Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

இறுதிவரை ஆதிக்கம் செலுத்திய இந்தியா..திடீர் கம்பேக் கொடுத்த இங்கிலாந்து.. 2ம் நாள் ஆட்டத்தின் முடிவு

லார்ட்ஸ்: 2வது டெஸ்ட் போட்டியின் 2வது நாள் ஆட்டத்தின் முடிவில் இந்திய அணியின் ஆதிக்கமே உள்ளது.

Recommended Video

IND vs ENG : 3 Highlights from Lord's Test, Day 2 | OneIndia Tamil

இந்தியா - இங்கிலாந்து அணிகள் மோதும் 2வது டெஸ்ட் போட்டி லார்ட்ஸ் மைதானத்தில் நேற்று தொடங்கியது. இப்போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து பவுலிங்கை தேர்வு செய்தது.

முதல் நாள் ஆட்டத்தில் வலுவாக இருந்த இந்தியா, 2வது நாளில் சற்று சொதப்பியது. இதனால் ஸ்கோரும் குறைந்தது.

முதல் நாள் முடிவு

முதல் நாள் முடிவு

இந்திய அணியின் ஓப்பனிங் வீரர்கள் ரோகித் சர்மா மற்றும் கே.எல்.ராகுல் ஜோடி நல்ல அடித்தளம் அமைத்துக்கொடுத்தனர். ரோகித் சர்மா 11 பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸருடன் 83 ரன்களை அடித்தார். மற்றொரு தொடக்க வீரரான கே.எல்.ராகுல் சதம் விளாசி அசத்தினார். இவர்கள் இருவரும் முதல் விக்கெட்டிற்கு 126 ரன்களை குவித்தனர். இதனால் முதல் நாள் ஆட்ட நேர முடிவில் இந்திய அணி 276 ரன்களை சேர்த்தனர்.

2ம் நாள் ஆட்டம்

2ம் நாள் ஆட்டம்

இந்தியாவுக்கு சாதகமாக ஆட்டம் இருந்த சூழலில் இன்று 2ம் நாள் ஆட்டம் தொடங்கியது. கே.எல்.ராகுல் மற்றும் அஜிங்கியா ரகானே நம்பிக்கையுடன் களமிறங்கினார். ஆனால் ஆட்டத்தின் முதல் 2 ஓவர்களிலேயே நம்பிக்கை தகர்ந்தது. இன்றைய போட்டியின் முதல் ஓவரின் 2வது பந்தை ஒல்லி ராபின்சன் வீச, கே.எல்.ராகுல் அதனை ட்ரைவ் ஷாட் அடிக்க முயன்று அவுட்டானார். 2வது ஓவரிலேயே அஜிங்கியா ரகானேவும் வெளியேறினார். இதனால் 285 ரன்களுக்கு 5 விக்கெட்களை இழந்து தொடக்கமே இந்தியாவுக்கு பின்னடைவு ஏற்பட்டது.

முதல் இன்னிங்ஸ் முடிவு

முதல் இன்னிங்ஸ் முடிவு

இதன் பின்னர் ஜோடி சேர்ந்த ரிஷப் பண்ட் - ஜடேஜா ஜோடி நிதானமாக ரன் குவிப்பில் ஈடுபட்டனர். இவர்கள் இருவரின் முயற்சியால் இந்திய அணி 300 ரன்களை கடந்தது. ஆனால் இந்த பார்ட்னர்ஷிப்பும் நீண்ட நேரம் நீடிக்கவில்லை. சிறப்பாக விளையாடி வந்த பண்ட் 37 ரன்களுக்கு வெளியேறினார். முகமது ஷமி டக் அவுட்டானார். இறுதியில் இந்தியாவின் ஸ்கோரை தூக்கி நிறுத்த வேண்டிய முழுப்பொறுப்பும் ஜடேஜாவின் மீது சென்றது. ஒரு புறம் விக்கெட்கள் விழ, மறுமுணையில் ஒற்றை ஆளாக போராடிய ஜடேஜா 40 ரன்கள் குவித்து கடைசி கட்டத்தில் ஸ்கோரை உயர்த்தினார். இதனால் முதல் இன்னிங்ஸில் இந்தியா 364 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

 இங்கிலாந்து

இங்கிலாந்து

இதன் பின்னர் ஆடிய இங்கிலாந்து முதலில் சற்று மிதப்பில் ஆடியது. அதன் காரணமாகவே வெகு சீக்கிரமாக விக்கெட்கள் வீழ்ந்தன. தொடக்க வீரர் டாம்னிக் சிப்ளே 11 ரன்களுக்கும், ஹசீப் ஹமீத் டக் அவுட்டும் ஆகினர். இளம் வீரர் முகமது சிராஜ் 2 விக்கெட்களை எடுத்து இந்தியாவுக்கு நல்ல தொடக்கத்தை கொடுத்தார்.

முடிவு என்ன

முடிவு என்ன

எனினும் அடுத்து வந்த அனுபவ வீரர்களான ஜோ ரூட், ரோரி பேர்ன்ஸுடன் ஜோடி சேர்ந்து இங்கிலாந்தை சரிவில் இருந்து மீட்டுக்கொண்டு வந்தனர். சிறப்பாக விளையாடிய ரோரி பேர்ன்ஸ் 49 ரன்களுக்கு வெளியேறினார். மறுமுணையில் தொடர்ந்து சிறப்பாக விளையாடி வந்த ரூட், சீரான வேகத்தில் ரன்களை உயர்த்தினார். இதனால் முதல் நாள் ஆட்ட நேர முடிவில் இங்கிலாந்து அணி 3 விக்கெட்களை இழந்து 119 ரன்களை எடுத்தது. ரூட் 48 ரன்களுடனும், பேர்ஸ்டோ 6 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.

Story first published: Saturday, August 14, 2021, 10:09 [IST]
Other articles published on Aug 14, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+