Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

IND vs ENG - 3வது டெஸ்டில் இந்திய அணியில் 2 அறிமுக வீரருக்கு வாய்ப்பு.. பிளேயிங் லெவனில் மாற்றம்

மும்பை : இந்தியா இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான மூன்றாவது டெஸ்ட் போட்டி நாளை வியாழக்கிழமை ராஜ்கோட்டில் தொடங்குகிறது. 5 போட்டிகள் கொண்ட இந்த தொடரில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றியைப் பெற்றுள்ள நிலையில் இந்த போட்டி மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

இந்திய அணியில் ரோகித் சர்மா , பும்ரா, அஸ்வின் , (ஜடேஜா சந்தேகம்) ஆகியோரை தவிர மற்ற வீரர்கள் யாரும் பெரிய அளவில் டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய அனுபவம் கிடையாது. இது இந்திய அணிக்கு ஒரு புதிய தொடக்கமாக பார்க்கப்படுகிறது.

India vs England - 2 debut players might playing for india in rajkot test

ஏற்கனவே கே எல் ராகுல் உள்ளிட்ட வீரர்கள் தற்போது காயம் காரணமாக போட்டியிலிருந்து விலகி இருக்கிறார். ஏற்கனவே விராட் கோலி இல்லாத நிலையில் மோசமான ஃபார்ம் காரணமாக ஸ்ரேயாஸ் ஈர்க்கப்பட்டு இருக்கிறார். இதனால் இந்திய அணியில் பல மாற்றங்கள் நிகழப்போவது உறுதியாக இருக்கிறது. இந்த நிலையில் பிளேயிங் லெவனில் யார் இருப்பார்கள் என்பதை தற்போது பார்க்கலாம்.

தொடக்க வீரராக கேப்டன் ரோகித் சர்மா மற்றும் ஜெய்ஸ்வால் ஆகியோர் களமிறங்க உள்ளனர். ரோகித் சர்மா இந்த தொடரில் ஒரு அரைசதம் கூட அடிக்காதது பெரும் பின்னடைவை ஏற்படுத்தியிருக்கிறது. மூன்றாவது வீரராக கில் களமிறங்குகிறார். கில் சதம் அடித்த உத்வேகத்துடன் இந்த போட்டிக்கு வர உள்ளார். எனினும் தன்னுடைய பார்மை அவர் தொடர்வாரா என்பது கேள்விக்குறிதான்.

நான்காவது வீரராக இப்போது யார் விளையாட போகிறார்கள் என்ற கேள்வி எழுந்துள்ளது. ரஞ்சி கிரிக்கெட்டில் அதிரடியாக விளையாடி வரும் சர்பிராஸ்கானுக்கு இந்த இடத்தில் வாய்ப்பு வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதே போன்று ஐந்தாவது வீரராக ரஜத் பட்டிதார் களமிறங்க வாய்ப்பிருக்கிறது.

ஆறாவது வீரராக ஜடேஜா விளையாடுவார் என தெரிகிறது. அப்படி ஜடேஜாவுக்கு காயம் குணமடையவில்லை என்றால் அவருக்கு பதில் குல்தீப் களமிறங்குவார். விக்கெட் கீப்பராக கே எஸ் பரத்துக்கு பதிலாக ஐபிஎல்லில் கலக்கி வந்த தூருவ் ஜூரலுக்கு வாய்ப்பு கொடுக்கப்படும் என நம்பப்படுகிறது. இதேபோன்று இரண்டு வேகப்பந்து வீச்சாளராக பும்ரா மற்றும் முகமது சிராஜ் விளையாட இருக்கிறார்கள். இதேபோன்று இரண்டு சுழற் பந்துவீச்சாளராக அஸ்வின் மற்றும் அக்சர் பட்டேல் விளையாட உள்ளனர்.

பிளேயிங் லெவன் உத்தேசம் : 1,ரோகித் சர்மா, 2, ஜெய்ஸ்வால், 3, கில், 4, சர்பிராஸ் கான், 5, ரஜத் பட்டிதார், 6, துருவ் ஜூரல், 7, ஜடேஜா / குல்தீப் யாதவ், 8, அஸ்வின், 9, அக்சர் பட்டேல், 10, பும்ரா, 11, முகமது சிராஜ்

Story first published: Wednesday, February 14, 2024, 14:57 [IST]
Other articles published on Feb 14, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+