IND vs ENG : இந்தியா, இங்கிலாந்துக்கு இடையிலான டெஸ்ட் தொடர் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், நாம் தற்போது இரு அணிகளுக்கும் இடையே நடைபெற்ற மறக்க முடியாத போட்டிகளை பார்த்து வருகிறோம். இன்று 1996 ஆம் ஆண்டு நாட்டிங்காம் டெஸ்டில் என்ன நடந்தது என்பதை பார்ப்போம்.
சௌரவ் கங்குலி இந்த டெஸ்ட் மேட்சிலும் சதம் எடுத்து அசத்தினார்.முதல் நாள் முடிவில் கங்குலி 136*, டெண்டுல்கர் 123* இந்திய டீம் 287 - 2,மூன்றாம் நாள் ஆட்ட முடிவில் இங்கிலாந்து டீமின் ஸ்கோர் 322 - 1 , மைக் அதேற்டன் 145*, நாஸ்ஸர் ஹுசைன் 107*இந்த டெஸ்ட் மேட்ச் மொத்தம் 4 சதங்களை கண்டது.

இரண்டு இன்னிங்ஸ்களில் 500 ரன்களுக்கு மேல் குவிக்கப்பட்டன.
மேட்சில் மொத்த உபரி ரன்கள் ( Extras ) 100 , அதில் ஒரு இன்னிங்சில் மட்டும் 50 ரன்கள்.
நோ பால்கள் ( No Balls
36 )
மொத்தம் 4 புஜ்ஜியங்கள்
( 0 )
டாஸ் வென்ற இந்திய டீம், முதலில் பேட்டிங் ஆட முடிவு செய்தது
இங்கிலாந்து மண்ணில் நடைப் பெற்ற இந்த டெஸ்டில் விளையாடிய 11 வீரர்களில் நால்வர் கர்நாடகாவை சார்ந்தவர்கள் , (அணில் கும்ப்ளே , ஜவகல் ஸ்ரீநாத், ராகுல் திராவிட், வெங்கடேஷ் பிரசாத்)
இந்திய டீம் முதல் இரண்டு விக்கெட்டுக்களை இழந்தது. ஸ்கோர் 33 - 2
கங்குலி, டெண்டுல்கர் ஜோடி சேர்ந்து இங்கிலாந்து டீம் பவுலர்களின் பந்துக்களை பந்தாடினார்கள்.எவ்வளவு முயன்றும் இவர்கள் இருவரையும் பிரிக்க முடியவில்லை.
இருவரின் பேட்டுக்களிலிருந்தும் பல் வேறு ஷாட்டுக்கள்
வந்த வண்ணம் இருந்தன.
இந்த ஜோடி இடது, வலது ஆட்டக்காரர்களை கொண்டு இருந்ததால், ஆட்டம் நேர்த்தியாக இருந்ததுடன் பார்க்கவும் கண்களுக்கு விருந்தாாக இருந்தது.
இரு வீரர்களும் தங்களது சதங்களை பூர்த்தி செய்தனர்.கங்குலியின் இரண்டாவது டெஸ்ட் மேட்ச் இது.இவர் அறிமுக டெஸ்டிலும் சதம் எடுத்தார்.
தொடர்ந்து இரண்டாவது டெஸ்டிலும் சதம் எடுத்து சாதனை படைத்தார்.
இந்த டெஸ்டின் இந்திய டீமின் கேப்டன் அறிமுகம் ஆன டெஸ்ட் அடுத்த இரண்டு , ஆக தொடர்ந்து மூன்று சதங்கள், மூன்று டெஸ்டுகளில் பதிவு செய்து, உலக சாதனை புரிந்த ஒரே டெஸ்ட் வீரரான முஹம்மது அசாருதின் ஆவார்.
கங்குலி, டெண்டுல்கர் ஜோடி சேர்ந்து 255 ரன்கள் குவித்தனர்.
இந்திய டீமின் ஸ்கோர் 288 ஐ அடைந்ததும், கங்குலி, முல்லல்லி வீசிய பந்தில் ஹுசைன் கேட்ச் பிடிக்க அவுட் ஆனார்.கங்குலி எதிர் கொண்டது 268 பந்துக்கள்.
136 ரன்கள் ( 17x 4 & 2 x 6 )அடுத்த கட்டமாக டெண்டுல்கர், தொடர்ந்து ஆடிக் கொண்டு இருந்தார்.இவர், சஞ்சய் மஞ்சுரேகருடன் சேர்ந்து சிறப்பாக ஆடி, டீமின் ஸ்கோரை அதிகப் படுத்தினார்.
இந்த இருவரும் சேர்ந்து எடுத்தது 89 ரன்கள்.டெண்டுல்கர் எல்ஹம் பந்தில் பட்டேல் பிடித்த கேட்சில் அவுட் ஆனார்.360 பந்துக்கள் எதிர் கொண்டார்.
177 ரன்கள். ( 26 x 4 )
377 - 4
அசாருதின் அவுட் 5 ரன்கள்
சஞ்சய் மஞ்சுரேகர் அவுட்
53 ரன்கள். 144 பந்துக்கள் எதிர் கொண்டார்.
( 11 x 4 & 1 x 6 )
446 - 6
கங்குலியுடன் கடந்த டெஸ்ட் மேட்சில் ( லார்ட்ஸ் டெஸ்ட் ) அறிமுக வீரர் ஆக அறிமுகம் ஆன இந்த வீரர் அந்த டெஸ்டில் எடுத்தது 95 ரன்கள்.இந்த டெஸ்டிலும் அருமையாக விளையாடினார், ராகுல் திராவிட்.இவர் தான் கடைசியாக அவுட் ஆனவர்.
விக்கெட் கீப்பர் ரஸ்ஸல் பிடித்த கேட்சில், எல்ஹம் வீசிய பந்தில்.149 பந்துக்களை ஆடிய ராகுல் திராவிட் எடுத்தது 84 ரன்கள் ( 12 x 4 )
இந்திய டீம் ஆல் அவுட் 521 ரன்கள்.
இங்கிலாந்து டீம் 7 பவுலர்களை உபயோகித்தனர்.
கிறிஸ் லெவிஸ் 3 - 89
கார்க் 1 - 124
முல்லல்லி 2 - 88
எல்ஹம் 2 - 90
பட்டேல். 1 - 101
521 ரன்கள் குவித்த இந்திய டீம், மிகுந்த நம்பிக்கையுடன் களம்
இறங்கினர், இங்கிலாந்து டீமை எளிதாக ஆல் அவுட் செய்து விடலாம் என்ற எண்ணத்துடன்.ஆனால் நடந்ததோ வேறு.இரண்டாம் நாள் ஆட்ட முடிவில் இங்கிலாந்து டீமின் ஸ்கோர் விக்கெட் இழப்பின்றி 32 ரன்கள்.
மைக் அதேற்டன் 21*, அலெக் ஸ்டெவார்ட் 10*மூன்றாம் நாள் ஆடத்தில் இந்திய டீம் பவுலர்களால், ஒரே ஒரு இங்கிலாந்து டீம் வீரரை அவுட் செய்ய முடிந்தது.
இங்கிலாந்து டீமின் முதல் விக்கெட் 100 ரன்களை கடந்த பிறகு தான், இந்திய டீமிற்கு கிட்டியது.
ஸ்ரீநாத் பந்தில், விக்கெட் கீப்பர் மோங்கியா கேட்ச் பிடிக்க அவுட் ஆனவர்,
அலெக் ஸ்டெவார்ட் 50
( 6 x 4 ) ( 115 பந்துக்கள்)
130 - 1
அடுத்து வந்த நாஸ்ஸர் ஹுசைன், சிறப்பாக ஆட்டத்தை ஆடினார்.இருவரும் சதம் எடுத்தனர், அந்த நாள் இறுதியிலும் ஆடிக் கொண்டு ஒருந்தனர்.இந்திய டீமின் முன்னணி பவுலர்களால் இந்த ஜோடியை பிரிக்க முடியவில்லை.
பவுண்டரிகள் நாலா புறமும் பறந்தன.கிட்ட தட்ட இருவரும் அன்று 200 ரன்கள் சேர்த்தனர் டீமின் எண்ணிக்கைக்கு.
107 ரன்கள் எடுத்த ஹுசைன், ரிடையர்ட் ஹர்ட் ( retired hurt ) முறையில் தொடர்ந்து ஆடவில்லை.
180 பந்துக்கள். ( 12 x 4 )
நான்காம் நாள் ஆட்டம் தொடர்ந்தது, ஒரு நாள் ஓய்வு தினத்திற்கு பிறகு.
மைக் அதேற்டன் அவுட். 160 ரன்கள். ( 376 பந்துக்கள்) ( 20 x 4 )
விக்கெட் எடுத்தது பிரசாத். கேட்ச் பிடித்தவர் மஞ்சுரேகர்.
360 - 2
மார்க் எல்ஹம் 51 ரன்கள்
120 பந்துக்கள் ( 3 x 4 ) கிரஹம் தோற்பே 45 ரன்கள் 91 பந்துக்கள் ( 5 x 4 )
கார்க் 32* , பட்டேல் 27 ரன்கள்இங்கிலாந்து டீம் ஆல் அவுட் 564 ரன்கள்.
இந்திய டீமிற்கு கங்கு.லி
மூன்று விக்கெட்டுக்களை எடுத்தார் ( 3 - 71 )
ஸ்ரீநாத் 2 - 131
பிரசாத் 2 - 124
கும்ப்ளே 1 - 98
ராஜு 1 - 76
உபரி ரன்கள் 50
இரண்டாவது இன்னிங்சை தொடர்ந்த இந்திய டீம்
211 ரன்கள் எடுத்தனர்.சச்சின் டெண்டுல்கர் 74 ரன்கள் ( 11 x 4. & 1 x 6 )
கங்குலி 48 ரன்கள் ( 8 x 4 )மோங்கியா 45 ரன்கள் ( 4 x 4 )
இங்கிலாந்து வீரர் மார்க் எல்ஹம் 4 விக்கெட்டுக்கள் வீழ்த்தினார்.
4 - 21
முல்லல்லி 2 - 36
லெவிஸ் 2 - 50
மேட்ச் டிராவில் முடிந்தது .
நாட்டிங்ஹாம்
ஜூலை 04 - 09, 1996
சௌரவ் கங்குலி ஆட்ட நாயகனாக தேர்ந்து எடுக்கப் பட்டார்.
இங்கிலாந்து டீமின் சார்பாக தொடர் நாயகனாக தேர்வு செய்யப் பட்டவர் நாஸ்ஸர் ஹுசைன்.இந்திய டீமின் தொடர் நாயகனாக தேர்வு செய்யப்பட்டவர் சௌரவ் கங்குலி.
வாசுதேவன், பெங்களூரு