Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

இதுக்காக 6 ஆண்டுகள் போயிடுச்சு... புதிய உச்சம் தொட்ட ரோகித் சர்மா..இந்தியாவுக்கு சிறப்பான தொடக்கம்!

லார்ட்ஸ்: இங்கிலாந்துக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் ரோகித் சர்மா புதிய மைல்கல்லை எட்டிப்பிடித்துள்ளார்.

Recommended Video

நான் விளையாடியதிலேயே சவாலான ஆட்டம் இதுதான் - Rohit Sharma

இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி மழையால் சமனடைந்த நிலையில் இன்று 2வது டெஸ்ட் போட்டி தொடங்கியது.

லண்டனில் உள்ள லார்ட்ஸ் மைதானத்தில் தொடங்கிய இந்த போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி கேப்டன் ஜோ ரூட் பவுலிங்கை தேர்வு செய்தார்.

சிறப்பான தொடக்கம்

சிறப்பான தொடக்கம்

இதனையடுத்து களமிறங்கிய இந்திய அணிக்கு சிறப்பான தொடக்கம் கிடைத்தது. ஓப்பனிங் ஜோடியான ரோகித் சர்மா - கே.எல்.ராகுல் ஜோடி இந்தியாவுக்கு நல்ல அடித்தளம் அமைத்துக் கொடுத்தனர். போட்டிக்கு முன்னதாக சாரல் மழை பெய்திருந்ததால், பந்தில் நல்ல ஸ்விங் இருக்கும் என்றும் பேட்டிங்கிற்கு கடினமானதாக இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அதனை பொய்யாக்கினார் ரோகித் சர்மா.

அசத்தல் ஆட்டம்

அசத்தல் ஆட்டம்

தொடக்கம் முதலே சீரான இடைவெளியில் அவர் ரன்களை அவர் உயர்த்தினார். முன்னணி பவுலர்கள் ஆண்டர்சனின் பந்துவீச்சையே அசால்டாக எதிர்கொண்டு பின் வரிசை வீரர்களுக்கு நம்பிக்கை கொடுத்தார். இதனால் வெகு சீக்கிரமாக அரை சதம் அடித்து அசத்தினார். அவர் தொடர்ந்து சதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அதற்கு முன்னதாகவே அவுட்டானார். 145 பந்துகளை எதிர்கொண்ட அவர் 83 ரன்களை விளாசினார். இதில் 11 பவுண்டரிகளும் ஒரு சிக்ஸரும் அடங்கும்.

விமர்சனங்கள்

விமர்சனங்கள்

இந்நிலையில் இந்த டெஸ்ட் போட்டியில் புதிய மைல்கல்லை அவர் எட்டியுள்ளார். ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் மட்டுமே ரோகித் சர்மா அச்சுறுத்தும் வீரராக இருக்கிறார். டெஸ்ட் போட்டிகளில் அவரின் செயல்பாடுகள் சற்று மந்தமாகவே இருந்தது. அதிலும் குறிப்பாக இந்தியாவில் மட்டும் தான் அவரால் சிறப்பாக செயல்பட முடிகிறது. அயல்நாடுகளில் அவரின் பாட்ஷா பழிக்காது என விமர்சனங்கள் இருந்தது. ஆனால் இன்று அதற்கெல்லாம் முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

புதிய மைல்கல்

புதிய மைல்கல்

அயல்நாட்டில் நடைபெறும் டெஸ்ட் கிரிக்கெட்டில் ரோகித் சர்மாவின் அதிகபட்ச ஸ்கோர் 79 ஆக இருந்தது. 2015ஆம் ஆண்டு இலங்கைக்கு எதிரான போட்டியில் அவர் இந்த ஸ்கோரினை அடித்திருந்தார். இன்று நடைபெற்ற இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்டில் 83 ரன்கள் குவித்து, அயல்நாட்டில் தனது அதிகபட்ச ஸ்கோராக இதனைப் பதிவு செய்துள்ளார்.

Story first published: Thursday, August 12, 2021, 21:50 [IST]
Other articles published on Aug 12, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+