ரோகித் புதிய மைல்கல்.. கே.எல்.ராகுல் வரலாற்று சதம்.. முதல் நாள் முடிவில் வலுவான நிலையில் இந்திய அணி
லார்ட்ஸ்: இங்கிலாந்துக்கு எதிரான 2வது டெஸ்டின் முதல் நாள் ஆட்டத்தில் ரோகித் சர்மா மற்றும் கே.எல்.ராகுலின் அபார ஆட்டத்தால் இந்திய அணி வலுவான நிலையில் உள்ளது.
Recommended Video
இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி மழையால் சமனடைந்த நிலையில் இன்று 2வது டெஸ்ட் போட்டி தொடங்கியது.
லண்டனில் உள்ள லார்ட்ஸ் மைதானத்தில் தொடங்கிய இந்த போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி கேப்டன் ஜோ ரூட் பவுலிங்கை தேர்வு செய்தார். இப்போட்டியிலும் முதலில் சாரல் மழை பொழிந்த சூழலில் பின்னர் நின்றது.

சிறப்பான தொடக்கம்
இதனையடுத்து இந்திய அணி சார்பில் களமிறங்கிய ஓப்பனிங் வீரர்கள் ரோகித் சர்மா - கே.எல்.ராகுல் சிறப்பாக தொடக்கத்தை கொடுத்தனர். பந்தில் நல்ல ஸ்விங் இருந்த போதும் ஆட்டத்தின் முதல் பந்து முதலே இருவரும் அசால்டாக பந்தினை எதிர்கொண்டனர். இது பின் வரும் வீரர்களுக்கும் நம்பிக்கை அளித்தது. சிறப்பாக விளையாடி வந்த ரோகித் சர்மா, 145 பந்துகளை எதிர்கொண்டு 83 ரன்களை விளாசினார். இதில் 11 பவுண்டரிகளும் ஒரு சிக்ஸரும் அடங்கும். அயல்நாட்டில் நடைபெறும் டெஸ்ட் கிரிக்கெட்டில் ரோகித் சர்மாவின் அதிகபட்ச ஸ்கோர் 79 ஆக இருந்தது. இந்நிலையில் இன்று புதிய உச்சம் தொட்டுள்ளார்.
இதன் மூலம் முதல் விக்கெட்டிற்கு இந்த ஜோடி 126 ரன்களை சேர்த்தது. லார்ட்ஸ் மைதானத்தில் கடைசியாக 1952ம் ஆண்டு தான் இந்தியாவின் ஓப்பனிங் பார்ட்னர்ஷிப் 50 ரன்களை கடந்ததுள்ளது. அதன் பிறகு இன்று தான் 50 + பார்ட்னர்ஷிப் அமைந்துள்ளது.

நிதான ஆட்டம்
இதன் பின்னர் முதல் விக்கெட்டிற்கு களமிறங்கிய சட்டீஸ்வர் புஜாரா, 9 ரன்களுக்கு வெளியேறி மீண்டும் ஏமாற்றம் அளித்தார். ஆனால் மறுமுணையில் தொடர்ந்து அட்டகாசம் செய்த கே.எல்.ராகுல் நிதானமாக ரன்களை குவித்தார். இங்கிலாந்து பவுலர்கள் எவ்வளவு மேஜிக்குகளை செய்து பார்த்த போதும், அவர்களை சுலபமாக எதிர்கொண்ட கே.எல்.ராகுல் சதம் விளாசி அசத்தினார். அதில் ஒரு சிக்ஸரும் 9 பவுண்டரிகளும் அடங்கும். ராகுலின் இந்த சதம் இந்தியாவுக்கு ஒரு புதிய நம்பிக்கையை கொடுத்துள்ளது. லார்ட்ஸ் மைதானத்தில் சதமடித்த 3வது இந்திய ஓப்பனர் என்ற பெருமையை ராகுல் பெற்றுள்ளார். இதற்கு முன்னர் அங்கு 1952ம் ஆண்டு வினோ மான்கட் 184 ரன்களை விளாசியிருந்தார். அதன் பின்னர் 1990ம் ஆண்டு ரவி சாஸ்திரி 100 ரன்களை அடித்தார்.

கேப்டன் கோலி
இவருடன் ஜோடி சேர்ந்து விளையாடி கேப்டன் விராட் கோலி நல்ல பார்ட்னர்ஷிப் கொடுத்தார். முதல் சில பந்துகளை கூர்ந்து கவனித்து நிதானமாக விளையாடி வந்த கோலி, பின்னர் தனது வழக்கமான ஆட்டத்திற்கு திரும்பினார். 103 பந்துகளை சந்தித்த கோலி அரைசதம் கடப்பார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் 43 ரன்களிலேயே அவுட்டானார்.

முதல் நாள்
இதன் பின்னர் ஜோடி சேர்ந்த கே.எல்.ராகுல் - துணை கேப்டன் அஜிங்கியா ரஹானே ஜோடி நிதானமாக ரன்களை சேர்த்தனர். இறுதியில் முதல் நாள் ஆட்ட நேர முடிவில் இந்திய அணி 3 விக்கெட் இழப்புக்கு 276 ரன்களை சேர்த்து வலுவான நிலையில் உள்ளது. கே.எல்.ராகுல் 127 ரன்களுடனும், அஜிங்கியா ரகானே 1 ரன்னுடனும் களத்தில் உள்ளனர்.


Click it and Unblock the Notifications