Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

இங்கிலாந்துக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டி: இந்தியா முதலில் பேட்டிங்

லண்டன்: இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் இந்தியா முதலில் பேட்டிங் செய்கிறது.

இந்தியா - இங்கிலாந்து அணிகள் இடையிலான இரண்டாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி கார்டிப் நகரில் தொடங்கியுள்ளது. இந்திய நேரப்படி பிற்பகல் 3 மணிக்குத் தொடங்கியுள்ளது இப்போட்டி. இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரை 1-3 என்ற கணக்கில் இழந்த இந்திய அணி, ஒருநாள் தொடரை வெல்ல வேண்டிய நெருக்கடியில் உள்ளது.

India vs England 2nd ODI: England win the toss, elect to field

25ம்தேதி நடைபெற வேண்டிய முதலாவது ஒருநாள் போட்டி ஒரு பந்து கூட வீசப்படாமல் மழையால் ரத்து செய்யப்பட்டது. இந்நிலையில் இரண்டாவது ஒருநாள் போட்டி இன்று தொடங்கியுள்ளது. தொடரை வெற்றியுடன் தொடங்க வேண்டும் என்ற முனைப்பில் இரு அணிகளும் களமிறங்கியுள்ளன.

டாசில் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி கேப்டன் அலிஸ்டர் குக் தனது அணி முதலில் பவுலிங் செய்யும் என்று தெரிவித்தார். தொடர்ந்து பெய்த மழை காரணமாக மைதானம் ஈரப்பதமாக காணப்படுகிறது.

எனவே பந்து நன்கு ஸ்விங் ஆகும் என்பதாலும், பந்து எல்லைக்கோட்டை தொட கஷ்டப்படும் என்பதாலும் குக் முதலில் பவுலிங்கை தேர்வு செய்துள்ளார். இதையடுத்து இந்தியா முதலில் பேட்டிங் செய்கிறது.

கார்டிப் மைதானத்தை பொறுத்தளவில், இதுவரை நடந்த 15 போட்டிகளில் இரண்டாவது பேட்டிங் செய்ய அணி அதிகபட்சமாக 9 முறை வெற்றி பெற்றுள்ளது.

இந்திய அணி விவரம்: ஷிகர் தவான், ரோகித் ஷர்மா, சுரேஷ் ரெய்னா, விராட் கோஹ்லி, அஜிங்ய ரகானே, டோணி, ரவீந்திர ஜடேஜா, ஆர்.அஸ்வின், புவனேஸ்வர் குமார், முமகது ஷமி, மோஹித் ஷர்மா.

இங்கிலாந்து அணி விவரம்: அலிஸ்டர் குக், ஹேல்ஸ், இயான் பெல், ரூட் மோர்கன், பட்லர், ஸ்டோக்ஸ், வோக்ஸ், ஜோர்டன், டிடட் வெல், ஆண்டர்சன்.

Story first published: Wednesday, August 27, 2014, 15:01 [IST]
Other articles published on Aug 27, 2014
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+