Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

மீண்டும் சொதப்பிய ஸ்ரேயாஸ் ஐயர்! இன்னும் எத்தனை மேட்ச் தான் வாய்ப்பு தருவீங்க? கொஞ்சம் கூட சரியில்ல

விசாகப்பட்டினம்: இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் நட்சத்திர வீரர் ஸ்ரேயாஸ் ஐயர் 27 ரன்களில் டாம் ஹார்ட்லி பந்தில் ஆட்டம் இழந்தார். 5 போட்டிகள் கொண்ட இந்த டெஸ்ட் தொடரில் இங்கிலாந்து அணி ஒன்றுக்கு பூஜ்ஜியம் என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது.

இந்த நிலையில் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் ரஜத் பட்டிதார் அறிமுக வீரராக சேர்க்கப்பட்டிருக்கிறார். முதல் டெஸ்டில் இந்திய அணியின் சீனியர் வீரர்களான ரோகித் சர்மா, கில் ஸ்ரேயாஸ் ஆகியோர் சொற்ப ரன்களில் ஆட்டம் இழந்தனர்.

India vs England 2nd test - another dismal performance from shreyas iyer in test cricket

இந்த நிலையில் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் பெரிய ஸ்கோரை அடிக்க வேண்டும் என்ற நெருக்கடியில் இந்திய அணி வீரர்கள் இருந்தனர். தொடக்க வீரர் ஜெய்ஸ்வால் மட்டும் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அபாரமாக ரன்களை சேர்த்து வந்தார். ஆனால் மற்ற வீரர்கள் வந்த வேகத்தில் வெளியேறினர்

கேப்டன் ரோகித் சர்மா 14 ரன்களிலும் நட்சத்திர வீரர் கில் 34 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். கடும் நெருக்கடியில் உள்ள ஸ்ரேயாஸ் ஐயர் 2022 ஆம் ஆண்டுக்கு பிறகு ஒரு முறை கூட அரை சதம் அடிக்கவில்லை. இதனால் ஸ்ரேயாஸ் மீது கடும் நெருக்கடி இருந்தது. ஒரு நாள் மற்றும் டி20 போட்டிகளில் நன்றாக விளையாடி வரும் ஸ்ரேயாஸ், டெஸ்ட் கிரிக்கெட்டில் தொடர்ந்து சொதப்பி வருகிறார்.

இதனால் அவரை நீக்க வேண்டும் என்று ரசிகர்கள் வலியுறுத்தி வந்தனர். ஸ்ரேயாஸ் பதில் சர்பிராஸ் கானையாவது சேர்க்க வேண்டும் என்று ரசிகர்கள் குறிப்பிட்டிருந்தனர். இந்த நிலையில் கடும் நெருக்கடியில் விளையாடி ஐயர், 59 பந்துகளை எதிர் கொண்டு வெறும் மூன்று பவுண்டரிகள் மட்டுமே எடுத்து 27 ரன்கள் சேர்த்தார்.

மேலும் டாம் ஹார்ட்லியின் பந்தை எதிர்கொள்ள முடியாமல் ஆட்டம் இழந்தார். இதனால் முக்கிய கட்டத்தில் ஸ்ரேயாஸ், 27 ரன்களில் வெளியேறி இருக்கிறார். அறிமுக வீரராக களமிறங்க ரஜத் பட்டிதார், அவரைவிட அதிகமாக ரன்கள் சேர்த்து இருந்தார். ஸ்ரேயாஸ் போன்ற சீனியர் வீரர்கள் நடு வரிசையில் தொடர்ந்து சொதப்பி வருவதால் தான் இந்திய அணி பேட்டிங்கில் பெரிய அளவில் ரன்கள் சேர்க்க முடியாமல் இருக்கிறது.

Story first published: Friday, February 2, 2024, 16:00 [IST]
Other articles published on Feb 2, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+