கியது முதலில் பேட்டிங் செய்ய இந்திய அணி பணிக்கப்பட்டது.
முதலில் சில ஓவர்கள் வேகப்பந்துவீச்சுக்கு சாதகமாக இருந்ததால் இந்திய அணியின் தொடக்க வீரர்கள் நிதானமாக விளையாடினர்.

கேப்டன் ரோகித் சர்மா 2 ரன்களில் ஆட்டமிழக்க, விராட் கோலி, கேஎல் ராகுல் ஆகியோர் சதம் அடித்தனர். இதனால் இந்திய அணி 20 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 184 ரன்கள் எடுத்தது. 185 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய லிட்டன் தாஸ் அதிரடியாக விளையாடி இந்தியாவுக்கு கடும் நெருக்கடி அளித்தார்.
லிட்டன் தாஸ் 21 பந்தில் அரைசதம் கடந்தார். இந்திய அணி வீரர்கள் ஒரு கேட்ச் மற்றும் ஒரு ரன் அவுட் வாய்ப்பை வீணடித்தனர். வங்கதேச அணி 7 ஓவர் முடிவில் விக்கெட் இழப்பின்றி 66 ரன்கள் எடுத்த போது மழை குறுக்கிட்டது. இதனால் ஆட்டம் நிறுத்தப்பட்டது.
இந்த தருணத்தில் ஆட்டம் கைவிடப்பட்டால், டக் வொர்த் லூயிஸ் விதி படி வங்கதேச அணி 17 ரன்கள் முன்னிலை உள்ளது. இதனால் இந்தியா தோல்வி அடையும் சூழல் ஏற்பட்டுள்ளது. தற்போது இந்திய நேரப்படி மாலை 4.28 ஐ தாண்டினால் ஓவர்கள் குறைக்கப்படும். அப்படி குறையும் பட்சத்தில் இந்தியாவுக்கு தான் அது பாதகமாக அமையும்.


Click it and Unblock the Notifications