Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஒரே போட்டியில் 2 புதிய மைல்கல்.. டெஸ்டில் புதிய அவதாரம் எடுத்த ரோகித்.. கொண்டாடும் ரசிகர்கள்!

லண்டன்: இங்கிலாந்துக்கு எதிரான 4வது டெஸ்ட் போட்டியில் ரோகித் சர்மா 2 புதிய மைல்கல்களை எட்டியுள்ளார்.

Recommended Video

Rohit scores first overseas Test Ton | IND vs ENG Oval Test 2021 | OneIndia Tamil

இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 4வது டெஸ்ட் போட்டி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இரு அணிகளும் தலா ஒரு வெற்றியுடன் சமநிலையில் உள்ளதால் யார் முன்னிலை பெறுவார் என்பதை இந்த போட்டி தீர்மானிக்கும்.

அதன்படி இந்த போட்டியில் முதலில் களமிறங்கிய இந்திய அணி 190 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அதிகபட்சமாக கேப்டன் விராட் கோலி மற்றும் ஷர்துல் தாக்கூர் அரைசதம் விளாசினர்.

முன்னிலை

முன்னிலை

இதனையடுத்து தனது 2வது இன்னிங்ஸை தொடங்கிய இங்கிலாந்து அணிக்கு பெரும் அதிர்ச்சி காத்திருந்தது. டாப் ஆர்டர் வேகமாக சரிந்ததால் 67 ரன்களுக்குள் 5 விக்கெட்கள் வீழ்ந்தது. இதன் பின்னர் வந்த ஒல்லி போப், கிறிஸ் வோக்ஸ் ஆகியோர் அரைசதம் விளாசி இங்கிலாந்து அணியின் ஸ்கோரை தூக்கி நிறுத்தினர். இதனால் அந்த அணி 291 ரன்கள் எடுத்து முன்னிலை பெற்றது.

2வது இன்னிங்ஸ்

2வது இன்னிங்ஸ்

101 ரன்கள் பின் தங்கிய இந்திய அணிக்கு மீண்டும் ஒருமுறை நம்பிக்கை அளித்துள்ளார் ரோகித் சர்மா. டி20 மற்றும் ஒருநாள் போட்டியில் விளையாடுவதற்கு தான் ரோகித் சரிபட்டு வருவார் என ரசிகர்கள் விமர்சித்து வந்த சூழலில் இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் தன்னை நிரூபித்துள்ளார். 2வது இன்னிங்ஸில் முதல் பந்து முதலே அவர் நிதானமாக விளையாடுவது ரசிகர்கள் கவர்ந்துள்ளது.

மைல்கல்

மைல்கல்

இதனால் 2வது இன்னிங்ஸில் நிச்சயம் அவர் சதமடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. ரோகித் சர்மாவின் ஃபார்ம் ஒருபுறம் மகிழ்ச்சியை கொடுத்துள்ள நிலையில், அவர் இந்த ஒரே போட்டியில் இரண்டு புதிய மைல்கல்லை எட்டியது கூடுதல் மகிழ்ச்சியை கொடுத்துள்ளது. இன்றைய ஆட்டத்தின் தொடக்கத்தில், சர்வதேச கிரிக்கெட்டில் ஓப்பனராக 11,000 ரன்களை எட்டி அசத்தினார்.

8வது இந்தியர்

8வது இந்தியர்

இதே போல இன்றைய தினமே மற்றுமொரு மைல்கல்லை எட்டியுள்ளார். அதாவது சர்வதேச கிரிக்கெட்டில் 15,000 ரன்களை கடந்துள்ளார். இந்த மைல்கல்லை எட்டும் 8வது இந்திய வீரர் ரோகித் சர்மாவும். இந்த பட்டியலில் சச்சின் முதலிடத்திலும், டிராவிட் 2வது இடத்திலும் உள்ளனர். இவர்களுக்கு அடுத்ததாக 3வது இடத்தில் கேப்டன் விராட் கோலி உள்ளார். முன்னாள் கேப்டன் தோனி 5வது இடத்தில் உள்ளார். இவர்களின் வரிசையில் ரோகித் சர்மாவும் இணைந்திருப்பதால் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

Story first published: Saturday, September 4, 2021, 20:54 [IST]
Other articles published on Sep 4, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+